tet books

time


follow me on fb

Saturday, September 28, 2013

TNTET 2013 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?

டி.இ.டி., தேர்வு: தர்மபுரி முதலிடம் ?
கேள்வித்தாள், லீக் சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 8 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டன.தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.இது குறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வு முடிவுகள், நவம்பர், முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இப்படி, இரு தேர்வுகளின் முடிவுகளை, விரைவாக வெளியிட்ட டி.ஆர்.பி., இந்த முறை, ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும், அமைதிகாத்து வருவது, தேர்வர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்ட தேர்வர்கள், முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இதன் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், டி.ஆர்.பி., காலம் தாழ்த்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்வு துவங்குவதற்கு முதல் நாள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், டி.இ.டி., கேள்வித்தாள், ‘லீக்’ ஆனதாக, தகவல்கள் வெளியாயின.இது தொடர்பாக, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, பின்னாளில், கைது எண்ணிக்கை, 15ஐ தாண்டியது.கைதான கும்பல்களிடம் இருந்து, 7.4 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, கேள்வித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எனினும், அதில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒன்று அல்ல என்றும், கைதான கும்பல் வைத்திருந்தது, போலியான கேள்வித்தாள் என்றும், போலீசார் தெரிவித்திருந்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரும்,`டி.இ.டி., தேர்வில், சிறு முறைகேடு கூட நடக்கவில்லை' என, தெரிவித்தார். இப்படியிருக்கும் போது, சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி அதிகம் என, தகவல் வெளியாகி இருப்பது, தேர்வர்கள் மத்தியில், புளியை கரைத்துள்ளது.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டம், அனைத்து வகையிலும், மிகவும் பின் தங்கிய மாவட்டம். வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்புகளை பெரிதும் நம்பி உள்ளனர்.

போட்டித் தேர்வுக்கு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், பொதுவாகவே, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், அதிகளவில் தேர்வு பெறுவர். அந்த வகையில், டி.இ.டி., தேர்விலும், அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இதில், தேவையில்லாமல், சந்தேகம் அடைய தேவையில்லை.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.


நாளிதழ் செய்தி...

tntet2013 exam results, tntet 2013 exam result 

RRC - அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் அப்ளிகேசன் - விண்ணப்பிக்க கடைசி நாள் அக் 21


 Notification பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

http://www.rrcchennai.org.in/admin/download/1370863980_RRC-AD-1.pdf

 விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.iroams.com/V1/applicationHome 

SBI திருவாங்கூர் - 10 ஆம் வகுப்பு தகுதிக்கு 1000 க்கும் மேலான பியூன் பணியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 03-10-2013

http://www.statebankoftravancore.com/recruitment.htm 

Monday, September 23, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ரத்து கோரிய வழக்கு தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பணி அல்ல. கல்வியின் தரமும் குழந்தைகளின் நலனும் முக்கியமானது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு 15.11.2011-ஆம் தேதி அறிவிப்பாணையை வெளியிட்டது.
இதை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்பட 94 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஏற்கெனவே தங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப்பணியிடத்தில் இவர்களை நியமிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வேதாரண்யத்தை சேர்ந்த சுகுணா உள்பட 130 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், 2010-ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்துக்காக 32 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. எனவே எங்களையும் தகுதித் தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வேலை வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமயாஜி, சான்றிதழ் சரி பார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே தகுதித் தேர்வு எழுதாமல் பணி கேட்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை என்று வாதாடினார்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் காசிநாத பாரதி உட்பட பலர் ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கை விசாரித்த பிறகு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் அளித்த உத்தரவு:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூட இந்த தகுதித் தேர்வை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவும் இல்லை; பணியில் சேரவும் இல்லை.
மனுதாரர்களைப் பொருத்தவரை சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவிக்கையின் பிரிவு 5-இல் கூறப்பட்டுள்ளபடி விதிவிலக்கு கோர முடியும்.
அவ்வாறு பணியில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். எனவே தகுதித் தேர்வு எழுதாமல், ஏற்கெனவே சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக மனுதாரர்களுக்கு பணி வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல் 20 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டியது இருக்கும்.
ஆசிரியர் பணிக்கு 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி தகுதித் தேர்வு நடந்தது. அதில், 6.56 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அதில் ஒரு சதவீதத்தினர் கூட தேர்ச்சிப் பெறவில்லை. 0.5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றனர்.
இதனால், ஆசிரியர் தகுதி துணை தேர்வு நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. துணைத் தேர்விலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு எழுதியதில், வெறும் 2.99 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி அல்ல. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும், பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கினால், கல்வியின் தரம் குறைந்து விடும். கல்வியின் தரம், குழந்தைகளின் நலன்தான் முக்கியம் எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Saturday, September 21, 2013

தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு.



சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளைபொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

Thursday, September 19, 2013

முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது?


முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளைவெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க, அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவைவெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல்வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது.

பதிவிறக்க தடங்கலுக்கு வருந்துகிறோம்!

இந்த வலைபூவில் வலது மற்றும் இடது புறம் உள்ள லிங்குகளில் இருந்து TRB, TET, TNPSC ஆகியவற்றிற்கு பயன்படும் மின்னியல் புத்தகங்களை (PDF BooKs ) கடந்த ஒரு மாதமாக யாராலும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

இதற்கான காரணம் Adfly எனப்படும் லிங்குகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டதுதான். சில நேரங்களில் இந்த லிங்குகள் (இணைப்புகள்) வேலை செய்தாலும் சில நேரங்களில் இவற்றால் சில பிரட்சனைகள் வருவதாக தெரிகிறது!

இந்த லிங்குகளை நீக்கி கூடிய விரைவில்! ( அடுத்தவாரம்) மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யக்கூடிய பணியினை செய்கிறோம்! அதுவரை இணைய வாசகர்களுக்கு நன்றிகளும். இதுவரை ஏற்பட்ட தடங்களுக்கு TNTET2012.blog சார்பாக வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!


தொடர்ந்து ஆதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்! நன்றி! 

TNPSC Group 1 - முதன்மை தேர்வுகள் நாள் ஒத்திவைப்பு!


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதிகளில் வேறு தேர்வு நடைபெற உள்ளதால், அக்டோபர் 25, 26 மற்றும் 27ம் தேதிக்கு முதன்மைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல்,இந்து சமய அறநிலையத்துறையின் 4-ம் நிலைசெயல் அலுவலர் பதவிக்கான தேர்வு அக்டோபர் 26-ல் இருந்து நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Wednesday, September 18, 2013

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது?ஐகோர்ட் கேள்வி !



முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்ய கூடாது என நீதிபதி கேட்ட கேள்விக்கு 40பிழையான கேள்விகளை தவிர்த்து மற்ற வினாக்களை மதிப்பிடலாம் என்று கூறிய யோசனையினை நீதிபதி மறுத்து தமிழக அரசுடன் ஆலோசித்து வரும் 24 ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்..

Sunday, September 15, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு


சென்னை
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.


தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.10 நாட்களுக்குள் வெளியீடு
இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணி முடிவடைந்தது.

மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்த குழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடும்.
அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலாளர் வசுந்தரா தேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Thursday, September 12, 2013

தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு



முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.
இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.

இதையடுத்து, தமிழ் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா என பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கேள்விகள் அனைத்தும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே உள்ளன என நிபுணர் குழு அறிக்கை அளித்ததால், புரியாத சில கேள்விகள் மட்டும் தேர்விலிருந்து நீக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள் உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது.
வழக்கு விசாரணையும் செப்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் 605 பேர் மட்டும் தமிழ்ப் பாட ஆசிரியர்கள். முதுநிலை தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மட்டுமே நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே, மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்குப் பிறகே தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.

Tuesday, September 10, 2013

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ் பாட முடிவை வெளியிட தடை



முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் பாடத்திற்கான முடிவை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை
21ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற்றது.இதில் தமிழ் தேர்வில்47கேள்விகள் தவறுதலாக இருந்ததாகவும்,இதனால் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழ் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்,இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வரும்16ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது

Sunday, September 8, 2013

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும்என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு.

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–நான் பி.எஸ்சி, பி.எட் முடித்துள்ளேன். கடந்த 2010–ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படிஎனது பெயரும் ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. 13.5.2010 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.அதன்பின்பு, எனக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை. காரணம் கேட்ட போது, 23.8.2010–க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள்கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எனக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு
இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே, எனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. எனவே, என்னை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதே போன்று உத்தமபாளையத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம், மதுரையை சேர்ந்த நிர்மலா ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் செய்யது இப்ராகிம் சார்பில் வக்கீல் சண்முகராஜாசேதுபதி, நிர்மலா சார்பில் வக்கீல்முத்தால்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

நிர்ப்பந்திக்கக்கூடாது
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–‘‘ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்பே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. எனவே, மனுதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் மனுதாரர்களை நியமிக்க வேண்டும்.’’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Thursday, September 5, 2013

இந்த முறை TNTET தேர்வில் தேர்ச்சி 53 ஆயிரம்!


ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில்77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.
மத்திய அரசின் இலவச கட்டாயகல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டுஇருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்வு நேரம் (1 ½ மணி) போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதம் ஏறத்தாழ 3 சதவீதமாக உயர்ந்தது. ஆசிரியர் பணி காலி இடங்கள் உள்ள நிலையில், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் கிட்டதட்ட 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரம்பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை 4 லட்சம் பேரும் ஆகமொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.
தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லதுதபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துஇருந்தது. ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில்8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது.
முந்தைய தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இரண்டிலும் சரி தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக கருத்து எழுந்தது. கேள்விகள், விடைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நிபுணர் குழுவின் முடிவின்படி உரிய மதிப்பெண் வழங்கப்படும்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை அகில இந்திய அளவில் 7½ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு 2-ந்தேதி வெளியானது. மொத்தம் 77 ஆயிரத்து 634 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது 10 சதவீத தேர்ச்சி, முந்தைய தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
நன்றி : மாலை மலர்

Wednesday, September 4, 2013

TNPSC Group 2 - Apply Online - for Degree candidates.


TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு - 1064 பணியிடங்கள்

வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உள்ளிட்ட 19 பதவிகளுக்கான 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

காலியிடங்கள் : 1064

கட்டணம் : ரூ.125

விண்ணப்பம் வெளியாகும் தேதி: 05.09.2013

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013 (பேங்க்/போஸ்ட் ஆபீஸ் மூலம்)

தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013, 10.00 AM to 1.00 AM 





NOTIFICATIONS - 2013
1
14/2013 05.09.2013
05.09.2013
04.10.2013
01.12.2013
Apply Online

other links