tet books

time


follow me on fb

Friday, May 10, 2013

TNTET cut off 60 % க்கு கீழே குறையாது... சட்டசபையில் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். 

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது: 

பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்துவருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். 

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

 எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.


பின் குறிப்பு :
 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 1,094; 
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 887; 

என்ற அறிவிப்பு  இந்த வருடம் TET நடக்குமா என்ற கேள்வியை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links