இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு, காலியாகும் அரசு பணியிடங்கள் - முறையான ஊழியர் நியமனம் நடக்குமா?
தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.
தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு,ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசுஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
2001 முதல் 2005 வரை அதிகரிப்பு
கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.
இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம்ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு
இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.
ஊழியர்களுக்கு பணி சுமை
அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.
அதில், "தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தது. மேலும், "ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, "நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு,மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ஓய்வுக்கு பிறகும் வேலை
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.
மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால்வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.
TET - தேர்ச்சி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு குறித்தவாக்கெடுப்பு
ReplyDeleteDays left to vote: 2
நண்பர்களே , வாக்கெடுப்பு முடிய மீதம் இரண்டு நாட்களேஉள்ளன
T - Trouble!
E - Everything! = TET
T - Trouble!
- என்பதற்கு ஏற்ப முதலில்TET தேவையா? இல்லையா? என்பதில் துவங்கிய விவாதம் தேர்வு நடந்து Result வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு Weightage கணக்கிடப்பட்டுRank List வெளியிடப்பட்டு Online Counselling நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கி பணியில் சேரும் நிலைவந்த பிறகும் ஓயவில்லை என்பதே உண்மை.
"TET Posting இல் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை " - என சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் " சமீபத்திய TET பணிநியமனங்கள் அனைத்தும் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை " என அறிவித்து இருக்கிறது.
இது குறித்து ஒரு அலசல்:
1. TET - தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் Community வாரியாக குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
2. வருங்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணிநியமனத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள தேவைஇல்லை என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
3. இதற்கிடையே அனைத்து பிரிவினரும் (All Community Candidates ) மிக கடினமாக படித்து வெற்றிபெற்று பணிநியமன ஆணை பெற்றுள்ள இந்த நேரத்தில் இது போன்ற வழக்குகளால், கிடைத்த அரசு பணிநிலைக்குமா என ஒரு சாரார் கவலைபடுகின்றனர்.
4. இது போன்ற குழப்பமான நிலையில் இறுதியாக பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்கள் தான் என பெற்றோரும் கல்வியாளர்களும் வருத்தப்படுகின்றனர்.
இது குறித்து நம் வலைத்தளத்தில் நம் வாசகர்களின் எண்ண ஓட்டத்தை அறிய நாம் ஒரு சிறிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இட ஒதுக்கீடு குறித்தும், தகுதி தேர்வு மதிப்பெண் குறைப்பது குறித்தும் நம் வலைதள இடது பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் அனைவரும் இதில் உங்கள் வாக்கினை பதிவு செய்யும்படியும், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
"ஒவ்வொரு சிறிய மழைத்துளியும் தான் பின்னாளில் கடல் ஆகிறது".
"நீங்கள் இங்கு விதைக்கப்படும் விதை பின்னாளில் விருட்சம் ஆகலாம்".
எனவே அனைவரும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும்.
Please your vote www.padasalai.net
மதுரை : ஆசிரியர் தகுதித்தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்தரவு மற்றும் மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை கோரிய வழக்கில், அரசுக்குநோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.
ReplyDeleteதிருநெல்வேலி சாந்திநகர் அனுசுயா தாக்கல் செய்த மனு: நான் பி.எஸ்.சி.,இயற்பியல், பி.எட்.,படித்துள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி,60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதரபிற்பட்டோர் , மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண்களில் சலுகை வழங்கலாம் என, தெரிவித்துள்ளது.
இவை அசாம், ஆந்திரா,ஒடிசா, டில்லியில் அமலில் உள்ளன. தமிழகத்தில், பாரதியார் பல்கலை சலுகை வழங்குகிறது.சலுகை பற்றி ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பில், குறிப்பிடவில்லை. 150 க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும் என, குறிப்பிட்டுள்ளனர்.ஜூன், 3 ல் நடந்த தகுதித் தேர்வில் 90 சதவீதம் பேர் தோல்வியடைந்தனர். மீண்டும் அக்.,14 ல்தேர்வு நடந்தது. அதில், 60 சதவீதமான90 மதிப்பெண் கிடைக்கும் என, நம்பினேன். எனக்கு 76 மதிப்பெண் கிடைத்தது.
"கீ ஆன்சர்', கேள்விகளை இணையதளத்தில் சரி பார்த்தேன். 87, 99 கேள்விகளுக்கு பதில் இல்லை. பாடத்திட்டத்திற்கு சம்பந்தமில்லாமல், 30 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தவறான மதிப்பீட்டால், மதிப்பெண் குறைந்துள்ளது.
தகுதி மதிப்பெண் 60 சதவீதம் பெற வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும். மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜரானார்.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர்தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை,3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
டிச.27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் மாநிலந் தழுவிய பேரணி
ReplyDeleteபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற டிச.27-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடைபெறும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே இன்று அவர் தெரிவித்தது: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை ரத்து செய்து, தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வவேண்டும். 2010-ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 24 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளில் நான்குகட்டமாக பணி நியமனம் அளித்தது போல, மீதமுள்ள சுமார் 8100 பிஎட் பட்டதாரிகளுக்கும் அப்போது அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அரசாணைகளை கொண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி வருகிற டிச.27-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மாநிலந் தழுவிய பேரணி புறப்படுகிறது. பேரணி முடிவில் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இப்பேரணியில் மாநிலம் முழுவதிலிமிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்
we are happy to hearing of Mr.Rathnakumar sir steps.at the same time please co-operate all BTswith Mr.Rathnakumar sir.sir has not taken as like these steps for himself only.so,integrateeach and every district BTs.one hand dont makea sound.co-operate two hands only to make a sound.please understandand co-operate.thousands of cv BTs have appointed by seniority by some BTsco-operation and also important steps taken by Mr.Rathnakumar sir.so,including appointed BTs also please give up your support with ours.at the same time dont forgot to give up our support for our life.in future TRB cannot ready appoint BTs at just take 90 marks.because of we know very much TRB consider cut-off marks with weightage also.so,choose your life in your hand
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
ReplyDeleteசமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, "டிஸ்மிஸ்' செய்வதற்கு, கல்வித் துறையும் முடிவு செய்துள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 18 ஆயிரம் பேர், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, 13ம் தேதி, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. வழக்கமாக, பணி நியமன ஆணை வழங்குவதற்கு முன், பல முறை, தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இந்த முறை நேரம் இல்லாததால், மாவட்டங்களில் நடந்த சரிபார்ப்புடன், அப்படியே, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. சரியான கல்வித் தகுதி இல்லாத பல பேர், பணி ஆணை பெற்றிருக்கலாம் என, டி.ஆர்.பி., சந்தேகிக்கிறது. அப்படி, தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வு ஆணையை, உடனடியாகரத்து செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. அதேபோல், அவர்களை, வேலையில் இருந்து,"டிஸ்மிஸ்' செய்வதற்கு, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடப்பதற்குமுன், எந்தெந்தப் பாடங்களை, வேலைக்குத் தகுதியாக ஏற்க வேண்டும்; எந்தப் பாடங்கள் தகுதியில்லை மற்றும் தமிழ்வழியில் படித்தவர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் குறித்து, தெளிவான சுற்றறிக்கையை,சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபட்டகுழுவினருக்கு, அனுப்பியிருக்க வேண்டும்.இதை, செய்யாததால், ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு அணுகுமுறையுடன், சான்றிதழ்களை சரிபார்த்துள்ளது. பி.எஸ்சி., கம்ப்யூட்டர்சயின்ஸ், பி.காம்., படித்தவர்களை எல்லாம், தேர்வில், "செலக்ட்' ஆக்கியுள்ளோம். இவர்கள், பட்டதாரிஆசிரியர் பணிக்கு, தகுதியில்லாதவர்கள். அதனால், மீண்டும் ஒரு முறை, சரிபார்க்கும்பணி நடக்கிறது.இவ்வாறு, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிக் கல்வி வட்டாரத்தினர் கூறியதாவது: டி.இ.டி., வழி நியமனம், அவசர கதியில் நடந்தது. அதனால் தான், சான்றிதழ்களை, மீண்டும் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி, இரண்டு மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதுவரை, சம்பளத்தை நிறுத்தி வைக்கலாமா எனவும், ஆலோசித்து வருகிறோம்.பணி நியமன ஆணையில்,"இந்தத் தேர்வு, தற்காலிகமானது எனவும், தகுதியற்றவர்கள் என, கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக, பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும்' எனவும் தெரிவித்துள்ளோம். எனவே, தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கண்டிப்பாக, பணியில் இருந்து உடனடியாக, "டிஸ்மிஸ்' செய்வோம். இவ்வாறு, கல்வித் துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின், தகுதியில்லாதவர்கள்எத்தனை பேர் பணியில்சேர்ந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.