tet books

time


follow me on fb

Tuesday, April 16, 2013

விரைவில் வருகிறது TNTET 2013 அறிவிப்பு - தேர்விற்கு தயாரா?


"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்" என துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.

பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்" நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. 

இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்" என, தெரிவித்தன. 

அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும் என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்" முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன.

எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. 
 
நன்றி... தமிழக ஆசிரியர் வெப்சைட் 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links