TNTET 2013 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காண இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வமற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.
மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகி இருந்தது.
மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும் என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளை யாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .
உறுதியான தேதி வரும் வரை ‘ ஓடு மீன் ஓட வருமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு‘ என்பது போல தகுதித் தேர்விற்கு தயாராகி வருவதுதான் உத்தமம்...
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வமற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.
மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகி இருந்தது.
மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும் என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளை யாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .
உறுதியான தேதி வரும் வரை ‘ ஓடு மீன் ஓட வருமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு‘ என்பது போல தகுதித் தேர்விற்கு தயாராகி வருவதுதான் உத்தமம்...
30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறுப்பு!
ReplyDeleteகடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அரசின் பல்@வறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கைகுறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்குஎடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி.,- டி.ஆர்.பி., மூலமும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசுப் பணிகள், தொய்வின்றி, முழுவீச்சில் நடப்பதற்கு வசதியாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில், முதல்வர் ஜெயலலிதா, தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், பட்டதாரிகள், மிகுந்த உற்சாகத்துடன், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று,அரசுப் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலமாக அரசு பணியாளர்களும், டி.ஆர்.பி., மூலமாக ஆசிரியர்களும், கணிசமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை முடிந்ததும்:
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ்பதவி ஏற்றதில் இருந்து, தேர்வு நடத்துவதிலும், முடிவை உடனுக்குடன் வெளியிட்டு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதிலும்,தேர்வாணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, குரூப்-2 பணியிடங்கள், 10 ஆயிரத்து 500, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 718 இடங்கள், 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு ஆண்டில், புதிய பணி நியமனம் செய்வதற்காக, துறை வாரியாக உள்ள காலி பணியிடங்கள் விவரங்களை, தேர்வாணையம் கேட்டு பெற்றுள்ளது.அதன்படி, 30 ஆயிரம் பேர் வரை, நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான அறிவிப்பு, பொங்கல் பண்டிகை முடிந்ததும் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது, இந்த ஆண்டு முழுவதும், எத்தனை வகையான தேர்வுகள் நடக்கும், ஒவ்வொரு தேர்விலும், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர், தேர்வு அறிவிப்பு, தேர்வு நடக்கும் தேதி, முடிவு அறிவிப்பு, பின் கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஆண்டு தேர்வுஅட்டவணையை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வெளியிடுவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தேர்வு அறிவிப்பில், குரூப்-4 நிலையிலான காலி இடங்கள், எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், குரூப்-2 தேர்விலும், அதிகளவில் தேர்வர்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி முதல், பட்டதாரிகள் வரை படித்தவர்கள், இப்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்து விடலாம். தொடர்ச்சியாக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடப்பதால், தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பை, பயிற்சி மைய நிர்வாகிகளும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
ReplyDeleteதமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி
ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும். இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொடங்கப்பட்டதால் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கில வழியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் கோவையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 24 வகையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும்குறைந்தது 10 துவக்கப் பள்ளிகளை ஆங்கில வழி இணைப்பு பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் ஜனவரி மாதத்திற்குள் மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலா 10 துவக்கப்பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்திற்கு 100 பள்ளிகள் என்றாலும் 32 மாவட்டத்திற்கும் 3,200 தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழி இணைப்புப் பள்ளிகளாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும். ‘ என்றனர்.
இணைப்பு பள்ளி என்றால் என்ன?
தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில், ஆங்கில வழியில் படிக்க விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அதே பள்ளியில் அவர்களுக்கு ஆங்கில வழியில் தனியாக வகுப்புகளை நடத்துவது இணைப்பு பள்ளி (பேரலல் இங்கிலீஷ்மீடியம்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினால், பின்னர் அதே வளாகத்தில் தனியாக கட்டிடமும் கட்டப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
ஆசிரியர் தகுதித் தேர்வினை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியார்டி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் - போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர்
ReplyDeleteமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல் தமிழக அரசு பல போராட்டங்களுக்கு பிறகும் இன்னும் வழங்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் பள்ளிகளை இழுத்து மூடக் கூடிய பெரிய அளவிலான போராட்டமாகத் தான் இருக்கும் என்று தூத்துக்குடியில் ஏராளமான பெண் ஆசிரியர்கள் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சிவன் ஆவேசமாக பேசினார்.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்குவழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் மவுனம் சாதித்து மெத்தனம் காட்டிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அரசின் இந்த செயல் தொடக்கநிலை ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழக இடைநிலைஆசிரியர்களுக்கு 1.6.2006 முதல் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளஅனைத்து சலுகைகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வினை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்புஅலுவலக சீனியார்டி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவன் பேசியதாவது;
மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த போராட்டத்திற்கு பிறகாவது உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் மிகப் பெரிய அளவில் மறியல் போராட்டமாகவோ அல்லது பள்ளிகளை இழுத்து மூடக் கூடிய போராட்டமாகவோ இருக்கும். இதற்கான முடிவு மாநில செயற்குழுவில் எடுக்கப்படும்.
பள்ளிக்கல்வியில் தனியார் பொது பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்றவற்றை ஆரம்பத்திலே நிறுத்தாவிட்டால் எல்லாம் தனியார் மயமாகி கல்வித்துறையை மத்திய அரசு நாசமாக்கிவிடும். இதற்காக வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி பள்ளிக்கல்வியில் தனியார் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்திடில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளன.
பொதுக்கல்வி முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அப்படியே அமல்படுத்த வேண்டும். பணியில் உள்ள ஒப்பந்த பாரா ஆசிரியர்களுக்கு தகுதியான பயிற்சி அளித்து முழு தகுதி பெற்ற ஆசிரியர்களாக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தி பணிக்கொடை வழங்க வேண்டும். தொடர்ந்து இந்த கோரிக்கை நிறைவேறும்வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஓயமாட்டார்கள். உறங்கமாட்டார்கள். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் நடக்கும். இவ்வாறு சிவன் பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர
அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் TET-ல் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்- - நாளிதழ் செய்தி
ReplyDeleteஅனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல் அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து
விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வேலையில்லாபட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனைக்கூட்டம் :
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஆலோசனைகூட்டம் தஞ்சையில்நேற்று நடைபெற்றது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு முன்னிலை வகித்தார். பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை செல்வமணி வரவேற்றார்.
தமிழாசிரியர் சங்க மாநில செயலாளர் சந்திரசேகரன், சங்கர், சுந்தர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். கூட்டத்தில் இளவரசன், சக்திவேல், அருண்குமார், அமிர்தலிங்கம், வசந்தி, சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
2010–ம் ஆண்டில் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு தற்போது பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் காலஅவகாசம் தந்துள்ளதை போல் இவர்களோடு சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்த 7 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,23–6–12 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ள 400 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் அதே நடைமுறையில் பணி வழங்கி பாலஅவகாசம் தந்து ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்.
23–8–10 தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இலவச கட்டாயகல்வி சட்ட சுற்றறிக்கையின்படி கீழ்கண்ட பிரிவுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு விதிவிலக்கு நடைமுறை அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு 23–8–2010–க்கு முன்னர் உள்ள பணியிடங்களை பழைய நடைமுறை விதிகளின்படியே நேரடி நியமனம் செய்து காலஅவகாசம் தந்து ஆசிரியர் தகுதி தேர்வை நடத்திட வேண்டும். அறிவிக்கப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமான அறிவிப்பு ஆணையாக வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 9–ந்தேதி முதல்–அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.
ReplyDeleteநேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.)பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில்
40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில்,நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்பமுடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்தசில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது