tet books

time


follow me on fb

Thursday, December 27, 2012

முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 31 - பணிநியமன ஆணை பெற்றவர்கள் அனைவரும் சனவரி 2 ல் பள்ளிகளில் பணியமரலாம்.


 முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. - அதற்கான  முக்கிய குறிப்புக்கள்: 



* 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இவர்கள் சனவரி 2 ஆம் தேதியே பள்ளிகளில் சென்று பணியமரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


* கீழ்க்குறிப்பிட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளகாலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
முன்னுரிமை1) கண்பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள்
2) பெண்கள்
3) இதர நபர்கள்
* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன்கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்


பழைய செய்தி

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். 
தேர்வு செய்யப்பட்ட 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. 
அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி... S.Murugavel M.sc.,B.Ed

5 comments:

  1. திமுக ஆட்சியில் முறைகேடு இல்லாமல் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
    சென்னை : திமுக ஆட்சியில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் முறைகேடு, குளறுபடி இல்லாமல் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படி இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2001,2006ல்அதிமுக ஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில், அதாவது
    அவர்கள் பெறவேண்டிய ஊதியத்தில் ஏறத்தாழ 3ல் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே பெறும் நிலையில் நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கு எல்லாம், 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் காலமுறை ஊதியம், அதாவது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தைவிட 3 மடங்கு அதிக ஊதியம் கொடுத்து ஆசிரியர்களை மகிழச் செய்தது.
    அத்துடன் 2006க்குப் பின், தொடக்கக் கல்வித் துறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்கள் என 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் 70 இடைநிலை ஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியர் பயிற்றுநர்கள், 3002 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்,525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பா சிரியர்கள், 140 தொழில் ஆசிரியர்கள், 1686 கணினி ஆசிரியர்கள் என 27 ஆயிரத்து 739ஆசிரியர்களும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலை விரிவுரையாளர்களும் என மொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள் திமுக ஆட்சியில்.
    இவர்கள் தவிர, ஆசிரியர் அல்லாத 1140 பணியாளர்களும், கருணை அடிப்படையில் 449 பணியாளர்களும், அரசு மேல் நிலைப் பள்ளிகளில் விவசாயம் கற்பிக்க 176 விவசாயப் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டார்கள். 2006 முதல் 2010 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற 1114 மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டார்கள்.
    திமுக ஆட்சிக் காலத்தில் இத்தனை பேர் நியமிக்கப்பட்டார்களே, அப்போது ஏதாவது புகார்கள் வந்ததுண்டா? ஏதாவது முறைகேடு சொன்னதுண்டா? ஏதாவது குளறுபடிகள் நடந்ததுண்டா? ஆனால் இப்போது அதிமுக ஆட்சியில் என்ன நிலைமை? இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளைத் தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும் பெரும் குளறுபடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல் தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். சரியான கல்வித் தகுதி இல்லாதவர்களும் இறுதிப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர் என்று செய்தி வருகிறது.
    இறுதி நேரத்தில் சற்று அவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது; மற்றுமொரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக இன்னொரு செய்தி வந்துள்ளது. நாம் கேட்பதெல்லாம் சான்றிதழ்களை சரிபார்க்காமல் கூட எதற்காக அவசர அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன? அதனால் எந்த அளவிற்கு குழப்பங்கள், குளறுபடிகள்?
    விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் 36 ஆசிரியர்களுக்கு மட்டுமே நேரடியாகப் பணி நியமன ஆணையினை வழங்க, ஏனையோர்க்கு மற்றவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினாராம். 13ம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட போதிலும், வழக்கமாக பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்பு, பலமுறை அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆணைகள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை நேரம் இல்லாத காரணத்தால், சான்றிதழ்கள் சரி பா£க்கப்படும் பணிகளை நிறைவேற்றாமல் பணி நியமன ஆணைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவிட்டன.
    பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு சான்றிதழ்களைச் சரிபார்ப்பதால், அதில் தகுதி இல்லாத வர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைய தேர்வு ஆணையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற் படும். அடுத்து ஒரு செய்தி. அதாவது 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தொடர்பான விவரங்களையெல்லாம் ஆன் லைன் வழியாக ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஓர் உத்தரவு. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. 10ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார்11 லட்சம் மாணவர்கள் உள்ளனர்.
    18 மணி நேரம் மின்வெட்டு. சில பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதிகள் மற்றும் இண்டர்நெட் வசதிகள் இல்லை. இதில் எவ்வாறு ஜனவரி 4ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை ஆன் லைன் மூலமாகத் தெரிவிக்க இயலும். இந்தத் தேதியை நீடிக்க வேண்டுமென்று நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு கூட அரசுத் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
    பள்ளிக் கல்வித் துறை பாழ்பட்டால், பாதிப்புக்குள்ளாவது மாணவர்களின் எதிர்காலம் தான். இன்று வற்றிப் போகும் குளமாகவல்லவா குளறுபடிகளும், குறைபாடுகளும் நிறைந்த பள்ளிக் கல்வித் துறை காட்சியளிக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

    ReplyDelete
  2. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு
    முக்கிய குறிப்புக்கள்:
    * 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
    * கீழ்க்குறிப்பிட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளகாலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
    முன்னுரிமை1) கண்பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள்
    2) பெண்கள்
    3) இதர நபர்கள்
    * தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன்கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
    * ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
    * நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்

    ReplyDelete
  3. முதல்வரிடம் பணி நியமன ஆணை பெற்றும் கலந்தாய்வில் பெயர் இல்லை : ஆசிரியை கதறல்-Dinakaran
    01 Jan 2013 05:00,
    (1 Jan) நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் கடந்த 13ம்தேதி முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இதில் நெல்லை மாவட்டத்தில் வணிகவியல் பாட ஆசிரியர் பணியிடத்திற்கு தென்காசியை சேர்ந்த அருண் ஷோபனாவும் உத்தரவு கடிதம் பெற்றார்.இந்நிலையில், நேற்று நடந்த ஆன்லைன் கலந்தாய்வில் அவரது பெயர் பட்டியலில் இல்லை. இதற்கானஅழைப்பும் அவருக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில், சிஇஓவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் ஷோபனா கதறி அழுதார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஆசிரியை அருண் ஷோபனாவின் உறவினர்கள் சென்னை டிஆர்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அதற்கு, உடனடியாக எதுவும் செய்ய முடியாது. ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக பதிலளித்தனர். இதையடுத்து அவர் சிஇஓ அலுவலகத்தில் இருந்து கண்ணீருடன் புறப்பட்டு ஊருக்குச் சென்றார்.

    ReplyDelete
  4. முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70% பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி

    சென்னை: புதிதாக தேர்வு பெற்ற, முதுகலைஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,273 பேரில், 70.39 சதவீதம் பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமனஉத்தரவுகளை பெற்றனர்.
    போட்டித் தேர்வில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு , கடந்த மாதம் , 13 ம் தேதி , சென்னையில் நடந்த விழாவில் , தேர்வு பெற்றதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன . இதைத் தொடர்ந்து , பணி நியமன கலந்தாய்வு , 32 மாவட்டங்களிலும் , நேற்று நடந்தது .
    2,895 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்திய போதும் , 2,273 பணியிடங்கள் மட்டும் , நேற்று நிரப்பப்பட்டன . மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு , காலையிலும் ; வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு , பிற்பகலிலும் நடந்தன .
    மொத்த தேர்வர்களில் , 1,600 பேர் , அவரவர் சொந்த மாவட்டங்களில் , பணி நியமன உத்தரவுகளை பெற்றனர் . மீதமிருந்த , 673 பேர் மட்டும் , சொந்த மாவட்டங்களில் விரும்பிய இடங்கள் கிடைக்காததால் , வெளி மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர் .
    சென்னை மாவட்டத்தில் இருந்து , 50 பேர் தேர்வு பெற்றிருந்தனர் . ஆனால் , 18 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன . இதனால் , 32 பேர் , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த காலி பணியிடங்களை , தேர்வு செய்தனர் . பணி நியமன உத்தரவுகளை பெற்ற அனைவரும் , நாளை பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

    ReplyDelete
  5. நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் நீக்கம்: டி.ஆர்.பி.யிடம் முறையீடு- Dinamalar
    முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், பணி நியமன உத்தரவு பெற்ற முதுகலை ஆசிரியர்களில், பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
    பள்ளி கல்வித்துறையில், 2,895 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் முதல்வர் பங்கேற்ற விழாவில், 2,308 பேருக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
    இந்நிலையில், தகுதியற்ற பலர், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதாக வந்த தகவலை அடுத்து, பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தகுதியற்றவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கினர்.
    எத்தனை பேர், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரத்தை, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கு, முன்கூட்டியே, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம், அழைப்பு விடுக்கப்பட்டது.
    அதன்படி, அவர்கள், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பலர் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றும், கலந்தாய்வுக்கு அழைப்பு வராத தேர்வர்கள், நேற்று டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள், டி.ஆர்.பி., அலுவலர்களை சந்தித்து, முறையிட்டனர்.
    அலுவலர்கள், சரியான பதிலை அளிக்கவில்லை என்றும், எதையாவது கூறி மழுப்புகின்றனர் என்றும், தேர்வர்கள் புகார் கூறினர். தாவரவியல் பிரிவில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படாததால், அந்த பிரிவைச் சேர்ந்த தேர்வர்களும், அதிகளவில் வந்தனர்.
    அவர்கள் கூறியதாவது: தாவரவியலில், 204 இடங்கள் உள்ளன. ஒரு இடம்கூட நிரப்பவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால், நிரப்பப்படவில்லை என்றும், வழக்கு முடிந்ததும் நிரப்பப்படும் என்றும் முதலில் டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளைச் சந்தித்து, வழக்கு குறித்த விவரங்களை கேட்டு, வழக்கு எண் விவரத்தை பதிவு செய்து, இணையதளத்தில் பார்த்தபோது, வழக்கு முடிந்துவிட்ட விவரம் தெரியவந்தது.
    இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வழக்கு முடிந்துவிட்டது. ஆனால், இந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபின், இறுதிதேர்வு பட்டியலை வெளியிடலாம் என, கோர்ட் தெரிவித்துள்ளது. அதன்படி, சான்றிதழ்களை சரிபார்த்தபின், தேர்வுப் பட்டியலை வெளியிடுவோம்" என, தெரிவித்தனர்.
    கலந்தாய்வுக்கு நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் கூறியதாவது: பல லட்சம் பேருக்கு தேர்வு நடத்தி, 6,000த்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது என்பது, சாதாரண வேலை கிடையாது.
    மாவட்டங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில், ஒரு சில இடங்களில், அதிகாரிகள் சரியாக கவனிக்காததால், சில தவறுகள் ஏற்பட்டன. இந்த தவறுகளை, நாங்கள் அப்படியே அனுமதிக்கவில்லை. தகுதியானதேர்வர்களின் பட்டியலை மட்டும் தான், கல்வித்துறையிடம் ஒப்படைத்தோம். அதில் இடம்பெற்றவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.
    காரணம் இல்லாமல், எந்த ஒரு தேர்வரையும், நாங்கள் நிராகரிக்கவில்லை. தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தேர்வர்களின் பெயர், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், இணையதளத்தில் வெளியிடுவோம். அதேபோல், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்&' மதிப்பெண்கள் விவரம், பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இணையதளத்தில் விரைவில் வெளியிடுவோம்.
    தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு, தாவரவியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links