tet books

time


follow me on fb

Monday, July 29, 2013

இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்

வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

இதன் நேரடி தமிழாக்கம்...


மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.


ஆனால்...  இதை அப்படியே உபயோகித்தால் தேசிய கீதத்தின் ராகம் வரவில்லை என்பதால் சொல்லாடல்களை சுருக்கி... தேசிய கீதத்தின் உண்மையான பொருள் படும்படி அமைத்து...


மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே

இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி...


என ராகத்திற்கேற்ப பாடலை அமைத்து  28-07-2012 (ஞாயிறு ) அன்று Youtube ல் பதிவிட்டேன்.


இதற்கான இணைய இணைப்புகளை என் முகநூல் பக்கம் மற்றும் மின்னஞ்சல்களின் மூலமாக பகிர்ந்து கொண்டதின் மூலமாக பலருக்கு இந்த பாடல் அறிமுகமாகி உள்ளது.


தமிழாசிரியர் உயர்திரு. முத்துநிலவன் அவர்கள் அவரின் வலைபூ பக்கத்தில் http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_29.html இது சார்ந்த இடுகை ஒன்றினை பதிவிட்டுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழில் தேசிய கீதம்... இது தேசிய இந்திய தேசிய கீதமான (வங்க மொழி - ஜன கண மன) பாடலுக்கு என்றுமே ஈடாகாது... மற்றும் மாற்றும் கிடையாது...


மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும்.


என் சிறு வயதினில் இருந்தே தேசிய கீதத்தினை பாடும் போதெல்லாம் அதன் பொருள் புரியாமல் ஏதோ மனப்பாடமாக பாடுவதை போல பாடி இருக்கிறேன்.


இருப்பினும் பாடும் போது இருக்கும் தேசிய உணர்வும்... உத்வேகமும்... மன கிளர்ச்சியும் சொல்லில் அடங்காதவை.


அதை பொருள் உணர்ந்து பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நான் எண்ணி இருந்ததை மனதில் கொண்டே தேசிய கீத பாடலின் தமிழாக்கம் தேசிய கீத பாடலின் ராகத்தில் எழுதப்பட்டது.


மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக ஒன்றை பதிந்து கொள்ள விழைகிறேன்.



தமிழில் தேசிய கீதம்... இது தேசிய இந்திய தேசிய கீதமான (வங்க மொழி - ஜன கண மன ) பாடலுக்கு என்றுமே ஈடாகாது... மற்றும் மாற்றும் கிடையாது...

மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும் என்று நம்புகிறேன்.


(குறிப்பு : இது ஒரு ஆசிரியராக என் மாணவர்களுக்கு என தயாரிக்கப்பட்ட படைப்பு! இதற்கான MP4 வகையிலான வீடியோ பதிவினை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


தமிழாசிரியர் உயர்திரு. நா.  முத்துநிலவன்  அவர்களின் வலைபூ இடுகையில் இது பற்றிய கட்டுரையினை காண... வளரும் கவிதை: இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்







7 comments:

  1. உயர்திரு. முத்துநிலவன் அவர்களின் மூலம் தான் உங்களின் தளமும் தெரியும்... நன்றி... தொடர்கிறேன்...

    தமிழாக்கம் மிகவும் அருமை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி... தங்களின் வழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்..

      Delete
    2. இந்திய என்பதற்கு பதில் பாரத என்று இருந்தால் மேலும் சிறப்பு.. இந்திய வளங்களின் அரசி//// பாரத வளங்களின் அரசி.. பல்லாயிரம் ஆண்டுகளாக பாரதம் என்ற பெயரே நமது நாட்டிற்கு இருந்தது

      Delete
  2. சிறந்த முயற்சி.வாழ்த்துக்கள். முயற்சி தொடருட்டும்- சயனாரா,அரிமா ச நாகராசன்,விருதுநகர்

    ReplyDelete
  3. தேசியகீதம்.........

    எழுந்து நில்

    ஐன கன மன
    என்று வெள்ளையனை வாழ்த்து.
    ...................................................................
    இந்தியர் என்கிற என்றும் இல்லாத உணர்வுடன் பல்வேறு தேசிய இனங்கள் எழுந்து நின்று
    ஜன கன மன அதிநாயக ஜெயஹே
    பாரத பாக்ய விதாதா
    என்று வெள்ளைக்காரனைத்தான் போற்றிப்பாடுகின்றனர்;

    ஆம்; இந்தப்பாடல் யாரைப் புகழ்கிறது? இதன் பொருள் என்ன? என்று தெரிந்தால் கூனிக்குறுகிப் போவீர்கள்;

    1911 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கல்கத்தா வந்தார் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்;
    ரவீந்திரநாத் தாகூரே நேரடியாகச் சென்று வரவேற்று அவரைப் பலர் முன்னிலையில் தானே தனது வாயால் புகழ்ந்து பாடிய பாட்டுதான் இந்த ஜன கன மன என்ற பாடல்;
    அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்படி என்று புரிகிறதா?
    அன்றைய காலத்தில் நைட்ஹுட் என்ற பட்டம் ஆங்கில அடிமைகளுக்கு வழங்கப்பட்டது நினைவுவருகிறதா?
    இன்றைய இந்தியாவின் தேசியகீதத்தின் பொருள் பின்வருமாறு;

    ஐன கன மன அதிநாயக ஜயஹே
    *(மக்களின் இதயங்களில் பெருமையாக வீற்றிருக்கும் உயர்ந்த தலைவனே நீ வாழ்க)

    பாரத பாக்ய விதாதா
    *(பாரத நாட்டின் தலைவிதியை நீ எழுதுகிறாய்)

    பஞ்சாப ஸிந்து குஜராத்த மராட்டா திராபிட உத்கல பங்கா
    *((பஞ்சாப், சிந்து(பாகித்தானில் உள்ளது), குஜராத்,மகாராசுட்டிரா, திராவிடம்(தென்னிந்தியாவாம்!) உத்கல்(ஒடிசா), பங்கா(வங்காளம்) எல்லாம் சேர்ந்து))

    விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா
    *(விந்தியமலை இமயமலைகளில் அலைகள் பரப்பியபடி ஒடும் யமுனையும் கங்கையும்)

    தப சுப நாமே ஜாகே
    *(உன் புனிதப்பெயரைச் சொல்லியே துயிலெழுகின்றன)

    தப சுப ஆஸிஸ மாங்கே
    *(உனக்காக புனித அருள் வேண்டுகின்றன-இந்த வரி இப்பாடல் இறைவனைப் போற்றுகிறது என்று கூறும் சிலரை தோலுரிக்கிறது)

    காஹே தப ஜெய காதா
    *(உன் வெற்றியையே போற்றவும் பாடவும் செய்கின்றன)

    ஜன கன மங்கள தாயக ஜெயஹே
    பாரத பாக்ய விதாதா
    *(மக்களின் இதயங்களின் வீற்றிருக்கும் நீயே அவர்களுக்கு நற்குணங்களைப் பகிர்த்தளித்தவனே! நீதான் பாரதத்தின் விதியை எழுதுபவன்)

    இதன் பிறகு அரசனின் மணிமுடியையும் அரியணையையும் கூச்சநாச்சமேயில்லாமல் புகழும் வரிகள் நீக்கப்பட்டு

    ஜெய ஹே ஜெயஹே ஜெயஜெய ஹே
    என்று மன்னன் ஜார்ஜை வாழ்க வாழ்க என்று வாழ்த்தி முடிகிறது அந்தப் பாடல்.

    இதுதான் இந்தியா!
    இந்த எளவுதான் நமது தேசியப்பாடல்!

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு வாட்ஸ்அப் குரூப்பில் வந்தது.

      Delete
    2. இந்த பதிவு வாட்ஸ்அப் குரூப்பில் வந்தது.

      Delete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links