tet books

time


follow me on fb

Thursday, July 4, 2013

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு இந்த முறை 6.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நுழைவுச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு!


ஆகஸ்ட் மாதம் நடக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,), 6.85 லட்சம் பேர் எழுத உள்ளனர்.



அரசு, தனியார் பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது, அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 15 ஆயிரம், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆகஸ்டில் நடக்கிறது. இதற்காக, ஜூன், 17ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடந்தாண்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு, அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. ஜூலை, 1ம் தேதியுடன் விண்ணப்ப விற்பனை முடிவடைந்தது. விற்பனை செய்யப்பட்ட விண்ணப்பங்களில், ஆறு லட்சத்து, 85 ஆயிரத்து, 466 விண்ணப்பங்கள், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 65 ஆயிரத்து, 568 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு, நான்கு லட்சத்து, 19 ஆயிரத்து, 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர். டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்' இம்மாத இறுதிக்குள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links