TET நியமன உத்தரவுகளை வழங்க தடை விதிக்க மனு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர்,தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதிமதிப்பெண்ணில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது. அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம், தளர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது, தவறானது.
எனவே, நியமன உத்தரவுகளை வழங்க, தடை விதிக்க வேண்டும். தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்"தள்ளிவைத்தது.
"நியமனங்கள் எதுவும், ரிட் மனு மீதானஇறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வினில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணிநியமனம் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில் இப்படி ஒரு வழக்கு தேவைதானா? ‘தான் வாழாவிட்டால் எவனும் வாழக்கூடாது!‘ என்ற மக்களின் மனநிலை நியாயமானதா?
அப்படி தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வேண்டும் என்பர்கள் தேர்வு அறிவிக்கப்பட்ட நாளிலேயே வழக்கு தொடர்ந்து தேர்விற்கே இடைகாலத்தடை வாங்கி இருக்க வேண்டாமா?
அனைத்தும் முடிந்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் போது இப்படிபட்ட வழக்கினை தொடுப்பவரை என்ன என்று சொல்வது?

They should not give any reservation in the TET or any kind of entrance exam.Otherwise there is no use to conduct those thing.
ReplyDeleteAt the same time they have to announce selection list according to the subject even for TET also.
ReplyDelete6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
ReplyDeleteஅடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நியமனம், எப்போதுநடக்கும் என, தெரியாத நிலை உள்ளது.
கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில்,"டி.ஆர்.பி.,யில் இருந்து, உரிய ஆவணங்கள் வந்ததும், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஆசிரியர்களைப்போல், முதுகலை ஆசிரியர்களும், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவர்' என, தெரிவித்தனர். கடந்த, கல்வியாண்டுக்கான, காலி பணியிடங்களுக்குத் தான், தற்போது நியமனம் நடக்கிறது. 2,895 பணியிடங்களில், 2,308 பேர் நியமிக்கப்பட்டால், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள்,மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான்,அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறை சொல்ல முடியாத தேர்வு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
ReplyDeleteதயவு செய்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!உங்களது கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத படி தகுதியானதாக இருக்கட்டும் !!!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு எனஅமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய முன்னிலை உரை:
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒன்றரை ஆண்டுகளுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்தார். இப்போது, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களை
நியமித்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு யாரும் விரல் நீட்டி சுட்டிக் காட்டி குறை சொல்ல முடியாதபடி நடைபெற்ற தேர்வாகும். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 பேருக்கு பணியிடங்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் நலன் காக்கும் நல்ல ஆட்சியில் அறப்பணியை மேற்கொள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அமைச்சர் சிவபதி. மாவட்ட வாரிய அமைச்சர்கள்: தகுதித் தேர்வு மூலம், தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுடைய மாவட்ட வாரியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். முதல்வரின்தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கிவரும் மாவட்டமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் சொந்த மாவட்டமுமான திருச்சியைச் சேர்ந்தவர்களும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சட்டை, பேண்ட் அணிந்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் இருக்கைகளுக்குச் சென்று அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்,முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பணிநியமன உத்தரவுகளை வழங்கினர்.
உத்தரவுகளைப் பெற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், அவர்கள்பஸ்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்தமைக்காக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆசிரியர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நடைபெற உள்ள பட்டதாரி மற்றும் ஆரம்ப ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டைதமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் புறக்கணித்து உள்ளதோடு, திட்டமிட்டே இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றம்சாற்றியுள்ளார்.
ReplyDeleteஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாட வாரியான பணியிடங்களின் எண்ணிக்கையையும், மட்டுமே வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், மொத்தப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி வகுப்புவாரியாக பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாடவாரியாகஇடஒதுக்கீட்டு பகிர்வின் படியான பணியிடங்களின் எண்ணிக்கையையும் திட்டமிட்டே வெளியிடாமல் மறைத்து வருகிறது.
எந்த ஒரு அரசு பணி நியமனத்திலும் ‘இடஒதுக்கீடு’ என்பது உயிர்நாடியானதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் மூலம் வெற்றி பெற்றவர்களில் உயர் மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுப்பிரிவு இடங்களில் எத்தனை பேர் இடம் பெறுகிறார்கள், வகுப்பு வாரியான இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், பாடவாரியாகவும், வகுப்புவாரியாகவும் தற்போது நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் மீதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிடவேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியான, வகுப்புவாரியான தகுதி மதிப்பெண்களை தனித்தனியே வழங்காமல், NCTE விதிமுறைகளிலேயே இல்லாத மறுதகுதித் தேர்வை நடத்தியதுமிகப் பெரிய சட்ட மோசடியாகும்.
அண்மையில் தான் முதுகலை ஆசிரியர் பணி நியமனப் பட்டியலின் இடஒதுக்கீட்டு குளறுபடிகளுக்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கையே தமிழக ஆசிரியர் வாரியத்தின் தலைவர் சுர்ஜித்சவுத்திரி மேற்கொண்டு வருகிறார். சமூக நீதி சட்டங்களுக்கு இந்தியத் துணைக்கண்டத்துக்கே வழிகாட்டியாக உள்ளது தமிழ்நாடு. எனவே முதல்வர் அவர்கள் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி சமூக நீதி காத்திட வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் அணிதிரண்டு இந்த சட்டவிரோத, சமூக விரோத போக்கைக் களைய களம் காண வேண்டும் என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.