tet books

time


follow me on fb

Tuesday, July 23, 2013

சுதந்திர தின - பள்ளி பாடல்கள்... ஆசிரியரின் சொந்த படைப்பு...


(பாடல் – 1 சொல்லிடும் போது)
ஜன கண மன என சொல்லிடுவோம்!
ஜனங்களை மனங்களால் எண்ணிடுவோம்!
வந்தே மாதரம் என்றிடுவோம்!
வளங்களும் நலங்களும் பெற்றிடுவோம்!
தாயின் மணிக்கொடி பார்த்திடுவோம்!
தாய் நாட்டின் மகிமையை உணர்ந்திடுவோம்.!
ஆங்கிலேயன் கைதனிலே
அடிமைபட்ட நம் நாட்டை
அல்லும் பகலும் போராடி
அண்ணலும் பலரும் கைகோர்த்து.....

துன்பம் கொடுமை பல கொண்டு
துவண்டிடாமல் துணிந்து நின்று....
பெற்று தந்த சுதந்திரத்தை
பேணிக்காப்போம் என்றென்றும்!


(பாடல் – 2 ஜன கண மன தமிழாக்கம்)

மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி...




பாடல் – 3 ( இந்தியா இந்தியா )

இந்தியா! இந்தியா ! 
என் தேசமே என் நேசமே

வேற்றுமையில் ஒற்றுமையை
கொண்டதுதான் என் தேசம்
என்றென்றும் குறையாது
என் நாட்டின் மீதுள்ள நேசம்

அகிம்சையினை உலகினுக்கே
அறிமுகம் செய்த நாடிது
அன்பினிலும் பண்பினிலும்
அலை கடலின் மறு பதிவிது.

வறுமையெல்லாம் வளமையாக
மாறுவது எப்போது?
தீமையெல்லாம் நன்மையென
மாறிடுமே அப்போது!


நாட்டிலுள்ள மக்களெல்லாம் 
நலமுடனே வாழ வேண்டும்!- அதற்கு
நல்லவர்கள் வல்லவர்கள்
நாட்டினை ஆள வேண்டும்


கல்வி கற்று உயர்ந்திடுவேன்
கலங்கரை விளக்காய் திகழ்ந்திடுவேன்
நாளைய தலைவன் நானாவேன்
நன்மைகள் பலவும் செய்திடுவேன்..

இந்தியா இந்தியா...
என் தேசமே என் நேசமே!

            இரா. ஜெகநாதன்
            உதவி இ.நி.ஆசிரியர்
            புதுகரிகாத்தூர்.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links