tet books

time


follow me on fb

Wednesday, August 29, 2012

TET தனி பாடங்கள்

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல...

பல தகுதியற்ற ஆசிரியர்களை உருவாக்கிய பின் ”ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தொழில் பாடம் ” என்றொரு பாடம் B.Ed படிப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளீடு செய்யப்பட்டு தனியாக வகுப்புகள் மூலம் இந்த பயிற்சி பயிற்சி நிறுவனங்களின் மூலம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் tnteu Vice Chancellor. திரு. ஐி. விஸ்வநாதன் அவர்கள்.

அப்படி என்ன பாடத்திட்டம்?

கொஞ்சம் கீழே உள்ள லிங்கை சொடுக்கி பாருங்கள்..

http://trb.tn.nic.in/TET2012/20032012/msg.htm

மேலே உள்ள லிங்கின் மூலம் நீங்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடதிட்டத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

இதனை பதிவிறக்கம் செய்து அதன்படி தேர்விற்கு தயாராக வேண்டிய அவசியமே இல்லை... காரணம் இதில் 1-8 வகுப்பு வரை உள்ள பாடதிட்டத்தின் தொகுப்பே கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் தகுதித் தேர்வில் பாதி வினாக்களுக்கு மேல் இந்த பாடதிட்டத்தினை கடந்த ஆசிரியர்களின் திறனை சோதிக்கும் வினாக்கள்தான் வினவபட்டன..

எனவே முதலில் இந்த பாடதிட்டத்தினை முழுவதுமாக இதுதான் என்று TRB கொடுக்க வேண்டும் என்பது தேர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்பார்பாக உள்ளது.

சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வால் கடந்த சில ஆண்டுகளாக படுத்திருந்து B.Ed , D.T.Ed மோகம் இப்போது அதிகரித்துள்ளது இதற்கு காரணம் தேர்வினை எழுதி தேர்ச்சி அடைந்து வேலைக்கு சென்று விடலாம் என்ற படிப்பவரின் விருப்பம்தான்..

ஆனால் இதுவரை 7 லட்சம் பேர் இதற்காக பல ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை பணத்தினை கல்வி நிறுவனங்களில் கொடுத்து படித்துவிட்டு காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

மேலும் 12 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவதாக மனிதவளத்துறை அறிவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும்  7 லட்சம் ஆசிரியர்கள் படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்ற வீணான வார்த்தைகளை நம்பி யாரும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தினை விட அதிகமாக கட்டணம் செலுத்தி B.Ed கல்லூரிகளிலும்... ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என அனைத்தினையும் அலசி ஆராய்ந்தவர்கள் கூறுகின்றனர்.

3 comments:

  1. நண்பரே நான் திருப்பூர் மாவட்டம் .உங்கள் பதிவுகள் நேரடியாக பதிவிறக்கம் செயும்படி இருந்தால் நன்றாக இருக்கும் . மற்றபடி சமுதாயத்திற்கு நல்ல காரியம் செய்கிறிர்கள்.

    ReplyDelete
  2. இந்த தளத்தில் உள்ள மின்னியல் புத்தகங்கள் சற்று பெரிய நினைவகம் கொண்டவை எனவே இவற்றை நேரடியாக அளிப்பதில் சிக்கல்கள் உள்ளன... விரைவில் அதற்கான தீர்வுகள் செய்யப்படும்.

    ReplyDelete
  3. மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கிறது.நன்றி.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links