tet books

time


follow me on fb

Thursday, March 21, 2013

TNTET 2013 - புதிய ஆசிரியர் நியமனம் பற்றி அறிவிப்பில்லாத ஒரு பட்ஜெட்

புதிய ஆசிரியர்களின் நியமனம் பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இன்று இல்லை.

இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி பற்றிய அறிவிப்பிற்கான நாள் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் தெரியவரும்.

இன்று மார்ச் 21 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அது இல்லாமல் போனது.

எனினும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பினை விரைவில் ( இந்த மாத இறுதிக்குள்) எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே கூற பட்டது போல ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் வரப்போகும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான காலம் குறைவாகவே இருக்கும்.

மே மாதம் இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் காலியிடங்கள் சேகரிக்கும் பணி தொடக்கம்.

தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக் கல்வி
இயக்ககத்தில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது அளிக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி ஆசிரியர் குரல் 

2 comments:

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links