tet books

time


follow me on fb

Monday, April 2, 2012

போட்டித் தேர்வாக மாறும் ஆசிரியர் தகுதித் தேர்வு


பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஒரே தேர்வுதான் நடத்தப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோதுபாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) பேசுகையில்ஆசிரியர் நியமனத்தில் பழைய முறையை பின்பற்ற வேண்டும். 52 வயதான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசியதாவது:-

ஆசிரியர்களை மாணவர்கள் கேள்வி கேட்கும் காலமாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களுக்கு தகுதி மிகவும் அவசியம். தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காகத்தான் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் 5 ஆயிரத்து 451இடைநிலை ஆசிரியர்களும், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 2 ஆயிரத்து895 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இடைநìலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை முதலில் தகுதி தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர்கள்தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இரண்டு தேர்வு கிடையாது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனம் ஒரே தேர்வு மூலம்தான் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள்தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி தேர்வில் 60சதவீத மதிப்பெண் (90 மார்க்குகள்) எடுப்பவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனினும்இந்த தகுதி தேர்வில் ஒருவர் எவ்வளவு அதிக மதிப்பெண் எடுக்கிறாரோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

ஒருவேளை தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைத்து ஆசிரியராக முடியாவிட்டால்அடுத்த ஆண்டு நடத்தப்படும் தகுதி தேர்வில் மீண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி கனியைப் பறிக்க முடியும். இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வு வரும் ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல்12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது. 


0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links