tet books

time


follow me on fb

Tuesday, August 27, 2013

TNTET 2013 GOVT Answer Keys Publichsed

Wednesday, August 21, 2013

TNPSC GROUP 4 - Hallticket கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்!

 23,24 நாளை மற்றும் நாளை மறுநாள் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்திய சலானுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இதற்கான தனி பிரிவினை அணுகி தங்கள் தேர்வு மைய நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

 மேலும் விவரங்கள்....


குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணைய இணையதளத்தில்
(www.tnpsc.gov.in)) வெளியிடப்படப்பட்டது. 

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தாங்கள் விண்ணப்பித்து கட்டணம்
செலுத்தியதற்கான படிவத்தை டி.என்.பி.எஸ்.சி., மின்னஞ்சல் மூலமாக அனுப்ப
கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். 

மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை தேர்வாணைய
இணையதளத்தில் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின்
விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்
சீட்டு ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 23 மற்றும்
24 ஆகிய தேதிகளில் அணுக வேண்டும். தேர்வு எழுத தேர்வு செய்துள்ள மையம்
அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் தேர்வாணைய
அலுவலரை இரண்டு தினங்களிலும் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் குறித்த
தகவல்களை கேட்டுப் பெறலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்ட அலுவலர்
தெரிவித்துள்ளார்.

PG TRB, TNTET 2013 EXAM RESULTS DATE!


ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள்மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிருநாளில் தொடங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக்கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர் தகுதித்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு:
விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு,தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.அதன் பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 வாரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு:
முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில்வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை1.60 லட்சம்பேர் எழுதினர்.முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள்,அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும்எனத் தெரிகிறது.இது தொடர்பாக, முடிவுசெய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

உதவிப் பேராசிரியர் நியமனம்:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.

தேர்வர்கள் ஏமாற வேண்டாம்:
ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையானமுறையில், தகுதியின் அடிப்படையில்மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப்பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வினாத்தாள் மோசடி கும்பலுடன் தொடர்பு யார் யாருக்கு அவிழும் முடிச்சுகள்...

இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி: தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பென்னாகரத்தை சேர்ந்த விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை நடக்கிறது.தமிழகத்தில் 17,18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தர்மபுரியில் தேர்வு வினாத்தாள் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, டாஸ்மாக் ஊழியர் 2 பேர் உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி இரண்டு நபர்கள்பேசியது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

 இதனையடுத்து முக்கிய நபரின் செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் வந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த எண்களுக்குரிய செல்போன் பென்னாகரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரின் எண்கள் என தெரியவந்தது. இருவரின் எண்களுக்கும் ஏற்கனவே குரூப்&2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது போலி வினாத்தாள் விவகாரத்தில் சிக்கி கைதாகியுள்ள இளையராஜாவின் செல்போனில் இருந்து பேசப்பட்டுள்ளது.


நேற்று முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்பு உறுதி செய்யப்பட்டால் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீ சார் தெரிவித்தனர். போலி கேள்வித்தாள் மோசடியில் சிக்கியுள்ள இளையராஜாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கபோலீ சார் திட்டமிட்டுள்ளனர்.


பயிற்சி மையங்களில் விசாரணை: கடந்தாண்டு நடந்ததேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முன் கூட்டியே ரகசியமாக கேள்வித்தாள் சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்தாண்டும்  பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில் வினாத்தாளின் கடினத்தன்மை மற்றும் வினாக்கள் கேட்கப்படும் விதம் ஆகியவை  குறித்து மாநிலம் முழுவதிலும் பெரும்பாலான பயிற்சி மையங்களில்  பரவலாக சில  அறிவிப்புகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றினை அளித்ததில் வினாத்தாள் தயாரிப்பு குழுவினை சார்ந்தவர்களும் பல லட்சங்களை பெற்று அறிவுரைகளை வழங்கி உள்ளனர் என தெரியவருகிறது. இதனால் சாதாரண மக்களின் திறன்கள் கேள்விக்குறி ஆக்கப்பட்டள்ளன.

கட்டணம் கொடுத்து பயிற்சி மையங்களில் படித்தால்தான் வினாக்களை எதிர்கொள்ள முடியும் என்ற தவறான உதாரணம் இந்த TNTET தேர்வினில் உருவாகி உள்ளது. 

வெளியானதா? TNTET 2013 வினாத்தாள்! நாளிதழ் செய்தி


டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

         டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார், ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வினாத்தாள் உண்மையில் அவுட்டானதாகவும், அந்த தகவலை போலீஸார் மறைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.



         தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த, 17 மற்றும், 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்வு நடந்தது. கடந்த, 17ம் தேதி தர்மபுரியில் வினாத்தாள் கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர், இரண்டு பேர் உள்ளிட்ட, ஆறு பேரை தர்மபுரி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

          மேலும் சிலரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு, குரூப் 2 தேர்வின் போது, தர்மபுரி மற்றும் ஈரோட்டில் இத்தேர்வுக்கான விடைத்தாள் அவுட்டானது. இது தொடர்பாக தர்மபுரி, ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில் உள்ளது.

டி.இ.டி., தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வினாத்தாள் கொடுப்பதாக ஒரு கும்பல், வினாத்தாளுக்கு, 8 லட்ச ரூபாய் வரை விலை பேசி வந்தனர். இதனால், தேர்வுக்கு முன் ஒரு வாரமாக இரு மாவட்டத்திலும், தேர்வு எழுதுவோர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

           இந்நிலையில், போலீஸார் வினாத்தாள் மோசடி செய்திருப்பதாக, ஆறு பேரை கைது செய்த போதும், இதில், பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. வினாத்தாள் அவுட்டானால் பெரும் பிரச்னை வரும் என்பதால், மோசடியில் ஈடுபட்ட கும்பல், வினாத்தாள் ஜெராக்ஸ் உள்ளிட்ட எந்த பிரதிகளையும் பணம் பெற்றவர்களிடம் கொடுக்காமல், பணம் பெற்றவர்களை குறிப்பிட்ட இடத்துக்க வரவழைத்து, குறிப்பிட்ட வினாக்களை வாய் மூலமாக கூறி, தேர்வுக்கு தயார் செய்துள்ளனர்.

           வினாத்தாள் ஜெராக்ஸ் உள்ளிட்டவைகள் வெளியான தேர்வு ரத்தாகும். மேலும் சட்ட ரீதியாக உறுதி செய்வதில் இருந்து தப்பிக்க, மோசடி கும்பல் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வினாத்தாள் அவுட்டானதற்கான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்ற முடியாத நிலையில், வினாத்தாள் மோசடி என, வழக்கு பதிவு செய்துள்ளனர்.

              ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு? ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், நான்கு மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு, அந்த வினாத்தாள்களில் ஒன்றை தேர்வு நடக்கும் போது வினியோகம் செய்வது வழக்கம். மோசடி கும்பல் நான்கு வினாத்தாளுக்குரிய கேள்விகளையும் பணம் பெற்றவர்களிடம் வாய் மொழியாக கூறி தேர்வுக்கு தயார் செய்துள்ளனர். இந்த மோசடியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்து பலரும் தேர்வுக்கு வரும் வினாக்களை பெற்று தேர்வு எழுதியிருப்பதால், தர்மபுரி மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

          மோசடி கும்பல் கொடுத்த வினாக்களில், 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது. வினாத்தாள் அவுட்டான விவகாரத்துக்கு, உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், போலீஸார் இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய பலரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

              இந்த கும்பல் கடைசி நேரத்தில், பணம் பெற்று கொண்டு, மொபைல்ஃபோன் மூலம் வினாக்களை பணம் வாங்கியவர்களிடம் கூறியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எது எப்படி என்றாலும், மோசடி கும்பல் சட்ட ரீதியாக சிக்க கூடாது என்பதிலும், வினாத்தாள் அவுட்டானால், மறு தேர்வு நடக்கும் அதை தவிர்க்கும் வகையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது, அரசு துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sunday, August 18, 2013

TNTET 2013 பணிநியமனத்திற்கான பகுக்கப்பட்ட மதிப்பெண் நிறையளவு விவரம்

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில்,ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு,

  1. தகுதி தேர்வு மதிப்பெண்,
  2. பிளஸ்–2 மதிப்பெண்,
  3. பட்டப் படிப்பு மற்றும் 
  4. பி.எட். மதிப்பெண் 

ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,
பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்,
பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்,
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.


பிளஸ்–2,டிகிரி,பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–


12–ம் வகுப்பில்...

 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால்–10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–5 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள்–2 மதிப்பெண்


பட்டப் படிப்பில்...

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ்–10 மதிப்பெண்


பி.எட். படிப்பில்....

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்


தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–42 மதிப்பெண்

TNTET 2013 - answer keys for Paper I and II

Saturday, August 17, 2013

TNTET 2013 விடை குறிப்புகள். ( answer keys )

தமிழ் முதல் தாள் விடைகள்

ஆங்கிலம் முதல் தாள் விடைகள்

கணிதம் முதல் தாள் விடைகள்

சூழ்நிலையியல் முதல் தாள் விடைகள்

the above answer keys for tntet 2013 , மேற்குறிப்பிட்ட விடைகள் உத்தேசமானவையே...

அதிகாரபூர்வமான விடைகளை TRB இணையதளத்தினில் திங்கள் கிழமைக்கு பிறகு எதிர்பார்க்கலாம்

நன்றி...Ranitetpark

Friday, August 16, 2013

TNTET 2013 தேர்வர்கள் குழப்பம்...ஒரே பெயரில் பல தேர்வு மையங்கள்...

TNPSC தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளில் தேர்வு மையத்தின் பெயர் , தெருவின் பெயர் , அலுவலகத்தின் தொலைபேசி எண் என அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் TNTET 2013 கான தேர்வு மைய நுழைவுச்சீட்டில் அனாமத்தாக பள்ளியின் பெயர் , ஊர், மாவட்டம் ஆகியவை மட்டுமே பதிவிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.


சிறிய கிராம புற பகுதிகளானால் ஒரு பள்ளியை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் பெரிய நகர்புறங்களில்  அரசு பள்ளிகள் பல இருக்கும்... அப்படி இருக்க

Municipal School, Thiruvannamalai என்றோ...

APTN School, Vellore என்றோ மட்டும் இருப்பதை கொண்டு அந்த பள்ளியை தேர்வர்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும்?


அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு காந்திநகர்கள் உள்ளன. அதில் ஒன்று திருவண்ணாமலை நகரிலேயே உள்ளது. மற்றொன்று செங்கம் நாச்சிபட்டு கிராமத்தில் உள்ளது..


நுழைவுச்சீட்டில் Govt HSS, Gandhi Nagar, Thiruvannamalai என்று இருந்தால் அந்த தேர்வர் எந்த காந்திநகர் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதுவார்?

இத்தகைய குழப்பங்களால் பல தேர்வர்கள் தவித்துவருகின்றனர்.

தேர்வு கூடத்தின் முழு முகவரியையும் இனிவரும் காலங்களிலாவது TRB முழுமையாக தரும் என நம்புவோம்..

தேர்வு எழுதுவோர் தேர்வு கூடங்களுக்கு 3 மணிநேரத்திற்கு முன்னதாக சென்றால் இத்தகைய குழப்ப போக்குகளை கண்டறிந்து வெல்லமுடியும்.. 

Tuesday, August 6, 2013

TET Hall Ticket Download - இப்போது சரியாகிவிட்டது...

select your Paper

paper 1 - TN and Puducherry

paper 2 - TN and Puducherry

paper 2 - TN

paper 1 - TN

நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய எந்த browser ம் பயன்படுத்தலாம்.

ஆனால் எந்த browser ஆக இருந்தாலும் அதில் pop-up allow செய்ய வேண்டியது அவசியம்.

அப்போதுதான் அடுத்த பக்கத்தில் pdf load ஆகும்.

பலர் hallticket download ஆகவில்லை என்று கூறுவது அவர்களின் browser இல் popup blocker activate ல் இருப்பதுதான்.. அதை inactive செய்து மீண்டும் முயற்சிக்கவும்.


TNTET 2013 HALLTICKETS வெளியாகிவிட்டது...




06-08-2013 அன்று மாலை முதலே நுழைவுச்சீட்டுகளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஜெயா... மற்றும் புதிய தலைமுறை செய்திகள் செய்தி வெளியிட்டதால் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று இரவு 8.30 மணிக்கு அதற்கான இணைய இணைப்பு TRB இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

எனினும் Hall ticket ஐ download செய்ய முடியவில்லை..



http://trb.tn.nic.in/TET2013/06082013/msg1.htm

Monday, August 5, 2013

TNTET 2013 - HALLTICKETS இன்னும் வெளியிடப்படவில்லை

நேற்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்ட Tntet 2013 நுழைவுச் சீட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எந்த ஒரு தேர்விற்கும் ஆன்லைனில் நுழைவுச்சீட்டுகள் தேர்வு நாளுக்கு ஒரு வாரம் முன்னதாக மட்டுமே வெளியிடப்படும் என்பதால்

TET தேர்விற்கான நுழைவு சீட்டுகளும் TRB இணைய தளத்தில் 8 ஆம் தேதிக்கு மேல் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 06-08-2013 அன்று மாலை முதலே நுழைவுச்சீட்டுகளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஜெயா... மற்றும் புதிய தலைமுறை செய்திகள் செய்தி வெளியிட்டதால் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று இரவு 8.30 மணிக்கு அதற்கான இணைய இணைப்பு TRB இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

எனினும் Hall ticket ஐ download செய்ய முடியவில்லை..

SAVE OUR EARTH - தமிழாக்க வீடியோ.


சுற்று சூழல் விழிப்புணர்வினையும்...

அன்பு கருணை ஆகியவற்றின் முக்கியத்துவத்தினையும்

ஒருங்கே சொல்லும் படத்தொகுப்பு இது.

இதற்கான தமிழாக்க pdf பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..

https://docs.google.com/file/d/0BwMklu9XLi9qSXJBeHpnUklxWmM/edit

Thursday, August 1, 2013

B.Ed MAY/JUNE 2013 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.

மத்திய அரசின் - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள் 28-08-2013

வங்கி தேர்வுகளுக்கான பொது நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள் 12-08-2013

JIPMER மருத்துவ மனையில் செவிலியர் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசிநாள். 16-08-2013

http://recruitment2013.jipmerentranceexams.org/Default.aspx

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 465

TNPSC - GROUP 8 வகையிலான தேர்வுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 16-08-2013

இந்து அறநிலைத்துறை பணியிடங்களாக டிகிரி முடித்தவர்களுக்கு 50+ பணியிடங்களும்.

பத்தாம் வகுப்பு தகுதிக்கு 25+ பணியிடங்களையும் TNPSC அறிவித்துள்ளது.

இதற்கான ஆன்லைனில் பதிவு செய்ய http://tnpscexams.net/ எனும் வலை பக்கத்திற்கு செல்லவும்.

விண்ணப்ப கட்டணம். 100 ருபாய்.

GRADE III (1654) என்பது Any degree தகுதிக்கும்.

GRADE IV  ( 1655 ) என்பது 10 ஆம் வகுப்பு தகுதிக்குமான பணி வாய்ப்புகள் ஆகும்.

குறைந்தபட்ச வயது 25 ஆகியிருக்க வேண்டும்!

TNTET 2013 - HALLTICKETS ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும்.

http://trb.tn.nic.in/

மேற்கண்ட TRB இணைய பக்கத்தினில் Tntet 2013 கான நுழைவுச்சீட்டுகளை 05-08-2013 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TRB அறிவித்துள்ளது.

other links