இந்த வலைபூ பற்றிய தங்களின் மேலான கருத்துகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கென்று ஒரு வேலை வெட்டி இல்லாத நேரத்தில் தொடங்கப்பட்டதே இந்த வலைபூ. வேலை இல்லாத ஒருவனை இந்த சமூகம் எவ்வாறெல்லாம் பார்க்கும்? அவனின் மனநிலை எவ்வகையில் எல்லாம் இருக்கும் என்பதை எல்லாம் இந்த 6 மாதத்தில் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன் நான்.
அதன் விளைவாக நான் எடுத்த முயற்சியின் காரணமாக, TNPSC Group 4 தேர்வில் typist ஆகவும், TNTET 2012 தேர்வில் இடைநிலை ஆசிரியராகவும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
அது மட்டும் அல்லாமல் எந்த ஒரு Central Govt வேலையையும் நான் விட்டதில்லை இந்த ஏழு மாதத்தில். இவற்றின் காரணமாகதான் இந்த வலைபூ இப்படி பட்ட ஒரு நிலையை கொண்டு உங்களுக்கு காட்சி அளிக்கிறது.
எனது தேவைகளை மையப்படுத்திய ஒரு தொகுப்பாகவே இந்த வலைபூவினை நான் உருவாக்கி உள்ளேன். ஆனால் எனது தேவைகள் நான் ஒரு பணியில் அமர்த்தப்பட்டுள்ளபடியால் ( ஓர் ஆசிரியராக) எனது பார்வையும்... பயணமும் சிறு மாற்றங்களை அடைந்திருப்பதை இந்த ஒரு வாரத்தில் என்னால் உணர முடிகிறது.
எனவே கடந்த ஒன்றிரண்டு வாரங்களாக நான் தினசரி update செய்யும் எந்த செய்தியும் சரியாக update செய்ய முடியாமல் போயிருப்பதை என்னால் உணர முடிகிறது.
இருப்பினும் தினமும் குறைந்தது 500 பார்வையாளர்களையாவது இந்த வலைபூ பெற்று வருவதை நினைக்கும் பொழுது இந்த பணிகளை தொடர்ந்து செய்யவே நான் மிகவும் விரும்புகிறேன்.
இந்த வலைபூவில் என்னென்ன விடயங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? எப்படி எல்லாம் இதை மாற்றி அமைக்க நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை என் இமெயிலுக்கு jagan.nathan801@gmail.com அனுப்புங்கள் . என் முகநூல் பக்கத்திலும் எழுதலாம் https://www.facebook.com/jackn.nath.
உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு செய்திகளை இந்த வலைபூ பக்கத்தில் இடம் பெற செய்யுங்கள் உங்கள் பெயர் மற்றும் இணைய இணைப்பினையும் அனுப்புங்கள்.
தங்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க இந்த வலைபூ தன் சேவையை வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன