tet books

time


follow me on fb

Wednesday, August 21, 2013

TNPSC GROUP 4 - Hallticket கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்!

 23,24 நாளை மற்றும் நாளை மறுநாள் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்திய சலானுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இதற்கான தனி பிரிவினை அணுகி தங்கள் தேர்வு மைய நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

 மேலும் விவரங்கள்....


குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணைய இணையதளத்தில்
(www.tnpsc.gov.in)) வெளியிடப்படப்பட்டது. 

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தாங்கள் விண்ணப்பித்து கட்டணம்
செலுத்தியதற்கான படிவத்தை டி.என்.பி.எஸ்.சி., மின்னஞ்சல் மூலமாக அனுப்ப
கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். 

மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை தேர்வாணைய
இணையதளத்தில் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின்
விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்
சீட்டு ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 23 மற்றும்
24 ஆகிய தேதிகளில் அணுக வேண்டும். தேர்வு எழுத தேர்வு செய்துள்ள மையம்
அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் தேர்வாணைய
அலுவலரை இரண்டு தினங்களிலும் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் குறித்த
தகவல்களை கேட்டுப் பெறலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்ட அலுவலர்
தெரிவித்துள்ளார்.

1 comment:

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links