tet books

time


follow me on fb

Saturday, March 24, 2012

TET 2012 என்னதான் கேட்பாங்க வினாக்களாக?

  ஆசிரியர் தகுதித் தேர்வின் வினாத்தாளை என் முந்தைய பதிப்புகளில் உள்ளீடு செய்திருந்தேன்...


http://tntet2012.blogspot.in/2012/03/tntet-2012-paper-2-model-qustion-paper.html

http://tntet2012.blogspot.in/2012/03/tntet-2012-model-question-paper-for.html

 அனைவரும் அதை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


  அப்படி என்னதான் கேட்கிறார்கள் வினாக்களாக என்று நான் யோசித்தேன்... நீங்களும் யோசித்திருப்பீர்கள் 1-8 ஆம் வகுப்பு வரை உள்ள பாட நூல்களை தரவாக படித்தாலே போதும் அதோடு அவற்றை வெறும் மனப்பாடம் செய்தல் என்பதோடு நின்றுவிடாமல் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? யாரால்? எப்போது? என்று பலவாறான வினாக்களாக நாமாக கேட்டு அவற்றினை படிக்கும் படி செய்தால் இவற்றிற்காக நாம் தயாராவது சாத்தியமாகும்.

உளவியல் பகுதியில் சிலக் கேள்விகள் வளநூல்களில் இல்லாதவையாக உள்ளன எனவே எனக்கு தெரிந்து கல்வி உளவியலில் ஏதாவது பெரிய புத்தகமாக எடுத்து படிப்பது சாலச்சிறந்தது.

உளவியல் அறிஞர்களை பற்றிதான் பலவாறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. என்ன எதை செய்தார்? எந்த சோதனை யாரால் செய்யப்பட்டது என்பது போல..

தமிழை பொறுத்தவரையில் வளநூல்களும் - பாடநூல்களும் கைக்கொடுக்கும்.


எந்த பாடல் யாரால் எழுதப்பட்டது? எந்த உரை நடை யாரால் எழுதப்பட்டது போன்ற கேள்விகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன.

ஆங்கிலமும் தமிழில் வினவப்படும் வினாக்களைப் போன்றுதான் வினாக்கள் அமைந்திருக்கின்றன.


கணக்கில் ஏதோ சிந்தித்து பதில் அளிப்பது போல போட்டித் தேர்வில் வினவப்படும் புத்திசாலித்தனமான கேள்விகளே பெருமளவில் இடம் பெறுகின்றன.

அறிவியலும் - சமுக அறிவியலும் அறிதல் நிலையினை சோதிப்பதாகவே கேள்விகள் இடம் பெறுகின்றன.

சமச்சீர் கல்விதிட்டத்தின் புத்தகங்களை கடைகளில் தேடினால் கிடைக்காது... மாணவர்களிடமும் கேட்டு பெறுவது கடினம் எனவே அவற்றினை கீழ் காணும் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ...
 http://tntet2012.blogspot.in/2012/03/blog-post_22.html
 மொத்தமாக 600 mb அளவிற்கு நினைவுதிறன் தேவைப்படும்.


பதிலுடன் கூடிய வினாத்தாளை கூடிய விரைவில் உள்ளீடு செய்கிறேன்...


நீங்கள் விடைகளை கண்டுபிடித்திருந்தால் இதில் பதிவு செய்யவும் அல்லது jagan.nathan801@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்...


என்றும் நட்புடன் Jaganathan. R ( 9894016112 )

https://www.facebook.com/jackn.nath

1 comment:

  1. ஜாக் உங்கள் உதவிகள் தொடர என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகள்,,,,,,,,,,,,,,,

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links