tet books

time


follow me on fb

Thursday, May 30, 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன

http://tnresults.nic.in/gdslplus/gdslplus.htm



498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ள  9 மாணவிகள் விபரம் வருமாறு:
1) அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை
2) தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3) காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
4) மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
5)பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
6) சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
7) சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
8. ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்

9) வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர் 


 52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்துள்ளனர். 

136 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்துள்ளனர்.

 பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது.



மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். 

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். 

இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

 ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links