tet books

time


follow me on fb

Thursday, September 5, 2013

இந்த முறை TNTET தேர்வில் தேர்ச்சி 53 ஆயிரம்!


ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில்77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.
மத்திய அரசின் இலவச கட்டாயகல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டுஇருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்வு நேரம் (1 ½ மணி) போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதம் ஏறத்தாழ 3 சதவீதமாக உயர்ந்தது. ஆசிரியர் பணி காலி இடங்கள் உள்ள நிலையில், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் கிட்டதட்ட 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரம்பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை 4 லட்சம் பேரும் ஆகமொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.
தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லதுதபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துஇருந்தது. ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில்8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது.
முந்தைய தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இரண்டிலும் சரி தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக கருத்து எழுந்தது. கேள்விகள், விடைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நிபுணர் குழுவின் முடிவின்படி உரிய மதிப்பெண் வழங்கப்படும்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை அகில இந்திய அளவில் 7½ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு 2-ந்தேதி வெளியானது. மொத்தம் 77 ஆயிரத்து 634 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது 10 சதவீத தேர்ச்சி, முந்தைய தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
நன்றி : மாலை மலர்

1 comment:

  1. Sir please update the number of vacancy for each subject...and will be the minimum cut off to get job....

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links