ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள்மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிருநாளில் தொடங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக்கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர் தகுதித்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு:
விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு,தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.அதன் பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 வாரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு:
முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில்வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை1.60 லட்சம்பேர் எழுதினர்.முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள்,அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும்எனத் தெரிகிறது.இது தொடர்பாக, முடிவுசெய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
உதவிப் பேராசிரியர் நியமனம்:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.
தேர்வர்கள் ஏமாற வேண்டாம்:
ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையானமுறையில், தகுதியின் அடிப்படையில்மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப்பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உண்ணா விரதப்போராட்டம்
ReplyDeleteகடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில்
உயர் நீதிமன்றம் 09.07.2013அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாளஉண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .
தேதி : 29.08.2013,வியாழக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் : சின்னசாமி ஸ்டேடியம் எதிரில்,சேப்பாக்கம் ,சென்னை
அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு நமது நியாமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்
இப்படிக்கு
சான்றிதழ்சரிபார்க்கப்பட்டுபணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்
குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டஆசிரியர்கள் அனைவரும் தவறாமல்கலந்துகொள்ளவும் .
CONTACT :M.HARIKRISHNAN -9443578274