tet books

time


follow me on fb

Tuesday, June 19, 2012

இடைக்காலத்தடை நீக்கம்... TET நடக்கும்.


இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று  18 சூன் அன்று நீக்கியுள்ளது.        வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

 டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர் குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.

  ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் சூன் 18 முதல் துவங்கியது.

மேலும் விவரங்களை காண கீழே சொடுக்கவும்.... 


 



பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.



டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர் குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. காலையில், முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியருக்கானது); பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வும் (பட்டதாரி ஆசிரியருக்கானது) நடக்கிறது. தேர்வர்களுக்கு, 18ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்&' அனுப்பி வைக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


விண்ணப்பித்த தேர்வர்களில் பலர், மொழிப்பாடம் எது என்பதை குறிப்பிடவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய மொழிப் பாடங்கள் உள்ளன. இதில், எதையுமே குறிப்பிடாத தேர்வர்கள், தேர்வு அறைக்குச் சென்றதும், தங்களது மொழிப்பாடத்தை தேர்வு செய்து, அதைப் பற்றி, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (விடைத்தாள்) உள்ள விவரங்களை தவறில்லாமல், சரியாகக் குறிப்பிட்டால் போதும்.

இதற்கு வசதியாக, ஒரே கேள்வித்தாளில், ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்ட கேள்விகள் இருக்கும். இதில், தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிக்கு தகுந்தபடி, சம்பந்தப்பட்ட மொழி கேள்வித்தாளைப் பார்த்து, விடை அளிக்கலாம். 6.5 லட்சம் பேர், டி.இ.டி., தேர்வை எழுதுவர். ஆங்கில மொழிப் பாடங்களை தேர்வு செய்த தேர்வர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இருக்கும் என்று டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.


 ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.
அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக, 100, 200 மையங்களில் தான் தேர்வுகள் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக, 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர்; ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3 லட்சத்து, 4 ஆயிரத்து, 248 பேரும்; இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 836 பேர் என, மொத்தம், 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 84 பேர் எழுதுகின்றனர். ஹால் டிக்கெட் தேர்வர்களுக்கு, நேற்று முதல் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது.
முதலில், தென் மாவட்டங்களுக்கும், கடைசியாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்படும். 22ம் தேதிக்குள், அனைவருக்கும், ஹால் டிக்கெட் அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹால் டிக்கெட் பின்புறம், விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை குறிப்பிடாமல் இருந்தால், தேர்வு அறையில் தேர்வு செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் தாள் தேர்வில், விருப்பப் பாடத்தை மாற்றி எழுதியிருந்தால், விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகள் நடத்தும் அனைத்து தேர்வுகளும், பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேறு வழியின்றி, வியாழக்கிழமை நடத்துகிறோம். ஆகஸ்டில் நடத்தினால், மேலும் கால தாமதம் ஏற்படும்&' என்றனர்.
டி.இ.டி., தேர்வுக்கு, "கீ-ஆன்சர்&' வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் ஆட்சேபங்களைப் பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links