மே 28 - GO No 145 இன் படி...
தமிழகத்தில் இனி அரசு ஆண்கள் பள்ளிகளில் - ஆண் ஆசிரியர்களும்
அரசு பெண்கள் பள்ளிகளில் - பெண் ஆசிரியர்களும் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.
தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளிகளில் பெண் தலைமை ஆசிரியராக மட்டுமே இருக்க இந்த அரசு விதியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு முன் உரிமை அளிக்கும் படியாகவும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் இது தீவிர அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் , இந்த TET தேர்விலும் PG TRB தேர்விலும் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்வோரும் இவ்விதிகளின் படியே பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் இனி அரசு ஆண்கள் பள்ளிகளில் - ஆண் ஆசிரியர்களும்
அரசு பெண்கள் பள்ளிகளில் - பெண் ஆசிரியர்களும் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.
தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளிகளில் பெண் தலைமை ஆசிரியராக மட்டுமே இருக்க இந்த அரசு விதியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு முன் உரிமை அளிக்கும் படியாகவும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் இது தீவிர அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் , இந்த TET தேர்விலும் PG TRB தேர்விலும் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்வோரும் இவ்விதிகளின் படியே பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
இடஒதுக்கீடு கொள்கைக்கு முக்கியத்துவம் தர ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்களில் மாற்றம் தேவை-கருணாநிதி
ReplyDeleteசென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில்கள் அறிக்கை: ஆகஸ்ட் 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளதே? 3ம்முறையாக இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர்என்று எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து விநியோகிக்க போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது,இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படியான விதியாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காககடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபரில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2 முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாகஇல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்த தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ம்தேதியும் நடக்கவுள்ளன. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60சதவீதம். 2 முறை ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும்என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. தேர்ச்சிபெற அனைத்து பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான்வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரை போலவே 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்தில்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது,தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும். ஆந்திராவில்உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் என்றும், அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 என்றும், ஒடிசாவில்உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக அரசு அனைத்து பிரிவினருக்கும்60 சதவீதம் மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, பெரியாரின்சமூகநீதி கொள்கைக்கு எதிரானதும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமானதுமாகும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆகஸ்ட்டில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, இந்தமுறையாவது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்வுக்கானமதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வரவேண்டும்.