==============================
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும். இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம். இதற்காக, "www.rtionline.gov.in' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது
நன்றி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன