tet books

time


follow me on fb

Saturday, April 27, 2013

வகுப்பு வாரி அடிப்படையில்தேர்ச்சி மதிப்பெண்.... ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை.

   ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆசிரியர் தகுத்தேர்வு என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு. ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைபேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்.



அ.சவுந்தரராசன் (மார்க்சிஸ்ட்): வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக உள்ளது. அதே போன்று தமிழகத்திலும் நிர்ணயிக்க வேண்டும். தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும் அதிகமாக ஒருவர் பெற்றால் அவரை பொதுப்பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை. அவரை இட ஒதுக்கீட்டிற்குள் வைக்காமல் பொதுப் பிரிவுக்கு கொண்டு சென்றால், இட ஒதுக்கீட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஒன்றிரண்டு இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.வங்கி போன்ற தேர்வுகளில் ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் ஒதுக்கீட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். உயர் கல்வித் துறை

அமைச்சர் பி.பழனியப்பன்: இந்தப்பிரச்னை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்றார்

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links