tet books

time


follow me on fb

Friday, May 17, 2013

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்


வருகின்ற 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 21 தலைமை தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வருகின்ற 20ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால் 19ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கமாக தபால் நிலையங்கள் செயல்படாது. இதனால் பல மாணவர்கள் குறித்த நாளில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் சிரமப்பட வாய்ப்புண்டு.

இதை கவனத்தில் கொண்டு, வருகின்ற 19ஆம் தேதி தபால் துறையின் தெற்கு பகுதியில், திண்டுக்கல், பழனி, நாகர்கோவில், தக்கலை, காரைக்குடி, கோவில்பட்டி, தென்காசி, மதுரை, தல்லாகுளம், ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை, பெரியகுளம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்களும், மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு தபால்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links