இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 23 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.07.2013
விவரங்களுக்கு:http://www.iocl.com/
ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள்
ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ. அல்லது ஐ.சி.டபுள்யூ.ஏ. தேர்ச்சி அல்லது ஃபுட் சயின்ஸ், ஃபுட் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல், பயோ டெக்னாலஜி, சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
28 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2013
விவரங்களுக்கு:http://www.fcijobsportal.com/
கெயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள்
கெயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள்
கெயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், டீசல் மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலெக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2013
விவரங்களுக்கு: http://www.gail.nic.in/final_site/index.html
தமிழ்நாட்டில் இயங்கி வரும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் 1,339 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் அல்லது மார்க்கெட்டிங்/ மேனேஜ்மெண்ட் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினியை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களில் யாரேனும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் வேலை செய்தாலோ, ஏஜெண்டாக இருந்தாலோ இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
காலியிடங்கள்: சென்னை-1:168, சென்னை-2 : 275, கோவை : 63, மதுரை: 87, சேலம் : 70, திருநெல்வேலி : 247, திருச்சி : 263, வேலூர் : 166
விண்ணப்பிப்பது எப்படி?.
1.www.licindia.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, Careers என்று குறிப்பிட்டிருக்கும் பிரிவை கிளிக் செய்யவும். அதில் ENGAGEMENT OF DIRECT SALES EXECUTIVES பிரிவுக்குள் இருக்கும் விண்ணப்பத்பை் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2.பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பத்தைப் பயன்படுத்தி, அருகில் இருக்கும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100/-ஐ செலுத்த வேண்டும் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).
3. கட்டணம் செலுத்திய ரசீதை பத்திரமாக வைத்திக்கொள்ள வேண்டும். ரசீது இருந்தால் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படும்.
4.கட்டணம் செலுத்திய பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 06.07.2013
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2013
விவரங்களுக்கு:http://www.licindia.in/
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன