tet books

time


follow me on fb

Wednesday, August 29, 2012

TET தனி பாடங்கள்

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல...

பல தகுதியற்ற ஆசிரியர்களை உருவாக்கிய பின் ”ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தொழில் பாடம் ” என்றொரு பாடம் B.Ed படிப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளீடு செய்யப்பட்டு தனியாக வகுப்புகள் மூலம் இந்த பயிற்சி பயிற்சி நிறுவனங்களின் மூலம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் tnteu Vice Chancellor. திரு. ஐி. விஸ்வநாதன் அவர்கள்.

அப்படி என்ன பாடத்திட்டம்?

கொஞ்சம் கீழே உள்ள லிங்கை சொடுக்கி பாருங்கள்..

http://trb.tn.nic.in/TET2012/20032012/msg.htm

மேலே உள்ள லிங்கின் மூலம் நீங்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடதிட்டத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

இதனை பதிவிறக்கம் செய்து அதன்படி தேர்விற்கு தயாராக வேண்டிய அவசியமே இல்லை... காரணம் இதில் 1-8 வகுப்பு வரை உள்ள பாடதிட்டத்தின் தொகுப்பே கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் தகுதித் தேர்வில் பாதி வினாக்களுக்கு மேல் இந்த பாடதிட்டத்தினை கடந்த ஆசிரியர்களின் திறனை சோதிக்கும் வினாக்கள்தான் வினவபட்டன..

எனவே முதலில் இந்த பாடதிட்டத்தினை முழுவதுமாக இதுதான் என்று TRB கொடுக்க வேண்டும் என்பது தேர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்பார்பாக உள்ளது.

சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வால் கடந்த சில ஆண்டுகளாக படுத்திருந்து B.Ed , D.T.Ed மோகம் இப்போது அதிகரித்துள்ளது இதற்கு காரணம் தேர்வினை எழுதி தேர்ச்சி அடைந்து வேலைக்கு சென்று விடலாம் என்ற படிப்பவரின் விருப்பம்தான்..

ஆனால் இதுவரை 7 லட்சம் பேர் இதற்காக பல ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை பணத்தினை கல்வி நிறுவனங்களில் கொடுத்து படித்துவிட்டு காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

மேலும் 12 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவதாக மனிதவளத்துறை அறிவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும்  7 லட்சம் ஆசிரியர்கள் படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்ற வீணான வார்த்தைகளை நம்பி யாரும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தினை விட அதிகமாக கட்டணம் செலுத்தி B.Ed கல்லூரிகளிலும்... ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என அனைத்தினையும் அலசி ஆராய்ந்தவர்கள் கூறுகின்றனர்.

Sunday, August 26, 2012

TET என் குற்றமா? உன் குற்றமா? யாரை நானும் குற்றம் சொல்ல?

இந்திய வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ... போட்டித் தேர்வில் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்றால் அது கடந்த சூலை மாதம் 12 ஆம் தேதி நடந்த TNTET2012 தேர்வாகத்தான் இருக்கும்.

இதற்கு காரணம்...
1. வினாத்தாளின் கடினத்தன்மையா?
2. ஆசிரியர்களின் போதிய பயிற்சி இன்மையா? ( என்ன செய்கின்றன ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும்/ இளங்கலை கல்வியியல் பட்டயம் அளிக்கும் கல்வி நிறுவனங்களும்? )
3. வினாத்தாளின் கடினத்தன்மைக் கேற்ற போதிய நேரமின்மையா?
4. தேர்வு அறையில் எதிர்பாராத விதமாக.. வினாத்தாளை பார்த்த அதிர்ச்சியா?
5. காலையில் இட்லி சாப்பிட்டதாலா?
6. இரவில் தூங்காமல் படித்ததாலா?...
இப்படி என்னதான் காரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தாலும்... கடைசியாக வரும் ஒரே பழி...

ஆசிரியர்களுக்கு போதிய திறன் இல்லை என்பதுதான்...

பாவம் பார்த்து... மனிதாபிமானம் பார்த்து... இரக்கப்பட்டு...  என தேர்வு வாரியம் கூறும் அனைத்தும் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்களை ( இதில் நல்ல திறனுள்ள ஆசிரியர்களும் அடங்கிவிட்டனர் என்பதுதான் மனவருத்தம்) திட்டுவதாகவே தோன்றுகிறது.

எந்த தேர்வினை தரமான தேர்வு என்று தேர்வு வாரியமும் மனித வளத்துறையும் தன்னைதானே எக்காளமிட்டுக்கொள்கின்றன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!

இதுவரை சிறந்த ஆசிரியர் பட்டம் பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் அமரவைத்து இந்த வினாத்தாளை கொடுத்து எழுத சொன்னால் தெரியும்... அவர்கள் எந்தளவு சிறந்த ஆசிரியர்கள் என்று...

வினாத்தாள் கடினம் என்று ஒன்றும் இல்லை.... இதில் பாடத்தில் உள்ளவை கொஞ்சம் சிந்தித்து பதிலளிக்கும்படியாகவும்... பல  பாடபுத்தகத்தினை தாண்டிய படிக்கும் சிந்தனையை ஊக்குவிக்கும் படியாகவும் கொண்ட வினாக்களாகவுமே உள்ளன...

ஊடகங்கள் உறுமிக்கொண்டிருக்கும் ஒரு விடயம்... ஒரு சதவிகித திறமையான ஆசிரியர்கள் கூட இல்லையா? என்பது... ஆம் எந்த துறையில்தான் திறமையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... இன்றைய சூழலில்  பட்டம் பெறவேண்டும் பதிவு செய்யவேண்டும் என்றுதான் எல்லோரும் படித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர அறிவினை விருத்தி செய்துக்கொள்ள வேண்டும் அறிவினை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றல்ல...

ஒரு ஆசிரியர் என்பவர் அனைத்தையும் தம் அறிவு முதற்கொண்டு மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பவராக இருக்கவேண்டும் ஆனால், நம்மில் பலருக்கே அந்த எண்ணம் இல்லாமல் போய்விட்டது.


 இன்று தோல்வியுற்றது ஆசிரியர்கள் அல்ல மாறாக கடந்த 20 ஆண்டுகளாக பயிற்றுவித்த ஆசிரியர்கள் தான்...இந்த தேர்வு நல்ல ஆசிரியர்களை இன்று உருவாக்குமோ இல்லையோ... ஆனால் நல்ல மாணவர்களை நாளை உருவாக்கும் என்பது திண்ணம்...


MR. SRITHAR SIR'S VALUABLE COMMEND  


We can't judge one who passed TNTET is a good and capable teacher. Teacher is always learner about syllabus, students psychology, IQ, family backround, financial possition, class room situation, society polutition, method of examinations, and moreover especiously mood of student like how we learning lesson from our daily life.Teacher is not only teaching the lessons to the student but also creater of students,adviser, role modeler,guider,doctor,friend, even god also.Teaching Practice course (B.ED., and D.T.Ed.,) are Professionel course. ONE WHO FULFILLED THE PROFESSIONAL COURSE TO BE APPIOINTED IN THE CORRECT POSSITION. SO KINDLY RESTRICT THE B.Ed., AND D.T.Ed., TRAININGCENTERS AND ADMISSIONS. BY SRITHAR R B.T.Asst., GBHSS, ULUNDURPET, VILLUPURAM DIST., CELL 9994384370

Friday, August 24, 2012

TNTET 2012 RESULTS PUBLISHED

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன...


90 மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்...


மொத்தம் சுமார் 2000 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.


TNTET தேர்வில் எதிர்பார்த்த அளவிற்கு ஆசிரியர்கள் தேர்வாகாததாலும்... எதிர்பார்த்த பணியிடங்களை பூர்த்தி செய்ய இன்னும் சுமார் 15,000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாலும்... அக்டோபர் 3 ஆம் தேதி மறு தேர்வு நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக அரை மணிநேரம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது...இதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை... ஏற்கனவே 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் இதனை எழுதலாம்.. என கூறப்படுகிறது

tet2012 result, tntet2012 result, tntet


http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp

Friday, August 17, 2012

நாமும் பங்கேற்போம் இந்த வெற்றி சமூதாயத்தில்.. தன்னலம் இன்றி செயல்பட்டால் எண்ணம் போல் வாழ்வு சிறக்கும்!

ஒரு தனிமனிதனால் அனைத்தினையும் அறிந்து வைத்திருக்க முடியாது..

இவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகளும்... தனித்திறன்களும் உள்ளன..

இதனை பயன்படுத்திதான் பல TNPSC மற்றும் TET இது போன்ற பல தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மாணவர்களிடமிருந்து பணம்பார்கின்றனர்..

L.K.G முதல் பட்டம் பெறுவது வரை பணம் கொடுத்து படித்த நாம் வேலை வாங்க கூட போட்டித் தேர்வுகளுக்கு  பணம் செலுத்துவது என்பது நமது அறியாமையைதான் காட்டுகிறது.


ஒருங்கிணைப்பு என்பதும் , குழு மனப்பான்மையும் இருந்தால் நாம் இவ்வகையான போட்டித் தேர்வுகளில் சாதித்திட முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எப்படி என்கிறீர்களா? ஒரு பயிற்சி மையத்திற்கு சென்று நீங்கள் பயிற்சி பெற்றால் என்ன கற்பிப்பார்கள்? துறை வாரியாக ஆசிரியர்கள் வந்து முக்கிற கருத்துகளை போதிப்பார்கள் இல்லையா?

அந்த முக்கிய கருத்துக்கள் உங்கள் துறை சார்ந்ததாக இருந்தல் உங்களுக்கு எளிமையாக இருக்கும் ... வேறொரு துறையினருடையது என்றால் கடினம் தானே... அதுதான் விடயம்..

இங்கே நீங்கள் உங்கள் துறை மற்றும் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட துறை சார்ந்த பாடக்குறிப்புகளையும் வினாவிடைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்..

கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பங்களிப்பினை அளிக்க தொடங்கலாம்... சில வாரங்களிலேயே அருமையான புத்தகங்கள் நம்மால் தயாராகிவிடும் என்பது நிதர்சனமான உண்மை..

 இயற்பியல் துறை சார்ந்த பாடக்குறிப்பு /வினாக்களை தொகுக்க இங்கே கிளிக் செய்யவும்.

வேதியியல் துறைசார்ந்த பாடக்குறிப்புகள்/ வினாவிடைகளை தொகுக்க ...

தாவரவியல் சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க..


விலங்கியல் துறை சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...

கணிதவியல் துறைசார்ந்த படக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...

அரசியல் துறை சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...

பொருளாதாரம் மற்றும் வணிகவியல் சாரந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க..

வரலாறு துறை சார்ந்த பாடக்குறிப்புகள் மற்றும் வினாவிடைகளை தொகுக்க...

புவியில் துறை சார்ந்த வினாவிடைகள் மற்றும் பாடக்குறிப்புகளை தொகுக்க...


பொது அறிவு சார்ந்த அனைத்தினையும் தொகுக்க...        



இந்த ஒரு அருமையான எண்ணத்திற்கு சொந்தக்காரர் திரு. வெங்கட்ராமன் அவர்கள்.. https://www.facebook.com/M.VENKATESAN.MSC.MPHIL


மேலும் பல புதிய TNPSC கருத்துக்களுக்கு https://www.facebook.com/groups/TNPSC/353195458093442/?comment_id=353409934738661&notif_t=group_comment_reply


Monday, August 13, 2012

Tntet2012 exam result date

tntet2012 exam result date declared as August 17 or August 18

tet2012 exam result on August 17 or August 18

ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கபடும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அதாவது, ஆகஸ்ட் 17 அல்லது 18 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது...

ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி சதவீகித நிர்ணயம் குறித்த தகவல்கள் என்னும் வெளியிடப்படவில்லை...


Group 4 exam  result date August 14

Sunday, August 12, 2012

tnpsc group 2 answer key 2012

Group 2 தேர்வு ரத்தாகிவிட்டது... மறுதேர்வு குறித்து 10 நாளில் அறிவிக்கப்படும்...  


Tnpsc group 2 exams got over and the answer key for that will be publish today evening.
tnpsc csse 1, august 12, aug 12
இன்று ஆகஸ்ட் 12 ... தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணயத்தின் CSSE - I தேர்வுகள் மிகவும் எளிமையான வினாக்களாக வினவப்பட்டு அருமையாக இருந்தது..

இந்த நிலையில் வினாத்தாள் தேர்வு நாளுக்கு முன்னதாக வெளியானதாக அதிகாரபூர்வ செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்த நிலையில் தேர்வு ரத்தாகி மீண்டும் மறு தேர்வு வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஈரோடு . நாமக்கல் . திருவண்ணாமலை,. கடலூர் என தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும்பானவைகளில் தேர்வுதாள் வெளியாகி உள்ளதால் TNPSC மீதான அவநம்பிக்கைக்கு இது வழி வகுப்பதாக அமைந்துள்ளது..


இதனால் Answer key for this exam வெளியிடப்படாது..

மீண்டும் மறு தேர்வு குறித்த விவரங்கள் 10 நாளில் வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக இன்று Aug 13 மதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

group 2 வினாத்தாள் வெளியான செய்தி

TNPSC ANSWER KEY... CLICK HERE 

Saturday, August 11, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு... தகுதியற்ற தேர்வானது.. தேர்வானது 2000 பேர்தானாம்...

 ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிய 6 லட்சம் பேரில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் டைப்பில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றிருந்தன. வினாக்களுக்கு பதில் அளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இரண்டு தேர்வுகளும் மிகவும் கடினமாக இருந்தது. கணித தேர்வுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தேர்வு எழுதியோர் குற்றம் சாட்டினர். மேலும், தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வர்களிடம் இருந்து ஆட்சேபங்கள் கேட்கப்பட்டன. அதன் பின்னர், விடைகள் இறுதி செய்யப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில், இரண்டு விடைத்தாள்களையும் சேர்த்து சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சராசரியாக 5 சதவீத அளவுக்கு கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வர உள்ளது. அந்த வழக்கு விசாரணை மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. தேர்ச்சி அடையாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்தும் யோசனையும் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 Dhinamalar TNTET News


டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை&' என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில், வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.
டி.இ.டி., தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26 ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது, டி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு, குறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால், தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில், பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால், வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில், தகுதி மதிப்பெண்களாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால், தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.
ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்; அதை மனதில் கொண்டு, உரிய முடிவை எடுப்போம். இந்தச் சலுகை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன், உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில், வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினருக்கு, கூடுதல் சலுகை அளிப்பது குறித்தும், ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி குறைவாக உள்ளதை காரணம் காட்டி, தகுதி மதிப்பெண்களை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டும் குறைத்து முடிவெடுத்தால், அடுத்த தேர்வுக்கும், இதே தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். இதற்கு, டி.ஆர்.பி., சம்மதிக்காத பட்சத்தில், தேர்வர்கள், கோர்ட்டை நாட வேண்டிய நிலை உருவாகும்.
எனவே, நடந்து முடிந்த தேர்வு உட்பட, இனி நடத்தப்போகும் தேர்வுகளுக்கும், ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், நடந்து முடிந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒரு தேர்வை நடத்த வேண்டும். இந்த இரண்டில், ஏதாவது ஒரு முடிவை எடுக்காவிட்டால், டி.ஆர்.பி.,க்கு சிக்கல் தான். 

Friday, August 10, 2012

TN B.Ed result 2012

Tamilnadu B.Ed results for May 2012 will announce today  11/Aug/2012.

இன்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகத்தின் தேர்வு முடிவுகள் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

தேர்வு முடிவுகளை காண கீழ்காணும் லிங்கினை கிளிக் செய்யவும்.
தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது... படத்தின் கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்து பார்க்கவும்.  
link 1
link 2





ரேணுகாம்பாள் கல்லூரி - போளூர்..

தேர்ச்சி விவரங்கள்...

மொத்த தேர்ச்சி சதவீதம் – 84 சதவீதம்

மொத்தமாக – 30 பேர் தேர்ச்சி பெறவில்லை அது இல்லாமல் தேர்வினை 2 பேர் எழுதவில்லை.

மொத்தம் தேர்வு பெறாதவர்கள் – 32 பேர்

அதில் கல்வி உளவியலில் தேர்ச்சி பெற தவறியவர்கள் – 20 எண்ணிக்கை
வளர்ந்துவரும் இந்திய சமூதாயத்தில் கல்வியில் தவறியவர்கள் – 3 எண்ணிக்கை
கல்வி புதுமைகளும் மேலாண்மையும் தவறியவர்கள் – 7 எண்ணிக்கை
விருப்ப பாடம் தவறியவர்கள் – 5 எண்ணிக்கை
கணிதம் கற்பித்தல் – 1எண்ணிக்கை

தமிழ் தாள் (1) – 3 எண்ணிக்கை
தமிழ் தாள் ( 2) – 4 எண்ணிக்கை

tamilnadu B.Ed Revaluation form 2012 ,tamilnadu B.Ed retotalling form 2012 ,tamilnadu B.Ed answer paper xerox copy form 2012

http://www.tnteu.in/pdf/Reval_form.pdf 

other links