tet books

time


follow me on fb

Wednesday, January 9, 2013

நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.


நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.)பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில்
40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில்,நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்பமுடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்தசில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது

நன்றி S.Murugavel M.sc.,B.Ed

2 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தியாவில் ஆந்திரபிரதேசம் (APTET), அசாம் (ATET), பீகார் (BTET), ஒடிசா (OTET), ஹிமாச்சல் பிரதேசம் (HPTET), ராஜஸ்தான் (RTET),உத்தரபிரதேசம் (UPTET) என இத்தனை மாநிலங்களில் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படியொரு இட ஒதுக்கீட்டையே மறுத்து தகுதிதேர்வும் ஆசிரியர் நியமனங்களும் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் சமீபத்தில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.குறிப்பாக எ.சதீஷ் எதிர் தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (W.P.No.31706/ 2012) மற்றும் சென்னையை சேர்ந்த ராஜீவ்காந்தி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (W.P.No. 32283/ 2012) ராஜீவ்காந்தி எதிர் கூடுதல் செயலர், பள்ளி கல்வித்துறை மற்றும் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம். மேலும் பல வழக்குகள் தகுதி தேர்வு சம்மந்தமாக விசாரணையில் உள்ளன. அந்த பொதுநல மனுவில், ஆந்திர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென கோரி இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கை கண்டித்தும் இடஒதுக்கீடு அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டு மென கலைஞர் மு. கருணாநிதி அறிக்கைவெளியிட்டார். அதேபோல திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். மேலும் இதற்காக தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என தொலைபேசியில் நம்மிடம் தெரிவித்தார். இறுதியாக, போட்டித்தேர்வுகள், தகுதி தேர்வு நடத்தும்போது ஐந்து நடைமுறைகளை கட்டாயம் பின் பற்றப்பட வேண்டும் என அழுத்தம் தருவோம். 1. தேர்வு நடத்தி முடித்தவுடன் சரியான (ஒரே) விடைகளை வெளி யிடப்பட வேண்டும். 2. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களின் அதாவதுவெற்றிப் பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் எவ்வித குளறுபடியும் இல்லாமல் இடஒதுக்கீடு அடிப்படையில் பதிவு எண், பெயர், சாதியை குறிப்பிட்டு தெளிவாக வெளியிட வேண்டும். 3. இறுதி பட்டியல் வெளியிட்டவுடன் எவ்வித மாறுதலையே மறுப்பட்டியலோ கட்டாயம் வெளியிடக்கூடாது. 4. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்கள் குறித்த விவரத்தை சாதி வாரியாக தெளிவாக வெளியிட வேண்டும். 5. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்களை எந்தெந்த சாதியினர் பணி நியமனம் செய்யப்படவில்லையோ மீண்டும் அந்த சாதியினரை கொண்டே நியமனம் செய்யப்படவேண்டும். இவைகளை செய்யவில்லை என்றால் தேர்வில் வெளிப்படையான தன்மைஇல்லை என்று அர்த்தமாகும். Thanks to நக்கீரன் செய்தி

    ReplyDelete
  2. தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்திஅரசு உத்தரவு

    நெல்லை : தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசுஏற்கெனவே உத்தரவிட்டது.

    பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
    இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன¢னுரிமை பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இமெயில் அனுப்பியுள்ளார். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஆசிரியர்கள் மக¤ழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links