சென்டிரல் பேங்க், விஜயா பேங்க், சிண்டிகேட் பேங்க் உள்ளிட்ட முன்னணி பொதுத் துறை வங்கிகளில் 70 சிறப்பு அதிகாரி பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
சென்டிரல் பேங்க்
சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பிரபல பொதுத்துறை வங்கியாகும். இதன் கிளைகளில் மொத்தம் 37 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டீலர், ரிசர்ச் அனலிஸ்ட், ஆர்கிடெக்ட், சிவில் என்ஜினீயர்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் போன்ற பிரிவில் இந்த அதிகாரி பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணி கோடு எண் 1, 2, 21 ஆகிய பணிகளுக்கு 40 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 31.3.13 தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
எம்.பி.ஏ. பைனான்ஸ், எம்.ஏ. எக்னாமிக்ஸ், பி.ஆர்க், பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். எஸ்.டி., எஸ்.சி பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.50–ம் இதர பிரிவனர் ரூ.550–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
26–4–13 முதல் 11–5–13 தேதிகளுக்கு உள்ளாக விண்ணப்பங்களை அனுப்பலாம். எழுத்து தேர்வு 23–6–13 அன்று நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் மேலும் விவரங்களை அறியவும் www.centralbankofindia.co.in என்ற முகவரியில் பார்க்கவும்.
நன்றி ஆந்தை ரிப்போர்டர்
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன