tet books

time


follow me on fb

Wednesday, October 30, 2013

நவம்பர் 18 க்கு பிறகுதான் TNTET 2013 தேர்வு முடிவுகள்!

தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வானது -  வழக்கின் முடிவை பொறுத்து அமையும் -  ஐகோர்ட்

"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, "ஆசிரியர் தகுதி தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண்ணில், 5 சதவீதம் தளர்த்தலாம்" என, கூறப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி, தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, மே மாதம், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, தகுதி மதிப்பெண்ணை தளர்த்தினால், புதிய தேர்வு தேவையில்லை.
எனவே, புதிய தகுதி தேர்வு தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, கருப்பையா, வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், தலை மை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
இறுதி விசாரணையை, நவ., 18ம் தேதிக்கு தள்ளி வைத்து, "ஆசிரியர் தேர்வு மற்றும் நியமனங்கள், இவ்வழக்கின் மீதான இறுதி முடிவைப் பொறுத்து அமையும்" என,"முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.



இதற்கிடையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனமும், 

டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதாலும் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மேல் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

  

CTET க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31-10-2013 இன்று..

Friday, October 11, 2013

PG TRB 2013 - தேர்வான ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.

SELECTION LIST (PROVISIONAL LIST) பார்க்க..

சான்றிதழ் சரிபார்ப்பு மையம் பற்றிய விவரம் பார்க்க.. 


பாட வாரியாக பார்க்க..

Bio - Chemistry
Micro Biology
phy Edu Director
 Home Science
Political Science
Commerce
Economics
Geography
 History
Zoology
 Botany
Chemistry
Maths
English
Telugu
 Physics   

1:1 என்ற விகிதத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வான ஆசிரியர்கள் பட்டியலின் படி. தனியாக வீட்டிற்கு எந்த கடிதமும் அனுப்பப்படாது.

தேர்வானவர்கள் தங்கள் சான்றிதழ்களை TRB இணைய தளத்தினில் 15-10-2013 க்குள் ஆன்லைன் மூலமாக upload செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இந்த மாதம் 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பானது குறிப்பிட்ட மையங்களில் நடைபெறும்.

பழைய நாளிதழ் செய்தி...
 
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் இணையதளத்தில் பார்க்கும் வசதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.


தேர்வு முடிவு வெளியீடு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த போட்டித் தேர்வு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 748 பேர் எழுதினர்.
இந்த நிலையில், தேர்வு முடிவு திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அந்த பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.


வழக்கமாக ஒரு தேர்வு முடிவு வெளியிடப்படும்போது தேர்வர்களின் மதிப்பெ ண்ணை அவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.


அதன்படி, யார் வேண்டுமானாலும் யாருடைய மதிப்பெண்ணையும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியி டப்பட்டன.


வரலாற்றில் முதல்முறை
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இதுவரை பலமுறை போட்டித் தேர்வுகளை நடத்தி இருக்கிறது.
ஆனால், யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களையும் வெளிப்படையாக இணை யதளத்தில் வெளியிடுவது ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் அனைவரின் மதிப்பெண் விவரங்களை, இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அறிந்துகொள்ள முடிவதால், தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்பதை ஓரளவுக்கு தாங்களே யூகித்துக்கொள்ள முடியும். 





Monday, October 7, 2013

PG TRB 2013 - Results and Final answer key published

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட PG TRB final answer key and Results publish செய்யப்பட்டுள்ளது.


TRB தேர்வில் தேர்வர்கள் எடுத்த மதிப்பெண்களை மட்டுமே தற்போது வெளியிட்டுள்ளது.

இது வழக்கத்திற்கு மாறாக தேர்வானவர்களின் பட்டியலை எதிர்பார்த்த தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளுக்கான இணைய பகுதி service not available என்று வருகிறது. முதலின் தேர்வு மதிப்பெண்களை காட்டிய இந்த இணைய பக்கம் தற்போது service not available என்று காட்டுவது  இணைய பயன்பாட்டினரிடையே பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் சற்று நேரத்தில் இந்த error சரியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்கள் தேர்வு முடிவுகளை காண எளிய வழியாக 

 

http://111.118.182.232:82/ResultPrint.aspx?RollNo=25060070


மேற்கண்ட URL ல் கடைசியாக உள்ள RollNo=உங்களின் தேர்வு எண்ணை டைப் செய்து URL bar ல் paste செய்து enter press செய்யவும்.

service unavailable என்று வந்தாலும் 5 நிமிடங்களில் அந்த பக்கம் தானாக உங்கள் மதிப்பெண்ணை காட்டும்!  எனவே அந்த tab ஐ close செய்யாமல் விட்டுவிட்டு மதிப்பெண்ணை பார்க்கவும்!

தேர்வு முடிவு ( உங்கள் மதிப்பெண்ணை காண இங்கே கிளிக் செய்யவும்!)


result link 2


இறுதி விடைகளை காண இங்கே கிளிக் செய்யவும்!


TNTET 2013 தேர்வு முடிவுகளையும் விரைவில் எதிர்பார்க்கலாம்!


இதற்கிடையில்..


அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிகமாக 2645 முதுநிலை ஆசிரியர்கள் 3900 பட்டதாரிஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.20.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Saturday, October 5, 2013

இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் வாக்காளர் பட்டியல் சேர்த்தல்- நீக்கல்- திருத்தம் நடைபெறும்!

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

இன்று தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்கான முகாம்கள் நடக்கின்றன. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அதைச் சேர்த்துக் கொள்ள இது உரிய தருணம்.

1.முதலில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதை இணையம் மூலமேகூட நீங்கள் தெரிந்து கொள்ளலாம். http://www.elections.tn.gov.in/searchid.htm என்ற இணைய முகவரிக்குச் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணைக் கொண்டோ, (அடையாள அட்டை இருந்தால்) முகவரியைக் கொண்டோ, வாக்குச் சாவடியைக் கொண்டோ தேடலாம். தமிழிலும் தேடலாம் ( என் அனுபவத்தில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துத் தேடுவதைவிட முகவரியைக் கொண்டு தேடுவது எளிதாக இருந்தது) உங்கள் பெயர் இருந்தால் அதை ஒரு பிரிண்ட் அவட் எடுத்து வைத்துக் கொண்டால் பூத் ஸ்லிப் இல்லாமலேயே அதைக் காட்டி வாக்களிக்க எளிதாக இருக்கும்.

பெயர் இல்லாவிட்டால்?
முகாமிற்கு சென்று பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். முகாம்கள் எங்கே நடக்கின்றன என்பதை உங்கள் மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி அலுவலகங்களில் கேட்டால் தெரியும். சென்னையில் எங்கள் பகுதியில் ஆட்டோக்கள் இரண்டு நாள்களாக அலறிக் கொண்டு அலைகின்றன. அல்லது நீங்கள் இணையம் மூலமாகவும் பெயரைப் பதிந்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரி: http://www.elections.tn.gov.in/eregistration/

இப்போது கோட்டை விட்டுவிட்டு அப்புறம் விசைப்பலகை வீரர்களாக இங்கே போர்க்குரல் எழுப்புவது/புலம்பவதில் அர்த்தம் இல்லை
விதைக்க வேண்டிய நாளில் வீட்டில் தூங்கிவிட்டு அறுவடை நாளில் அறுவாளை எடுத்துக் கொண்டு போவதில் பயனில்லை-பழமொழி


Thanks... https://www.facebook.com/maalannarayanan?hc_location=stream 

Tuesday, October 1, 2013

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறு தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது.இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார்.அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி,மறு தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒருபிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்புகணக்கிடப் படும்.

எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்.இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி.

அக்டோபர் முதல்வாரத்தில் TNTET 2012 தேர்வு முடிவுகள்!


தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-I,
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

அதேபோல்6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-IIஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில்இரண்டு தேர்வுக்களுக்குமான கீ ஆன்சரை’ கடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால்டி.ஆர்.பி. வெளியிட்ட கீ ஆன்சரில்’ ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும்சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும்தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும்புதிய கீ ஆன்சர் வெளியிடும்போதுதவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும்புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும்,அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது.

ஆனால்தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம்முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன்அக்டோபர் முதல்வாரத்தில்தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

other links