tet books

time


follow me on fb

Thursday, May 16, 2013

TNPSC Group 1 தேர்வு முடிவுகள் வெளியீடு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை துணை ஆணையாளர், மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

இந்த முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) தேர்வு முடிவுகளைக் காணலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.

ஜூன் 7-ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ சான்றிதழ் நகல்களை அனுப்பலாம். நகல்களை அனுப்பாதவர்களின் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

நன்றி ... ஆந்தை ரிப்போர்டர்

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links