tet books

time


follow me on fb

Wednesday, May 1, 2013

அரசு ஊழியர்களுக்கு 8 % அகவிலைப்படி உயர்வு - ஜெ அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில், ”அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தும் கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப்பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2013 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்தி, தற்போதுள்ள 72 விழுக்காடிலிருந்து 80 விழுக்காடாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்திட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்; எழுத்தர்; ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.1.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,639 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பிரமதமான ஒரு தளம் அருமையான பதிவுகள் உடனுக்குடன் தகவல்கள் என கலக்கி வருவதை இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்கின்ற வருத்தம் ஏற்பட்டபோதும் இன்று பார்த்த பின் அது மறைந்துவிட்டது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் புதுக்கோட்டை ஜி வரதராஜன்

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links