tet books

time


follow me on fb

Sunday, April 28, 2013

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்

இந்தியாவில் சுமார் பத்து லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் அச்சம்தெரிவிக்கின்றனர். கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் "ஆர்.டி.ஐ. பேரவை' என்றதன்னார் வ தொண்டு நிறுவனம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் பிகாரில் அதிகபட்சமாக 50 சதவீத ஆசிரியர்களும், ஆந்திரத்தில் 44 சதவீதம், ஜார்கண்டில்37 சதவீதம், கர்நாடகத்தில் 28 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 23 சதவீதம், மேற்கு வங்கத்தில் 21 சதவீத ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்தியாவில் ஏறக்குறைய 10 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அம்பரிஷ் ராய் கூறுகையில்,""நாட்டில் ஆசிரியர் பயிற்சிக்குச் சரியான கல்வி நிலையங்கள் இல்லை. இதனால், ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2012-ஆம் ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 7.95 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 99 சதம் பேர் தோல்வி அடைந்தனர். தகுதியுடைய ஆசிரியர்களை உருவாக்கினால்தான், தகுதியுடைய மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர் பயிற்சி முறையை மறு சீரமைப்புச் செய்ய வேண்டியது கட்டாயம். நாம் ஆசிரியர் தொழிலை அவமரியாதை செய்கிறோம். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும், தேர்தல் பணிக்கும் அனுப்பி, அவர்களின் தகுதியைக் குறைத்துவிட்டோம்'' என்றார். சரியான வழிகாட்டுதல் இல்லை: தில்லி பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் கிருஷண் குமார் கூறுகையில்,""1995-ஆம் ஆண்டு, ஆசிரியர் பயிற்சிக்கான தேசியக் குழு அமைக்கப்பட்டது. அது ஆசிரியர் பயிற்சியின் அவசியம் குறித்துக் கூறுகிறது. ஆனால், பயிற்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களை தெரிவிக்கவில்லை. இப்போது ஆசிரியர் பயிற்சி என்பது நலிவடைந்த துறையாகிவிட்டது. நாட்டில் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்குக் குறைந்த ஊதியமே கொடுக்கப்படுகிறது. இதற்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டங்கள் அரசின் கவனத்துக்கு செல்வதில்லை'' என்றார். ""தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேடும்நிலையில்தான் எல்லா மாநில அரசுகளும் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் தரமற்ற ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் புற்றீசல்கள் போல தொடங்கப்பட்டுள்ளதேஇதற்கு முக்கியக் காரணம். இத்தகைய நிலையில் பத்து லட்சம் ஆசிரியர்களை நியமித்து, கல்வி உரிமைச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவது எப்படி?'' என்று கேள்வி எழுப்புகின்றனர் பல கல்வியாளர்கள். கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 14 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிப்பது மத்திய அரசின் கடமையாகிறது. யஷ்பால் குழுவில் கூறப்பட்டுள்ளபடி 30:1 என்ற விகிதத்தில் மாணவர்கள்-ஆசிரியர் உள்ள வகையில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும், ஆரம்ப,நடுநிலைப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links