மிக மிக நுட்பமான முறையில் வினவப்படும் TNTET வினாத்தாள்கள் முழுமையாக ஒரு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் கவனிக்கக்கூடிய ஒரு விடயம் என்ன வென்றால்...
கல்வி உளவியலுக்கு DTEd, மற்றும் B.Ed கல்வி உளவியல் புத்தகங்களை படித்திருந்தாலே போதும்... (இருந்தாலும் அதில் 30 க்கு 30 ஐ எவராலும் எடுக்க முடியாது என்பது வேறு விடயம்.)
தமிழ் பகுதிக்கு கண்டிப்பாக பாட புத்தகங்களை படித்தாக வேண்டும்.
ஆங்கிலத்திற்கு ஆங்கில அறிவு சற்று இருந்தாலே போதும்.
கணிதத்திற்கு கணித புத்தகங்களில் உள்ள பெரிய பெரிய கணக்குகளை இவர்கள் வினவுவதில்லை மாறாக railway, postal போன்றவற்றில் வினவப்படும் நுட்பமான mathematical Aptitude சார்ந்த வினாக்களே பெரும்பாலும் இடம் பெறுகின்றன.
அறிவியலுக்கு என்று தனியாக பாடபுத்தகங்களை நம்பி புரிந்து படித்தாக வேண்டியது அவசியம்.
சமூக அறிவியலில் வினவப்படும் வினாக்கள் அனைத்தும் எளிமையாகவும் ... பார்த்தவுடன் விடையளிக்கும் விதமாகவும் வினவப்பட்டுள்ளன.
..............
மேற்சொன்ன அனைத்தும் இதுவரை TNTET தேர்வில் வினவப்பட்டுள்ள வினாக்களின் கடின எளிமை தன்மையை குறிப்பிடும் செய்திகள்.
ஆனால் ஒவ்வொருமுறையும் இதற்கான கடின எளிமை தன்மைகளை ஒவ்வொரு பாடத்திற்கும் மாற்றியமைத்து வினாத்தளை ஒரு புரியாத புதிராக்கி வருகிறது TRB.
எளிதாக இத்தேர்வினில் வெற்றி பெற உண்மையாகவும்... உறுதியாகவும் படிக்க வேண்டியது கட்டாயம்.
பாடங்களை புரிந்து மாணவர்களுக்கு எவ்வகையில் எல்லாம் நடத்தினால் புரியும் என்பதை மனதில் கொண்டு நாம் 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள பாடநூல்களை படித்திருந்தாலே போதும்.
மாறாக பள்ளி படிக்கும் போது சிறந்த ஆசிரியர்கள் அமையப்பெற்ற மாணவர்களுக்கு இது மிக மிக எளிதான ஒன்று.
வினாத்தாள்கள் எப்படிதான் வினவப்படுமோ! என்ற அச்சத்தில் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக பலர் கூறும் நுட்பம் இதுதான்...
நம் தமிழகத்தில் TNTET என்று வைக்கப்படுவது போன்றே... APTET, UP TET, KRTET என்று ஒவ்வொரு மாநில TET தேர்வு வினாத்தாள்களை கொஞ்சம் இணையத்தில் இருந்து உருவி பார்த்தாலே போதும் என்கிறார்கள் கல்வி வல்லுநர்கள்.
மற்ற மாநில TET வினாத்தாள்களை போன்றே தயாரிக்கப்பட்டுள்ளது வரவிருக்கும் TNTET வினாத்தாள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எது எப்படியோ... இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு TNTET 2013 இல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பபடும் அளவிற்கு தயாராகி விட்டனர் மாநிலம் முழுவதிலும் தேர்வு எழுதும் 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவ ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது..
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன