tet books

time


follow me on fb

Saturday, April 27, 2013

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு



 பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான"நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாகஅறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருச்சி சரஸ்வதி, மதுரை இவாஞ்சலின்,அலங்காநல்லூர் ராஜலட்சுமி உட்பட சிலர் தாக்கல் செய்த 31 மனுக்கள்: பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமனத்திற்கு தேசிய தகுதித்தேர்வு(நெட்) நடத்த, பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) 2012 ஜூன் 4 ல் அறிவிப்பு வெளியிட்டது.
அதிகபட்சமாக முதல் இரண்டு தாள்களில்தலா 100 மதிப்பெண், மூன்றாவது தாளில் 150 மதிப்பெண் பெற வேண்டும் நிர்ணயித்திருந்தனர். தேர்ச்சிபெற குறைந்தபட்சம் பொதுப்பிரிவினர் முதல் இரண்டு தாள்களில் தலா 40 சதவீதம், மூன்றாவது தாளில் 50 சதவீதம்; இதர பிற்பட்டோர் (கிரிமீலேயர் அல்லாதவர்கள்) முதல் இரண்டு தாள்களில் தலா 35 , மூன்றாம் தாளில் 45 சதவீதம்; ஆதிதிராவிடர், பழங்குடியினர் முதல் இரண்டு தாள்களில் தலா 35, மூன்றாம் தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என முதலில் யு.ஜி.சி.,உத்தரவிட்டது. இதனடிப்படையில் கோவை பாரதியார் பல்கலை, 2012 ஆக.,10 ல் மாநில தகுதித் தேர்வு(செட்) அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு முடிவு 2013 பிப்.,9 வெளியானது."நெட்" தேர்வு முடிவு யு.ஜி.சி., இணையதளத்தில் 2012 செப்டம்பரில் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன் நெட், செட் அனைத்து தாள்களிலும் பொதுப்பிரிவினர் 65 சதவீதம், இதர பிற்பட்டோர் 60 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருத முடியும் யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டது. இது சட்டவிரோதம். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன், தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை மாற்றியமைத்துள்ளனர்.
தேர்வு அறிவிப்பின் போதே தெரிவித்திருக்க வேண்டும். முதலில் அறிவித்தபடி, எங்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில், மனுக்கள் விசாரணைக்குவந்தன. யு.ஜி.சி.,வக்கீல், "இதுபோன்ற வழக்குகள், கேரளா ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அங்கு இறுதி தீர்ப்பு வரும்வரை, இங்கு உத்தரவை ஒத்திவைக்க வேண்டும்,&'&' என்றார். நீதிபதி: கேரளா ஐகோர்ட் உத்தரவிற்காக காத்திருக்க முடியாது.சென்னை ஐகோர்ட் முதன்மை பெஞ்ச், இதுபோன்ற மனுக்களை அனுமதித்துள்ளது.யு.ஜி.சி.,முதலில் 2012 ஜூன் 4 மற்றும் பாரதியார் பல்கலை 2012 ஆக.,10ல் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு யு.ஜி.சி.,மற்றும் பாரதியார் பல்கலை 30 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மனுக்கள் முடிக்கப்படுகிறது, என உத்தரவிட்டார்.

1 comment:

  1. thank you for your valuable information . after declaration judgement if ugc annonced re result inform my mail.id pls sir sanvenkatkr@gmail.com

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links