tet books

time


follow me on fb

Wednesday, January 9, 2013

நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.


நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.)பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில்
40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில்,நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்பமுடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்தசில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது

நன்றி S.Murugavel M.sc.,B.Ed

1 comment:

  1. தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்திஅரசு உத்தரவு

    நெல்லை : தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசுஏற்கெனவே உத்தரவிட்டது.

    பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
    இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன¢னுரிமை பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இமெயில் அனுப்பியுள்ளார். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஆசிரியர்கள் மக¤ழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links