கடந்த 13 ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வாங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி அதில் இருந்த 15 விதிமுறைகள் தான்.
Terms and Condition என்ற பெயரில் பல பொருட்களை வாங்கும் போது அதில் இருக்குமே அதே போலதான் இருந்தது அந்த ஆணை. அதில் முதல் செய்தியே ‘இந்த நியமனம் நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என்பதே.
ஆசிரியர் பணி நியமனத்தில் SC,ST, மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு நினைத்தால் 5 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை மதிப்பெண்ணில் குறைத்து சலுகை வழங்கலாம் என்ற TET விதிமுறையை மையப்படுத்தி தொடர்ப்பட்ட வழக்கின்படி விசாரணை நடந்து வருகிறது.
அது மட்டும் இல்லாமல் சாதிய அடிப்படையில் பணிநியமன ஒதுக்கீது சரியாக அமல் படுத்தவில்லை என்பதும் ஒரு வழக்காக இன்று நிலுவையில் உள்ளது.
ஆசிரியர்கள் இல்லாமல் பல பள்ளிகளை இந்த மூன்று ஆண்டுகளாக இருந்த ஆசிரியர்களை வைத்து சரிகட்டி ஓட்டி வந்திருக்கிறது நம் அரசு. ஆசிரியர் தகுதித் தேர்விலாவது தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்ட TET தேர்விலும் போதுமான ஆசிரியர்கள் கிடைக்க பெற வில்லை. எனவே மீண்டும் மறுத் தேர்வாக பணம் இன்றி - இலவசமாகவே ஒரு தேர்வினை மனிதாபிமான முறையில் நடத்தினார்கள் அதில் கிடைத்ததும் பாதி வெற்றிதான்.
அதாவது பட்டதாரி ஆசிரியர்களில் 20,000 பேருக்கு பதிலாக தேர்வானது 10 ஆயிரம் தான். அது போல இடைநிலை ஆசிரியர்களும் இன்னும் தேவை என்ற அடிப்படையிலேயே தேர்வான அனைவருக்கும் பணிநியமனம் அளிக்கப்பட்டது.
இதில் இடஒதுக்கீடு என்பதை விட தகுதியான ஆசிரியர்கள் என்பதைதான் அரசு தன் முழு கவனத்தில் கொண்டு செய்திருக்கிறது. ஆயினும் 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்த SC,ST, மற்றும் மாற்றுதிறனாளிகளின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் இன்றும் குவிந்து கொண்டுதான் வருகின்றன.
நீதி மன்ற தீர்ப்பு என்ன வரபோகிறதோ! என்பது இன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ள 20 ஆயிரம் ஆசிரியர்களின் முழுமுதல் கேள்வியாக உள்ளது.
பணியில் அமர்த்தியவர்களை நீக்கி விட்டு - ஒரு முறையை கூறி நீதி மன்றம் அமல் படுத்த கூறினால் மற்ற பிற வேலைகளை துறந்து இந்த வேலையை தஞ்சம் புகுந்துள்ள பலருக்கு அது பெரிய சிக்கலாகவே அமையும்.
‘இனி வரும் காலங்களிலாவது‘ முறையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் 20 ஆயிரம் பேரின் நிஜம் கனவாக மாறாமல் தப்பிக்கும்..
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு
ReplyDeleteகடந்த மே 2012ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை.
இவர்கள் ஏற்கனவே பயின்ற ஒரு இளங்கலை பட்டத்தின் அடிப்படையில் வேறொரு ஒருஇளங்கலை பட்டத்தை முடித்து அதன் அடிப்படையில் முதுகலை பட்டத்தை முடித்தவர்கள். முதல் மற்றும் இரண்டாம் தேர்ச்சிப்பட்டியலில் இவர்களை "SELECTED" என்று குறிப்பிட்ட போதும் கடைசி தேர்ச்சி பட்டியலில் "NOT SELECTED" என தேர்விக்கப்பட்டது, இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது, "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.
இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 5 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள்ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 21.12.2012 அன்று இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் போட்டித்தேர்விற்கான விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும் உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும், 100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும் "TAMILNADU HIGHER EDUCATION COUNSEL" இரட்டை பட்டங்கள் பணிநியமத்திற்கு தகுதியுள்ளது என சான்றளித்ததற்கான சான்றுகளையும் சமர்பித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 5 ஆசிரியர்களுக்கும் 5 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர் நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இடைப்பட்ட காலத்தில் இணையவழி கலந்தாய்வு நடைபெற்றால் இவர்களை பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும். இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன் உத்தரவிட்டார்.