tet books

time


follow me on fb

Tuesday, December 11, 2012

PG TRB SELECTION LIST PUBLISHED - அவர்களும் 13 ஆம் தேதி CM விழாவில் கலந்து கொள்வார்கள்!

வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ள  CM விழாவில் PG TRB ல் தேர்வானவர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. துரிதகதியில் இன்று இரவு இவர்களுக்கான selection list வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிய பின்னர் இவர்களுக்கான கலந்தாய்வு பிறகு நடத்தப்படுமா? அல்லது 12 ஆம் தேதி இவர்களுக்கான கலந்தாய்வு அதிரடியாக நடத்தப்படுமா என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
ஆனால் 13 ஆம் தேதி விழாவில் இவர்களையும் இணைத்து 20000 க்கும் அதிகமான ஆசிரியர்களை ஒரே நேரத்தில் நியமனம் செய்து பெருமை கொள்ள போகிறது தமிழக அரசு

கீழே கொடுக்கப்பட்டுள்ள selection list ல் Botany பிரிவிற்கு மட்டும் தேர்வு முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இடைகால தடை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், "ஹால் டிக்கெட்'டுடன், சென்னைக்கு வரும் வகையில், தயாராக புறப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை, இன்று சந்திக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 12.12.12 காலை 8.00 மணிக்குள் சென்று மற்ற தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.        தேர்வு பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் அதன் நகல், 2 புகைப்பட நகலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை புதன்கிழமை காலை 10 மணிக்கு அணுக வேண்டும். அவ்வாறு வரும்போதே அவர்கள் சென்னைக்குப் புறப்படும் வகையில் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.  .

4 comments:

  1. TRB PG RESULT - முதுகலை பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியல் (தாவரவியல் தவிர) டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 12.12.12 காலை 8.00 மணிக்குள் சென்று மற்ற தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

    ReplyDelete
  2. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதிப் பட்டியல் வெளியீடு-Dinamani

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வுப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பணி இடங்களுக்குத் தேர்வான 2308 ஆசிரியர்களின் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பட்டியல் விவரங்களை www.trb.nic.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நாளையே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று சந்திக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  3. 2,308 முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : சென்னையில் இன்று ஆஜராக உத்தரவு
    ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது.
    பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை சந்தித்து, சென்னைக்கு புறப்பட்டு வர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, மே, 27ல், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதனை, 1.5 லட்சம் பேர் எழுதினர்.சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, இறுதி பட்டியல் தயாரான நேரத்தில், தமிழ்வழியில் படித்தவர்கள் பிரிவில், போதிய தேர்வாளர்கள் இல்லாதது, தாவரவியல் பாடத்திற்கு, இறுதி பட்டியலை வெளியிட, கோர்ட் தடை என, பல்வேறு சிக்கல்களால், இறுதி பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், நாளை சென்னையில் நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் விழாவில், முதுகலை ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இறுதி தேர்வு பட்டியலை வெளியிட முடியாது என, தமிழக அரசிடம், டி.ஆர்.பி., தெரிவித்தது.
    எனினும், அரசு தரப்பு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிந்தவரை, பெரும்பாலானவர்களுக்கு, இறுதி பட்டியலை வெளியிடுமாறு, டி.ஆர்.பி.,க்கு உத்தரவிடப்பட்டது.
    அதைத் தொடர்ந்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய, டி.ஆர்.பி., நேற்றிரவு, 2,308 பேருக்கு மட்டும், இறுதி பட்டியலை, இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) வெளியிட்டது. பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், "ஹால் டிக்கெட்'டுடன், சென்னைக்கு வரும் வகையில், தயாராக புறப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை, இன்று சந்திக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ReplyDelete
  4. தேர்வு பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் அதன் நகல், 2 புகைப்பட நகலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை புதன்கிழமை காலை 10 மணிக்கு அணுக வேண்டும். அவ்வாறு வரும்போதே அவர்கள் சென்னைக்குப் புறப்படும் வகையில் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links