tet books

time


follow me on fb

Friday, December 7, 2012

கலந்தாய்வு தேதி திடீர் அறிவிப்பு - டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு.

TRB - TET மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும்

 பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது. 

TRB - TET மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம்வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 


கலந்தாய்வு முற்பகல் 08.00 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் என்பது B.Ed முடித்துள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே... D.T.Ed முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி டிசம்பர் 13 ஆம் தேதியாக இருக்கும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் அது டிசம்பர் 11 மற்றும் 12 ஆக கூட இருக்கலாம் என்ற சூழல் உருவாகி உள்ளது ( இதற்கான காரணம் டிசம்பர் 13 ல் அனைவருக்கும் பணிநியமன ஆணைகளை வழங்க முதல்வர் முடிவெடுத்துள்ளாராம்)


பட்டதாரி ஆசிரியர்ளுக்கு அதிரடியாக கலந்தாய்வு நடத்தப்படுவதால் வெளியூரில் உள்ளவர்கள் அதிரடியாய் தங்கள் மாவட்டங்களுக்கு கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 13ல் பணி நியமன உத்தரவு
    பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது.

    முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, டி.இ.டி., தேர்வில், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரம்மாண்டமாக நடத்த, தமிழக அரசு முடிவு எடுத்தது.

    இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக, பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விழாவை நடத்த, பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

    ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழா ஏற்பாடுகள் : சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், விமரிசையாக விழா நடக்கும் எனவும், இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை துவங்கி வைப்பார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    விழா நடக்கும் இடத்தை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நேற்று பார்வையிட்டனர். இந்த இடத்தில், விழா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள், தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    பள்ளிக் கல்வித்துறையில் நடக்கும் பணி நியமனங்கள், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள், "ஆன்-லைன்" முறையில் நடந்து வருகின்றன. எனவே, 18 ஆயிரம் பேரும், இதே முறையில், பணி நியனம் செய்ய, துறை திட்டமிட்டுள்ளது.

    விழாவிற்கு முன்நாளில், கலந்தாய்வு நடத்தி, சில பேரை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்படுபவர்கள், முதல்வர் கையால், பணி நியமன உத்தரவுகளை பெறவும், துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links