tet books

time


follow me on fb

Tuesday, July 15, 2014

இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை - சுய சான்றொப்பமே போதுமானது.


அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

ஒவ்வொரு தடவை கையொப்பம் வாங்கும்போதும் கையொப்பமிடும் அதிகாரிக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலுத்தவேண்டும். இது பொதுமக்களுக்கு சிரமத்தை தருகிறது. அதிலும் ஒரு சில அதிகாரிகள் சான்றிதழ் ஏதேனும் இல்லாவிட்டால் கையெழுத்திட மறுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் சிரமங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில் விண்ணப்பிப்பவரே தனது விண்ணப்பத்தில் தானே சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறையில் கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது. அரசின் இந்த முடிவு பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அரசின் இந்த நல்ல முடிவு குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி மாலை மலர் செய்தி...

Saturday, July 12, 2014

FLASH NEWS : TNTET/TRB : இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் வீரமணி பெருந்துறையில் இன்று(12/07/2014) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்....மேலும் முதல்வரின் அவர்களின் கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் 50 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.... மேலும் கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.... எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.... இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு மற்றும் TRB மூலம் தெர்தேடுக்கபட்டவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணியமர்த்தபடுவார்கள் என தெரிகிறது....

Sunday, June 29, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் இணையத்தில் வெளியீடப்படும் . சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு வாரங்களில் தேர்வு முடிகளும் வெளியிடப்படும் என்று பாலசுபிரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அரசு விதிகளின்படி 2,846 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விடைநகல் தேர்வு முடிவையும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.
TET, ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் ! ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Thursday, June 19, 2014

VAO ANSWER KEYS - TNPSC ஆல் வெளியீடு..

TNPSC GROUP 2 / 2A நுழைவுச் சீட்டுகள் வெளியீடு.

SSLC - உடனடி தனித்தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு .

TNPSC GROUP 4 - கலந்தாய்வு நாளை முதல் நடைபெறுகிறது.

Monday, June 16, 2014

15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?-Dinamani பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Friday, June 6, 2014

TNTET NEW GO - PAPER 2- WEIGHTAGE CALCULATOR

ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர் களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.
ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ்
பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைனில்தான் (இ-சர்டி பிகேட்) வழங்கி வருகிறது. தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு எண், பிறந்த தேதி, தேர்வெழுதிய மாதம், ஆண்டு ஆகிய விவரங் களை குறிப்பிட்டு யூஜிசி இணைய தளத்தில் இருந்து சான்றிதழ் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில், யூஜிசியைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
புதிய திட்டம்
தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் பேரும் தேர்ச்சி சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்று விடலாம்.
7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.

செய்தி உதவி - தி இந்து


other links