tet books

time


follow me on fb

Wednesday, August 21, 2013

வினாத்தாள் மோசடி கும்பலுடன் தொடர்பு யார் யாருக்கு அவிழும் முடிச்சுகள்...

இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி: தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பென்னாகரத்தை சேர்ந்த விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை நடக்கிறது.தமிழகத்தில் 17,18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தர்மபுரியில் தேர்வு வினாத்தாள் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, டாஸ்மாக் ஊழியர் 2 பேர் உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி இரண்டு நபர்கள்பேசியது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

 இதனையடுத்து முக்கிய நபரின் செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் வந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த எண்களுக்குரிய செல்போன் பென்னாகரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரின் எண்கள் என தெரியவந்தது. இருவரின் எண்களுக்கும் ஏற்கனவே குரூப்&2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது போலி வினாத்தாள் விவகாரத்தில் சிக்கி கைதாகியுள்ள இளையராஜாவின் செல்போனில் இருந்து பேசப்பட்டுள்ளது.


நேற்று முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்பு உறுதி செய்யப்பட்டால் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீ சார் தெரிவித்தனர். போலி கேள்வித்தாள் மோசடியில் சிக்கியுள்ள இளையராஜாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கபோலீ சார் திட்டமிட்டுள்ளனர்.


பயிற்சி மையங்களில் விசாரணை: கடந்தாண்டு நடந்ததேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முன் கூட்டியே ரகசியமாக கேள்வித்தாள் சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்தாண்டும்  பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில் வினாத்தாளின் கடினத்தன்மை மற்றும் வினாக்கள் கேட்கப்படும் விதம் ஆகியவை  குறித்து மாநிலம் முழுவதிலும் பெரும்பாலான பயிற்சி மையங்களில்  பரவலாக சில  அறிவிப்புகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றினை அளித்ததில் வினாத்தாள் தயாரிப்பு குழுவினை சார்ந்தவர்களும் பல லட்சங்களை பெற்று அறிவுரைகளை வழங்கி உள்ளனர் என தெரியவருகிறது. இதனால் சாதாரண மக்களின் திறன்கள் கேள்விக்குறி ஆக்கப்பட்டள்ளன.

கட்டணம் கொடுத்து பயிற்சி மையங்களில் படித்தால்தான் வினாக்களை எதிர்கொள்ள முடியும் என்ற தவறான உதாரணம் இந்த TNTET தேர்வினில் உருவாகி உள்ளது. 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links