tet books

time


follow me on fb

Saturday, December 8, 2012

அசத்தலான வேகமும் அதில் உள்ள அபாயங்களும் - ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு பற்றிய ஒரு சிறிய அலசல்


ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இதற்கான கலந்தாய்வு டிசம்பர் 07 ஆம் தேதி அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 08 ஆம் தேதி பல ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வெளிவராத சூழலில் ஜெயா plus தொலைக்காட்சியில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மிக குறுகிய காலத்தில் இது போன்ற முடிவுகளால் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிவர்களுக்கு போதிய செய்தி சென்றடைவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேலும் Call Letter கடித வடிவில் அனுப்பப்பட்ட பின்னரே கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற வழக்கமான அரசு செயல்முறைகளுக்கு மாறாக தற்போது கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆவணத்துடன் சென்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்வது என்று பலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இப்படி அதிரடியான முடிவுகளை மேற்கொள்ளும் போது பெரிய அளவிலான ஊடக முறையில் செய்திகளை பரப்ப வேண்டும் (Large Level Of Media Broadcasting).

முழுமையான தகவலை உரியவருக்கு அளிக்க வேண்டும்.

என்பவற்றினை பின்பற்றினால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குழப்பங்களை முன்கூட்டியே சமாளிக்கலாம்.

நாளை நடக்கவிருக்கும் கலந்தாய்வில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இப்போது விடுக்கப்பட்டுள்ள சவால்.

இதனை உணர்ந்து

கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அவர்களவர்கள் மாவட்ட CEO அலுவலகங்களுக்கு தங்களின் original October TET Hallticket

இரண்டு மூன்று Passport photo

 மற்றும் சான்றிதழ்களுடன்  சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

1 comment:

  1. புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு
    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
    அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
    புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
    அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார்.
    15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதியபட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரலாம். காலியிட விவரங்களில் அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
    பணியிடங்களைத் தேர்வு செய்த பிறகு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    இடைநிலை ஆசிரியர்களுக்கு...
    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.
    ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
    இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links