ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு த்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக் கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதிஅளித்துள்ளார்.
இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள்
கவலை கொள்கின்றனர்.
tet books
time
|
follow me on fb
Tuesday, April 30, 2013
Sunday, April 28, 2013
கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்
இந்தியாவில் சுமார் பத்து லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் அச்சம்தெரிவிக்கின்றனர்.
கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் "ஆர்.டி.ஐ. பேரவை' என்றதன்னார் வ தொண்டு நிறுவனம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் பிகாரில் அதிகபட்சமாக 50 சதவீத ஆசிரியர்களும், ஆந்திரத்தில் 44 சதவீதம், ஜார்கண்டில்37 சதவீதம், கர்நாடகத்தில் 28 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 23 சதவீதம், மேற்கு வங்கத்தில் 21 சதவீத ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்தியாவில் ஏறக்குறைய 10 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
Saturday, April 27, 2013
வகுப்பு வாரி அடிப்படையில்தேர்ச்சி மதிப்பெண்.... ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத்
தேவையான
மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில்
நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர்
ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக
உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்,
சட்டப் பேரவையில்
வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆசிரியர்
தகுத்தேர்வு என்பது, ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க
நடத்தப்படும் தேர்வு. ஒரு தேர்வில்
பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும்
தேர்ச்சி பெற்றால் அத்தனைபேருக்கும்
வேலை கொடுக்க முடியாது.
வேலைவாய்ப்புகளில்
இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள்
பணியமர்த்தப் படுகின்றனர்.
DTEd தேர்வில் தவறியவரா நீங்கள்? தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 29
ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் கல்வி தேர்வு) தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.tn.gov.in/dge கடந்த (வியாழக்கிழமை) முதல் 29–ந் தேதி வரை பக்கம் 1 முதல் 6 வரை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை (பக்கம் 1 முதல் 4 வரை) தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 29–ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.
நன்றி கல்விச் சோலை
நன்றி கல்விச் சோலை
BE பயில... மே 04 முதல் விண்ணப்பங்கள் வினியோகம்... மே 20 விண்ணப்பிக்க கடைசி நாள்..
TAMIL NADU ENGINEERING ADMISSIONS – 2013
Schedule of Events for 2013
1. Issue of notification inviting application for Admission to B.E./B.Tech. 03.05.2013
2. Issue of application forms 04.05.2013
3. Last date for issue of application form 20.05.2013
4. Last date for submission of filled-in applications 20.05.2013
5. Assigning Random Number 05.06.2013
6. Publication of Rank list 12.06.2013
7. Commencement of Counselling 21.06.2013
8. End of Counselling 30.07.2013

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான"நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாகஅறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருச்சி சரஸ்வதி, மதுரை இவாஞ்சலின்,அலங்காநல்லூர் ராஜலட்சுமி உட்பட சிலர் தாக்கல் செய்த 31 மனுக்கள்: பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமனத்திற்கு தேசிய தகுதித்தேர்வு(நெட்) நடத்த, பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) 2012 ஜூன் 4 ல் அறிவிப்பு வெளியிட்டது.
Thursday, April 25, 2013
TNTET தேர்வு பற்றிய அறிவிப்பு மே 10 அன்று வெளியாகுமா?
பள்ளிக் கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை மே 10 அன்று நடைபெற உள்ளது நம் தமிழக சட்ட மன்றத்தில் அன்று ஆசிரியர் பணி நியமனம் பற்றியும்... ஆசிரியர் தேர்வு செய்யப்படும் முறை பற்றியும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்பு சீருடை பணியாளர் துறை மீதான மானிய கோரிக்கையின் போது 17 ஆயிரத்திற்கும் மேலான புதிய காவலர் பணியிட அறிவிப்பினை சட்டசபையில் முதல்வர் அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிட தக்கது.
இந்த ஆட்சியில் எந்த ஒரு அரசாங்க அறிவிப்பும் அது முதல்வரின் வாய் மொழியாகவே அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதால் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அதற்கான அறிவிப்பிற்கான சாத்திய கூறுகள் மிகுந்துள்ளன.

Wednesday, April 24, 2013
Tuesday, April 23, 2013
"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு
திருப்புவனம்: ஆங்கில வழி கல்வி துவக்கத்தை அறிவிக்கும் பொருட்டு, திருப்புவனம் அருகே, அரசு பள்ளியில், கனிவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழிக் கல்வியில் சேர்ப்பதை விட, ஆங்கில வழியில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மோகம், கிராமத்தினரையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கிராமத்துஅரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து, ஆட்டம் காணும் நிலையில் உள்ளது.
சேர்க்கை குறைவை தடுக்கவும், வரும் கல்வி ஆண்டு முதல், ஆங்கில வழிக்கல்வி துவக்கத்தை உணர்த்தும் வகையிலும், சிவகங்கை திருப்புவனம் புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், "மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க; கல்வி தொடர்பான அனைத்தும் இலவசம்" என, விளம்பரப்படுத்தி உள்ளனர்.
Sunday, April 21, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தஆண்டு நடக்குமா?
ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி
மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய்இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு 2011ல் ஆசிரியர்தேர்வு வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது. மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாகடிஆர்பி அறிவித்தது.
Tuesday, April 16, 2013
TNPSC துறைத் தேர்வுகளுக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடித்து உத்தரவு.
TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 15.04.2013 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து கடந்த 2 நாட்களாக துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி மேலும் 7 நாட்கள் நீடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டிருந்த நிலையில் TNPSC இன்று அதிகாரபூர்வமாக 15.04.2013 நாள் முதல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைத் தேர்விற்கு 22.04.2013 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணபித்துக் கொள்ளலாம்.
விரைவில் வருகிறது TNTET 2013 அறிவிப்பு - தேர்விற்கு தயாரா?
"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்" என துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்" நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்" என, தெரிவித்தன.
அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும் என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்" முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன.
எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.
நன்றி... தமிழக ஆசிரியர் வெப்சைட்
டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு
"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்" என துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்" நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்" என, தெரிவித்தன.
அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும்என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது."அப்ஜக்டிவ்" முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன.
எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதியஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.
Monday, April 15, 2013
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்துக்கு 10 மார்க் போனஸ்
சிவகங்கை : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் பகுதி1ல் 15 ஒரு மதிப்பெண் கேள்விகள்,பகுதி 2ல் 10 இரண்டு மதிப்பெண் கேள்விகள், பகுதி 3ல் 9 ஐந்து மதிப்பெண் கேள்விகள், பகுதி 4ல் 2 பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதில் பகுதி 3ல் கேட்கப்பட்ட 5 மதிப்பெண் கேள்விகள் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் கேட்கப்படவில்லை. அதிலும் சில கேள்விகள் கடினமாக இருந்தன. கட்டாயமாகஎழுத வேண்டிய 45வது கேள்வியில், பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கணிதத் தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் குறையும் என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. இதில் கணித பாடத்திற்கு கொடுக்கப்பட்ட ‘ஆன்சர் கீயில்‘ 2 ஐந்துமார்க் வினாக்களுக்கு போனசாக 10 மார்க் கொடுக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மொத்தம் எழுத வேண்டிய 9 கேள்விகளில் 7 கேள்விகள் சரியாக எழுதி, 2 கேள்விகள் தவறாக எழுதியிருந்தால் 10 மார்க் போனசாக வழங்க வேண்டும் அல்லது 2 கேள்விகளுக்கு மட்டும் குறைவாக மார்க் பெற்றிருந்தாலும் முழுமையான 10 மார்க் வழங்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறையினர் வழங்கிய ‘கீயில்‘ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்ச்சி விகிதமும், சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.
Saturday, April 13, 2013
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது
மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாகஉள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர்தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்துவருகிறது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
முதல் தேர்வு: கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.கடினமான கேள்வித்தாள், குறைவான நேர ஒதுக்கீடு ஆகியவற்றால் திணறிய தேர்வர்கள், டி.ஆர்.பி., மீது சரமாரி புகார் தெரிவித்தனர். இதனால், அக்., 14ம் தேதி நடத்திய இரண்டாவது டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளில் கடினத்தை குறைத்ததுடன், தேர்வுக்கான நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக உயர்த்தியது.
இரண்டாவது தேர்வில் ஆறுதல்: இதன் காரணமாக, தேர்ச்சி, 3 சதவீதமாக அதிகரித்தது. 6.56 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும்தேர்ச்சி பெற்றனர். முதல் மற்றும் இரண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு டிசம்பரில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அடுத்த தேர்வு எப்போது? எனினும், இன்னும், 20 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் மே மாதத்திற்குள்நடத்தி முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், புதிய ஆசிரியர்கள், பணியில் சேரும் வகையில்,முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.,யின் மெத்தனம் காரணமாக, இத்திட்டம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.தேர்வர்களும், அடுத்த டி.இ.டி., தேர்வை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினமும், ஏராளமான தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), விசாரித்தபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., தரப்பில், எவ்வித தகவலும் தரப்படவில்லை.
டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் தேதிக்கும், தேர்வு நடக்கும் தேதிக்கும், குறைந்தபட்சம், இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும் வகையில், தேர்வு அட்டவணையை நிர்ணயிப்போம். ஜூன் அல்லது ஜூலையில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்' என, தெரிவித்தன.
மாணவர்களுக்கு பாதிப்பு: இரண்டாவது தேர்வு நடந்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. மே மாதத்தில் தேர்வை நடத்தி, விரைவாக முடிவை வெளியிட்டுருந்தால், புதிய ஆசிரியர்கள், பள்ளியில் சேர வசதியாக இருந்திருக்கும். ஜூலைக்குப் பின், தேர்வை நடத்தினால், அவர்கள், பணியில் சேர்வதற்குள் அரையாண்டு தேர்வே வந்துவிடும். இதனால்,கல்வி ஆண்டு துவங்கி, முதல் ஆறு மாதங்கள், ஆசிரியர் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட தேர்வை, டி.ஆர்.பி., விரைவாகவெளியிட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34
Friday, April 12, 2013
RTI online... இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தகவல்களை அறிய...
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
============================== ======
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும். இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம். இதற்காக, "www.rtionline.gov.in' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது
நன்றி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
==============================

TNPSC மாறிய பாடதிட்டம்... மீண்டும் மாறியதா? புதிய தகவல்கள்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
============================== ===
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.
இந்த நிலையில், நீண்ட காலமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாததாலும், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஊழியர்களை தேர்வுசெய்வதற்காகவும் கடந்த மாதம் பாடத்திட்டம் அடியோடு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் தமிழ்மொழி தொடர்பான கேள்விகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘பகுத்து ஆராயும் திறன்’ (ஆப்டிடியூட்) புதிதாக சேர்க்கப்பட்டது.
குரூப்–2 தேர்வில் தமிழ்மொழி தொடர்பான 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டு, ஆப்டிடியூட் தொடர்பாக 50 வினாக்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. அதோடு அறிவியல் மற்றும் பொது அறிவு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன. பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மாணவ–மாணவிகளும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டனர். அரசுக்கும் மனுக்கள் அனுப்பினார்கள்.
தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் கம்யூனிஸ்டு மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி.க்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மா.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டம், மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது.
திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 17–ந் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீப காலமாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழை விருப்ப பாடமாக தேர்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 200 வினாக்கள் கொண்ட குரூப்–2, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் 100 கேள்விகள் தமிழ் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்வில் எளிதில் வெற்றிபெற்று, அரசு பணியில் சேர முடிந்தது.

Tuesday, April 9, 2013
17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.
நன்றி teachers TN

Sunday, April 7, 2013
ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி - இதுவல்லவோ அர்பணிப்பு
------------------------------
உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் பள்ளிக்கு வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் தன் முகங்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாக தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர்.
…….. இங்கே எழுதப்பட்டது ஒருசில மட்டுமே, எழுத மறந்தது ஏராளம்.
இத்தனைபேரும் விழிவிரியப் பார்க்கவும், அளவிற்கதிமாக நேசிக்கவும் என்ன காரணம்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊராட்சிய ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஒன்றுதான் இந்தப்பள்ளியும். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் 5வது கி.மீ தொலைவில் காரமடை, சிறுமுகை நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் மௌனமாய் உலகிற்கு ஒரு முன்மாதிரியாய் நிமிர்ந்து நிற்கின்றது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி.
Saturday, April 6, 2013
Monday, April 1, 2013
Subscribe to:
Posts (Atom)