tet books

time


follow me on fb

Saturday, December 15, 2012

சில செய்திகள்... உங்களுக்காக PG TRB, Speech by Minister.

6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நியமனம், எப்போதுநடக்கும் என, தெரியாத நிலை உள்ளது.
கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில்,"டி.ஆர்.பி.,யில் இருந்து, உரிய ஆவணங்கள் வந்ததும், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஆசிரியர்களைப்போல், முதுகலை ஆசிரியர்களும், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவர்' என, தெரிவித்தனர். கடந்த, கல்வியாண்டுக்கான, காலி பணியிடங்களுக்குத் தான், தற்போது நியமனம் நடக்கிறது. 2,895 பணியிடங்களில், 2,308 பேர் நியமிக்கப்பட்டால், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள்,மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான்,அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.




குறை சொல்ல முடியாத தேர்வு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி

தயவு செய்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!உங்களது கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத படி தகுதியானதாக இருக்கட்டும் !!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு எனஅமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய முன்னிலை உரை:
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒன்றரை ஆண்டுகளுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்தார். இப்போது, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களை
நியமித்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு யாரும் விரல் நீட்டி சுட்டிக் காட்டி குறை சொல்ல முடியாதபடி நடைபெற்ற தேர்வாகும். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 பேருக்கு பணியிடங்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் நலன் காக்கும் நல்ல ஆட்சியில் அறப்பணியை மேற்கொள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அமைச்சர் சிவபதி. மாவட்ட வாரிய அமைச்சர்கள்: தகுதித் தேர்வு மூலம், தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுடைய மாவட்ட வாரியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். முதல்வரின்தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கிவரும் மாவட்டமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் சொந்த மாவட்டமுமான திருச்சியைச் சேர்ந்தவர்களும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சட்டை, பேண்ட் அணிந்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் இருக்கைகளுக்குச் சென்று அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்,முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பணிநியமன உத்தரவுகளை வழங்கினர்.
உத்தரவுகளைப் பெற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், அவர்கள்பஸ்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்தமைக்காக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆசிரியர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.



  ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நடைபெற உள்ள பட்டதாரி மற்றும் ஆரம்ப ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டைதமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் புறக்கணித்து உள்ளதோடு, திட்டமிட்டே இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இதுவரை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாட வாரியான பணியிடங்களின் எண்ணிக்கையையும், மட்டுமே வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், மொத்தப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி வகுப்புவாரியாக பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாடவாரியாகஇடஒதுக்கீட்டு பகிர்வின் படியான பணியிடங்களின் எண்ணிக்கையையும் திட்டமிட்டே வெளியிடாமல் மறைத்து வருகிறது.
எந்த ஒரு அரசு பணி நியமனத்திலும் ‘இடஒதுக்கீடு’ என்பது உயிர்நாடியானதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் மூலம் வெற்றி பெற்றவர்களில் உயர் மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுப்பிரிவு இடங்களில் எத்தனை பேர் இடம் பெறுகிறார்கள், வகுப்பு வாரியான இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், பாடவாரியாகவும், வகுப்புவாரியாகவும் தற்போது நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் மீதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிடவேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியான, வகுப்புவாரியான தகுதி மதிப்பெண்களை தனித்தனியே வழங்காமல், NCTE விதிமுறைகளிலேயே இல்லாத மறுதகுதித் தேர்வை நடத்தியதுமிகப் பெரிய சட்ட மோசடியாகும்.
அண்மையில் தான் முதுகலை ஆசிரியர் பணி நியமனப் பட்டியலின் இடஒதுக்கீட்டு குளறுபடிகளுக்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கையே தமிழக ஆசிரியர் வாரியத்தின் தலைவர் சுர்ஜித்சவுத்திரி மேற்கொண்டு வருகிறார். சமூக நீதி சட்டங்களுக்கு இந்தியத் துணைக்கண்டத்துக்கே வழிகாட்டியாக உள்ளது தமிழ்நாடு. எனவே முதல்வர் அவர்கள் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி சமூக நீதி காத்திட வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் அணிதிரண்டு இந்த சட்டவிரோத, சமூக விரோத போக்கைக் களைய களம் காண வேண்டும் என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.


செய்திகளை அளித்தவர். திரு. S.Murugavel M.sc.,B.Ed 

1 comment:

  1. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி

    தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால், தனியார் பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    தமிழகத்தில், கடந்த ஆண்டு வரை, அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அதிக பட்சம், 5,000 ஆசிரியர்கள் வரை மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பல மாதங்கள் வரை காலதாமதம் ஆனது.
    தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, முதுகலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என, அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    இதன் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களும், டி.ஆர்.பி., தேர்வின் மூலம்,3,000 முதுகலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், டிச., 24ம் தேதி, பணியில் சேர உள்ளனர். இவர்களில், 90 சதவீதத்துக்கும் மேல், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்தனர்.
    இவர்கள், 3,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய்வரை, மட்டுமே சம்பளமாக பெற்று வந்தனர். தற்போது, அரசு பணியில் சேர்ந்தவுடன், குறைந்தது, 18 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் பெறுவதால், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. இவர்கள் தற்போது பணிபுரிந்து வரும், தனியார் பள்ளிகளில் இருந்து, விலகி அரசுப்பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 20 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை, ஆசிரியர்கள் பணியிடம் காலியாகியுள்ளது. அரசுப்பணி, சம்பளம் அதிகம் ஆகிய காரணங்களால், இவர்களை, தனியார் பள்ளியிலேயே தக்க வைப்பதற்கான முயற்சிகளும் செல்லுபடியாகவில்லை.அதிலும் குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பாடம் எடுத்த, பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர்கள் பலர், கல்வியாண்டில் நடுவில், விலகி போவது,தனியார் பள்ளிக்கு பெரும் பின்னடைவையும், தேர்ச்சி விகிதம் குறையுமே என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மாணவ, மாணவியர் மத்தியில், புது ஆசிரியர் மூலம் எப்படி தேர்வை சந்திப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
    இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வை பொறுத்தவரை, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். பள்ளிகளில் தொடர்ந்துபாடம் நடத்தி வருபவர்களால், இத்தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. இதனாலேயே தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களாக உள்ளனர்.ஒட்டுமொத்தமாக அவர்கள் பணியிலிருந்து விலகுவதால், பல பள்ளிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மிக முக்கியம். அப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பாதி கல்வியாண்டில், விலகுவதால், அந்த இடத்துக்கு பொருத்தமானவர்களை உடனடியாக நியமிப்பதும் கடினம்.அதுமட்டுமின்றி, ஆசிரியருக்கும், மாணவருக்கும் இருந்த அதே தொடர்பு, மீண்டும் உருவாகவே மூன்று மாதம் ஆகிவிடும். அதற்குள் தேர்வு வந்து விடும் நிலை உள்ளது. இதனால் நடப்பாண்டில், பல பள்ளிகள் எதிர்பார்க்கும் தேர்ச்சி விகிதம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links