tet books

time


follow me on fb

Monday, January 14, 2013

12,532 பட்டதாரி ஆசிரியர், 2,210 இ.நி. ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
 
 
நன்றி... tnkalvi.in 

7 comments:

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜனவரி 5-ல் நடந்த குறுவள மைய கலந்தாய்வு கூட்டத்தில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட், அரசின் கவனத்திற்கு சென்றது
    தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது.
    மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    இதே நாளில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, இக்கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
    இதனால், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில்பங்கேற்க முடிவு செய்து, தற்செயல் விடுப்பு எடுத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதிகாரிகள் விசாரணையில், 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தெரிந்தது.
    இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு மேற்கொள்ளப்படும்,&'&' என்றார்.
    சங்க நிர்வாகிகள் கூறுகையில்,"எங்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறைந்தது 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ReplyDelete
  2. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி: மார்ச்சில் நடராஜ் ஓய்வு
    டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், மார்ச்சில் முடிவதை அடுத்து, இந்தப் பதவியை பிடிக்க, இப்போதே பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடை@ய, கடும் போட்டி எழுந்துள்ளது.
    ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி யான நடராஜ், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.இணையதளம் வழியாக பதிவு, "ஹால் டிக்கெட்' வினியோகம், தேர்வு நடவடிக்கைகள் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை, வீடியோ மூலம் பதிவு, தேர்வு முடிந்ததும், உடனடியாக முடிவை வெளியிட்டு, கலந்தாய்வு முறை அறிமுகம், குறிப்பிட்ட தேர்வுகளை, கம்ப்யூட்டர்வழியாக நடத்துவது என, தேர்வாணைய நடவடிக்கைகள் அனைத்திலும், வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வந்தார்.இதனால், முந்தைய நிர்வாகத்தினரால் ஏற்பட்டிருந்த களங்கத்தை துடைத்து, லட்சக்கணக்கான பட்டதாரிகள் மத்தியில், மீண்டும் தேர்வாணையத்தின் மீது, நம்பகத்தன்மையை ஏற்படுத்தினார்.
    தலைவர் மற்றும் உறுப்பினர்பதவிகளில் இருப்பவர்கள், 6ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை, பதவி வகிக்க லாம்.
    அதன்படி, நடராஜுக்கு, 62 வயது முடிவடைவதால், அவருடையபதவிக் காலம், மார்ச் இரண்டாவது வாரத்துடன் முடிகிறது.இதையடுத்து, தலைவர் பதவியை பிடிக்க, ஓய்வு பெற்ற மற்றும் பணியில்உள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், இப்போதே கடும் போட்டி எழுந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன.பணியில் உள்ள அதிகாரியைக்கூட, தேர்வாணைய தலைவராக நியமிக்க, சட்டத்தில் வழிவகை உள்ளது.எனவே, பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், தேர்வாணைய பதவியை குறி வைத்து உள்ளனர். யாரைப் பிடித்தால்,காரியம் கச்சிதமாக முடியும் என, ஆளாளுக்கு, பல்வேறு வழிகளில், முயற்சியில் இறங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு உறுப்பினர்களின் பதவிக் காலம், ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், அடுத்தடுத்து முடிவுக்கு வருகின்றன. இதனால், உறுப்பினர்கள் பதவிக்கும், இப்போதே போட்டி துவங்கி உள்ளது. சம்பளமாக கணிசமான தொகை, கார் மற்றும் பல்வேறு வசதிகள், ஒரு பக்கம் இருந்தாலும், சமுதாயத்தில் மிகுந்த மரியாதைக்கு உரிய பதவி என்பதால், இந்தப் பதவிகளை பெரிதும் விரும்புகின்றனர்.
    - நமது நிருபர் -

    ReplyDelete
  3. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்
    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    பணி நியமனம் பெற்றுள்ள 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல், அவர்களின் ரேங்க் பட்டியல், தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம், கட்-ஆஃப் மதிப்பெண் போன்ற விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.உயிரியல் தவிர மீதமுள்ள பாட ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரியல் பாடத்தில் தேர்வுப் பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  4. ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரி இறுதிக்குள் இணையதளத்தில் வெளியீடு - Dinamani


    தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது.இந்த விவரங்கள் அனைத்தும் துறையின் இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்கள் தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
    அதன்படி, தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 34,871 தொடக்கப்பள்ளிகளும் (63%), 9,969 இடைநிலைப் பள்ளிகளும் (18%), 5,167 உயர்நிலைப் பள்ளிகளும் (9%), 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் (10%) உள்ளதாகஇணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பள்ளிக் கல்வித் துறைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வெளியிடுவதற்காகவும், கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காகவும் (உஙஐந - உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
    இந்த இணையதளம் மற்றும் இதற்கான சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதற்கான சர்வர் உள்ளிட்டவை எல்காட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
    பள்ளிகள், மாணவர்களின் தகவல் திரட்டும் பணி கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கியது. டிசம்பர் இறுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தன.முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்களின் விவரங்களைப் பதிவுசெய்யும் பணி முடிந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் மேலும் கூறியது:
    அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளின் விவரங்கள் மட்டும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிறகு, அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் பரிசோதனை முயற்சியாக பதிவு செய்யப்பட்டன. ஒன்றியத்தில் உள்ள 100 முதல் 140 பள்ளிகள், மாணவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் எந்தப் பிரச்னையும் எழவில்லை. இதைத்தொடர்ந்து, இப்போது மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் தகவல்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 5 முதல் 10 ஆசிரியர்களைக் கொண்டு இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    விவரங்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள்மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகள் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றன.
    தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

    ReplyDelete
  5. ஆசிரியர் நியமனத்தில் ஊழல்
    புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன், அஜய் சிங் சவுதாலா உள்ளிட்ட, 55 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சவுதாலா உள்ளிட்ட, 55 பேரும், நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
    இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்தவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், 2000ல், அரியானா முதல்வராக பதவி வகித்தபோது, மாநில கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
    இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும், ஓம் பிரகாஷ் சவுதாலா; அவரது மகனும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா; அப்போதைய, ஆரம்ப கல்வித் துறை இயக்குனர், சஞ்சீவ் குமார்; சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, வித்யாதர் மற்றும் அதிகாரிகள் உட்பட, 62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், 2008ல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    இவர்கள் மீது, லஞ்சம் வாங்கியது, மோசடி, சதித் திட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.
    வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஆறு பேர், விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்; மீதமுள்ள, 55 பேர் மீதும், விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.சிறப்பு கோர்ட் நீதிபதி, வினோத் குமார், 308 பக்கங்களைக் கொண்ட, தீர்ப்பை வாசித்தார்.
    தீர்ப்பு விவரம்:
    சவுதாலா, முதல்வராக பதவி வகித்தபோது நியமிக்கப்பட்ட, 3,206 ஆசிரியர் பணியிடங்களும், சட்ட விரோதமாக நடந்துள்ளது. இந்த ஒட்டு மொத்த ஊழலுக்கும், அப்போதைய முதல்வரசவுதாலா தான், காரணமாக இருந்துள்ளார். அவரது உத்தரவுப்படி தான், இந்த ஊழல் நடந்துள்ளது.எனவே, இந்த வழக்கின் பிரதான குற்றவாளி, ஓம்பிரகாஷ் சவுதாலா தான். இந்த ஊழல், தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்குமே, இந்த ஊழலில் தொடர்புள்ளது. இந்த ஊழல் தொடர்பாக, முதலில் புகார் அளித்தவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சஞ்சீவ் குமார். சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ஊழலில், இவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், இவரும் குற்றவாளியாகிறார்.எனவே, குற்றவாளிகள், 55 பேரையும், உடனடியாக கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்த வாதம், இன்றும், 19 மற்றும் 21ம் தேதிகளிலும் நடக்கும். தண்டனை விவரம், 22ம் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு நீதிபதி, தன் தீர்ப்பில் தெரிவித்தார்.கோர்ட் உத்தரவையடுத்து, ஓம்பிரகாஷ் சவுதாலா, அவர் மகன் அஜய் சிங் சவுதாலா உள்ளிட்ட, 55 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர்.நேற்று தீர்ப்பு வெளியானதை அடுத்து, கோர்ட் வளாகத்தில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றவாளிகள், கோர்ட் ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர, மற்ற யாரும் கோர்ட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை." ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகளின்போது, ஏற்கனவே, மது கோடா போன்ற முன்னாள் முதல்வர்கள் சிலர், சிறைவாசம் அனுபவித்துள்ளனர். ஆனாலும், ஊழல் வழக்கு ஒன்றில், தீர்ப்புக்கு பின் சிறைக்கு செல்லும், முதல் முன்னாள் முதல்வர்,சவுதாலா தான்' என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.தேர்தலில் போட்டியிட முடியாதுஊழல் வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றால், ஆறு ஆண்டுகளுக்கு, எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஓம்பிரகாஷ் சவுதாலாவின் அரசியல் வாரிசான, அஜய் சவுதாலாவும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஓம்பிரகாஷ் சவுதாலா, அரியானாவில் செல்வாக்கு மிக்க தலைவர். தற்போது, இந்த வழக்கில் சிக்கியுள்ளதால், அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மேல் கோர்ட்டுகளில், முறையீடு செய்ய, அவருக்கு வாய்ப்புள்ளது

    ReplyDelete
  6. You see today trb release pg rank list
    Teachers Recruitment Board
    College Road, Chennai-600006
    Direct Recruitment of Post of Post Graduate Assistants /Physical Education Director Grade- I - 2011 - 12
    REVISED PROVISIONAL SELECTION LIST
    As per the Notification No.3/2012 published on 28.02.2012, the Written Competitive Examination for the Direct Recruitment Post of Post Graduate Assistants and Physical Education Director Grade- IPosts was held on 27.05.2012 and provisional selection list of 2308 candidates was released on 10.12.2012. Now revised and additional provisional selection list including backlog and not joined vacancies of 2010-2011 for the following departments are released.
    S.NO
    DEPARTMENTS
    01.
    Directorate of School Education
    02.
    Corporation of Chennai
    03.
    Corporation of Coimbatore
    04.
    Adidravida Welfare Department
    05.
    Backward Class and MostBackward Class Department
    Further communication regarding postings and placements will be issued by the concerned departments.
    The Tamil Medium reservation for History, Economics and Commerce iskept vacant for want of verification of records.
    Results for Indian Culture, Home Science, Political Science, Botany and minority languages will be released shortly.
    Cut off marks and the date of birth for selection is also given for the candidates’ reference. (If two candidates have scored the same mark, while doing the selection, thesenior in the date of birth is considered).
    Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors thatmay have crept in. Incorrect list would not confer any right of enforcement.
    Dated: 18 - 01 -2013
    Chairman
    Next

    ReplyDelete
  7. கட்-ஆஃப் மதிப்பெண், பிறந்த தேதி விவரங்களுடன் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்: 2,900 பேர் அடங்கிய புதிய பட்டியல் வெளியீடு-Dinamani

    கட்-ஆஃப் மதிப்பெண், பிறந்த தேதி விவரங்களுடன் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,900 பேர் அடங்கிய திருத்தப்பட்ட புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது.
    இந்தப் பட்டியலில் ஏற்கெனவே தேர்வுபெற்ற 2,308 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுடன், 2010-11 ஆம் ஆண்டு ஆண்டுக்கான 600 பின்னடைவுப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் விதமாக பாடவாரியாக கட்-ஆஃப் மதிப்பெண், இன சுழற்சி முறை, பிறந்த தேதி ஆகிய விவரங்களும் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவரங்களை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம். முன்னதாக, அந்தந்தத் தேர்வர்கள் மட்டுமே விவரங்களைப் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியலைப் பார்க்கலாம்.

    நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தாவரவியல் ஆசிரியர்கள் பட்டியல் எப்போது?: கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் கூடிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியலை வெளியிடும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தாவரவியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெறும்.அடுத்த 2 வாரங்களுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாவரவியல் பாடத்தோடு இந்திய கலாசாரம், ஹோம் சயின்ஸ், பொலிட்டிகல் சயின்ஸ், சிறுபான்மை மொழிகள் பாடங்களுக்கான முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ரேங்க் பட்டியல் வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படும் என்பதால் இவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிகிறது.

    வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ் வழி முன்னுரிமை கோரியுள்ளோருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திய பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
    2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு மே 27-ஆம் தேதி நடைபெற்றது. நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்த பிறகு டிசம்பர் 10-ஆம் தேதி 2,308 பேர் அடங்கிய தாற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இப்போது பின்னடைவுப் பணியிடங்கள் உள்பட 2,900 பேர் அடங்கிய இறுதிப் பட்டியல் முழு விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத் துறைகளின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் இந்தப் பின்னடைவு இடங்கள் ஏற்பட்டிருந்தன.பின்னடைவுப் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறைகளே வெளியிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links