tet books

time


follow me on fb

Wednesday, March 7, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012

     கல்வித் துறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

     அதன் ஒரு கட்டமாக தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வானது TET EXAM தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் சூன் மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்வானது இரண்டு முறைகளாக நடத்தப்படுகிறது.

1) முதல் தாள் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்களுக்கானது - DTEd only - தேர்வுநாள் 03-06-2012 காலை.
2) இரண்டாம் தாள் - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்களுக்கானது - B.Ed only - தேர்வு நாள் 03-06-2012 மதியம்.

   முதலாம் ஒன்றாக குறிப்பிடப்பட்ட தேர்வினை DTEd முடித்தவர்கள் எழுதலாம்.

  இரண்டாவதாக உள்ள தேர்வினை B.Ed முடித்தவர்கள் எழுதலாம்.

    இவ்விரண்டு தேர்வுகளையும் ஒரு DTEd மற்றும் B.Ed யை ஒருங்கே முடித்த ஆசிரியர்களோ அல்லது தற்போது இளநிலை ஆசிரிய பட்டமோ B.Ed பயின்றுவரும் ஆசிரியர்கள் எழுதலாம்.

இதற்கான கட்டணங்கள் 

பதிவுக்கட்டணம் - 50 ருபாய்
தேர்வு கட்டணம் - 500 ருபாய்

SC/ST/Differently Abled - 50+250 ருபாய்

இரண்டு தேர்வுகளையும் எழுதுபவர்கள் தங்கள் தேர்வுக்கட்டணத்தினை இதே கட்டணமாக அதாவது 500+50 கட்ட வேண்டும் .


மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வைக்கப்பட உள்ள தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தால் நீங்கள் ஆசிரியர் தகுதித்  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாவர்.

இதற்கான விண்ணப்பத்தினை 22-03-2012 அன்று முதல் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள  முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தினில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 04-04-2012 என அறிவிக்கப்பட்டுள்ளது.

for full details see this Paper Add...

என்னை முகப்புத்தகத்தில் தொடர்புக் கொள்ள... http://www.facebook.com/jackn.nath


0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links