tet books

time


follow me on fb

Wednesday, January 30, 2013

ஒர் ஆண்டிற்கான முழு தேர்வு பட்டியல் - TNPSC வெளியீடு


2013 ஆம் ஆண்டு என்னென்ன தேர்வுகள் எப்போதெல்லாம் வரும் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


http://www.tnpsc.gov.in/docu/Annual%20planner_30_01_2013.pdf

Sunday, January 27, 2013

பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

அடிப்படை உரிமை

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை உரிமையாக உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதனை 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் எழுதினர். அதில் 19 ஆயிரத்து 261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
 
 

Saturday, January 19, 2013

some other Materials for TNPSC and TET exams

Bank Exam Study Materials Collection

Tnpsc Study Materials collection

Tntet Psychology Study Materials Collection

Tntet tamil study materials collection

Tntet English Study Materials Collection

Tntet Maths Study materials Collection

Tntet Science study Materials Collection

Tntet social science study materials collection

Tntet Tamil Study Materials

Monday, January 14, 2013

12,532 பட்டதாரி ஆசிரியர், 2,210 இ.நி. ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
 
 
நன்றி... tnkalvi.in 

Sunday, January 13, 2013

நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. முடிவு

குரூப்–1 தேர்வை தொடர்ந்து நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வையிடுவது, தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியில் இருப்பார்.ஆசிரியர்களின் ஊதியம், விடுமுறை, இடமாற்றம், வருங்கால வைப்புநிதி தொடர்பான பணிகளையும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் கவனிக்கிறார்கள். எனவே, பள்ளிக்கல்வித்துறையில் டி.இ.ஓ. பதவி, முக்கிய பதவியாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 69 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு டி.இ.ஓ. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

டி.இ.ஓ. பதவியை பொறுத்தமட்டில், 25 சதவீத காலி இடங்கள் நேரடி போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 75 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.நேரடி டி.இ.ஓ. காலி பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

டி.இ.ஓ. பதவி என்பது அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டடு) நிர்வாக பதவி ஆகும். டி.இ.ஓ.வாக பணியில் சேருவோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.) பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர், இயக்குனர் என்று படிப்படியாக பதவி உயர்வு பெறுகிறார்கள். மேலும், சிறப்பு பதவி உயர்வு மூலமாக வருவாய்த்துறை சாராத பணிப்பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம்.எழுத்துத்தேர்வில் குறிப்பிட்ட பாடத்தில் இருந்து 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 40 மார்க் என்று இருந்தது. இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்திருப்பதை போன்று நேரடி டி.இ.ஓ. தேர்விலும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, டி.இ.ஓ. தேர்வில் வெறுமனே விண்ணப்பதாரர்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டுமின்றி பொது அறிவு, ஆளுமைத்திறன், உளவியல், நிர்வாகத்திறமை போன்றவற்றை ஆராயும் வகையில் புதிய வினாக்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய தேர்வுமுறையில் பொதுஅறிவு தாளும் விருப்பப் பாட தாள் ஒன்றும் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.மேலும், குரூப்–1 தேர்வை போன்று நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்ணையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விரைவில் 12 டி.இ.ஓ. காலி பணி இடங்கள் நேரடித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.


நன்றி... கல்விச்சோலை 

Friday, January 11, 2013

தேசிய இளைஞர் தினம் இன்று - சனவரி 12




இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று 12.01.1863)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!விழுமின்! எழுமின்!! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்!!!


-சுவாமி விவேகானந்தர்
 

Thursday, January 10, 2013

கணினி படித்து - பி.எட் முடித்தவர்கள் கேட்கும் கேள்வி - விடையளிக்குமா அரசு!


கம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே?
விசித்திரப் போராட்டம்
இது கம்ப்யூட்டர் யுகம். ஆனால், கணினிக் கல்வி படித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது தமிழக அரசு.
இது பற்றிப் பேசிய கோவையைச் சேர்ந்த விஜய் ஆனந்த், ''கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியர் படிப்பான பி.எட் முடித்து விட்டு 1993 முதல் இன்று வரையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கான பணி இடங்களை அரசு இன்னமும் உருவாக்கவே இல்லை. அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் கம்யூட்டர்கள் தரப்பட்டு இருக்கின்றன. 68 லட்சம் மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்கள். இப்படி கணினி யுகத்துக்குள் அரசு புகும் வேளையிலும் கணினி படித்த எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது விசித்திரமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இப்போது, அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடத் தை நடத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும், அரசு எங்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளை, ஆசிரியர் தேர்வாணையம்தான் நடத்துகிறது. இதில் மேல்நிலை வகுப்பு ஆசிரியர் தேர்வுகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. கம்ப்யூட்டர் புரட்சி நடந்துவரும் சூழலிலும், எங்களைப் போன்ற ஆசிரியர்களைப் புறக் கணித்தால், கணினிக் கல்வி எப்படிச் சாத்தியம் ஆகும்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்ப்யூட்டரில் டிப்ளமோ படித்தவர்களை விதிவிலக்காக ஆசிரியர் வேலைக்குத் தேர்ந்து எடுத்தார்கள். பிறகு, அவர்களையே நியமனம் செய் வதற்காக தகுதித்தேர்வு நடத்தினார்கள். அந்தத் தேர்வில் தோல்வி அடைந்த 667 பேர் இப்போதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக மாதம் 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.
பள்ளிக் கல்விக்கு இந்த ஆண்டு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கி இருக்கிறது. அதோடு, பள்ளிகளில் கணினி வழிக்கல்வி என்றும் சொல்லி இருக்கிறார்கள். அரசுப் பள்ளி களில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கினால்தான் கணினி வழிக்கல்வி சாத்தியம். இதைக் கருத்தில் கொண்டு பணியிடங்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்'' என்றார்.
விலையில்லா கணினியைக் கற்றுத்தர, ஆசிரியர் தேவை இல்லை என்று நினைக்கிறதோ அரசு?

Wednesday, January 9, 2013

நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.


நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.)பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில்
40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில்,நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்பமுடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்தசில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது

நன்றி S.Murugavel M.sc.,B.Ed

ஆசிரியர் தகுதித் தேர்வு - பல மாநிலங்களில் நடைமுறை என்ன? அறிந்து கொள்ள...

TET பற்றி பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளை பல மாநிலங்கள் கையாண்டு வருகின்றன அவற்றின் அனைத்து சாரமும் ஒரே பக்கத்தில் கீழ்காணும் லிங்க் மூலம் அளிக்கப்படுகிறது..

மற்ற மாநிலங்களின் நடைமுறையை காண இங்கே கிளிக் செய்யவும்

இதனை அளித்தவர்

M.Vijayakumar
social worker
9943665291
Tharangambadi
Nagai District


மற்றும் சிறிய செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தியாவில் ஆந்திரபிரதேசம் (APTET), அசாம் (ATET), பீகார் (BTET), ஒடிசா (OTET), ஹிமாச்சல் பிரதேசம் (HPTET), ராஜஸ்தான் (RTET),உத்தரபிரதேசம் (UPTET) என இத்தனை மாநிலங்களில் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படியொரு இட ஒதுக்கீட்டையே மறுத்து தகுதிதேர்வும் ஆசிரியர் நியமனங்களும் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் சமீபத்தில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.குறிப்பாக எ.சதீஷ் எதிர் தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (W.P.No.31706/ 2012) மற்றும் சென்னையை சேர்ந்த ராஜீவ்காந்தி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (W.P.No. 32283/ 2012) ராஜீவ்காந்தி எதிர் கூடுதல் செயலர், பள்ளி கல்வித்துறை மற்றும் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம். மேலும் பல வழக்குகள் தகுதி தேர்வு சம்மந்தமாக விசாரணையில் உள்ளன. அந்த பொதுநல மனுவில், ஆந்திர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென கோரி இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கை கண்டித்தும் இடஒதுக்கீடு அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டு மென கலைஞர் மு. கருணாநிதி அறிக்கைவெளியிட்டார். அதேபோல திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். மேலும் இதற்காக தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என தொலைபேசியில் நம்மிடம் தெரிவித்தார். இறுதியாக, போட்டித்தேர்வுகள், தகுதி தேர்வு நடத்தும்போது ஐந்து நடைமுறைகளை கட்டாயம் பின் பற்றப்பட வேண்டும் என அழுத்தம் தருவோம். 1. தேர்வு நடத்தி முடித்தவுடன் சரியான (ஒரே) விடைகளை வெளி யிடப்பட வேண்டும். 2. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களின் அதாவதுவெற்றிப் பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் எவ்வித குளறுபடியும் இல்லாமல் இடஒதுக்கீடு அடிப்படையில் பதிவு எண், பெயர், சாதியை குறிப்பிட்டு தெளிவாக வெளியிட வேண்டும். 3. இறுதி பட்டியல் வெளியிட்டவுடன் எவ்வித மாறுதலையே மறுப்பட்டியலோ கட்டாயம் வெளியிடக்கூடாது. 4. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்கள் குறித்த விவரத்தை சாதி வாரியாக தெளிவாக வெளியிட வேண்டும். 5. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்களை எந்தெந்த சாதியினர் பணி நியமனம் செய்யப்படவில்லையோ மீண்டும் அந்த சாதியினரை கொண்டே நியமனம் செய்யப்படவேண்டும். இவைகளை செய்யவில்லை என்றால் தேர்வில் வெளிப்படையான தன்மைஇல்லை என்று அர்த்தமாகும். Thanks to நக்கீரன் செய்தி  

Tuesday, January 8, 2013

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் சனவரி 18

ரயில் டிக்கட் புக் செய்வது எப்படி?


IRCTC இல் வேகமாக டிக்கெட் புக் செய்வது எப்படி...?
How do we booking very fast in IRCTC....

உலகிலேயே மிகக் கடினமான விஷயம் எதுவென்று கேட்டால், இந்தியர்களின் பதில் IRCTC தளத்தில் ஒரே முறையில் டிக்கெட் புக் செய்வது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு கடினமான விஷயம் அது. அதில் டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு உதவும் வகையில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை இன்று காண்போம்.

இந்த பதிவில் 9.30 க்கு லாக்-இன் செய்யுங்கள் என்று ஆரம்பித்து இதர விசயங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை. மாறாக ஒரே ஒரு ட்ரிக் மட்டும் தான் சொல்லப் போகிறேன்.

லாக் இன் செய்து, ரயிலை கண்டுபிடித்து புக் செய்யும் பக்கத்தில் தான் நமக்கு ஆரம்பிக்கும் பிரச்சினை, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு புக் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் பெயரையும் கொடுத்து நாம் அவர்களின் வயது, பாலினம் என்று முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் முடிந்து விடும் வாய்ப்பு அதிகம்.


அதிலும் Payment பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் இன்னொரு முறை உங்களால் இந்த தகவலை வேகமாக நிரப்புவதற்குள் ரயில் அநேகமாக கிளம்பி இருக்கும். இதை தவிர்த்து புக் செய்யப்போகும் ஆறு பேருக்கும் ஒரே நொடியில் தகவல்களை நிரப்ப முடிந்தால், எப்படி இருக்கும்.

இந்த வசதியை இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப பதிவர் அமித் அகர்வால் கண்டுபிடித்துள்ளார். முதலில்http://ctrlq.org/irctc/ என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், இதை எங்கோ பார்த்தது போல உள்ளது என்று நினைக்கிறீர்களா, இது IRCTC தளத்தில் பயணிகள் தகவல் கொடுக்கும் பக்கத்தின் மாதிரி தான்.


Thursday, January 3, 2013

TET Exam Date June 3 - 2013 !

TNTET 2013 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காண இங்கே கிளிக் செய்யவும்

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வமற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.

மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகி இருந்தது.

மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில்  விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும் என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளை யாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .

உறுதியான தேதி வரும் வரை ‘ ஓடு மீன் ஓட வருமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு‘ என்பது போல தகுதித் தேர்விற்கு தயாராகி வருவதுதான் உத்தமம்... 

Tuesday, January 1, 2013

பணி நியமன ஆணை கிடைத்தும் பணி கிடைக்காத PG ஆசிரியர்கள்


நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் நீக்கம்: டி.ஆர்.பி.யிடம் முறையீடு- Dinamalar

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், பணி நியமன உத்தரவு பெற்ற முதுகலை ஆசிரியர்களில், பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
பள்ளி கல்வித்துறையில், 2,895 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் முதல்வர் பங்கேற்ற விழாவில், 2,308 பேருக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தகுதியற்ற பலர், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதாக வந்த தகவலை அடுத்து, பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தகுதியற்றவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கினர்.
எத்தனை பேர், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரத்தை, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கு, முன்கூட்டியே, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம், அழைப்பு விடுக்கப்பட்டது. 
அதன்படி, அவர்கள், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பலர் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றும், கலந்தாய்வுக்கு அழைப்பு வராத தேர்வர்கள், நேற்று டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள், டி.ஆர்.பி., அலுவலர்களை சந்தித்து, முறையிட்டனர். 
அலுவலர்கள், சரியான பதிலை அளிக்கவில்லை என்றும், எதையாவது கூறி மழுப்புகின்றனர் என்றும், தேர்வர்கள் புகார் கூறினர். தாவரவியல் பிரிவில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படாததால், அந்த பிரிவைச் சேர்ந்த தேர்வர்களும், அதிகளவில் வந்தனர்.
அவர்கள் கூறியதாவது: தாவரவியலில், 204 இடங்கள் உள்ளன. ஒரு இடம்கூட நிரப்பவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால், நிரப்பப்படவில்லை என்றும், வழக்கு முடிந்ததும் நிரப்பப்படும் என்றும் முதலில் டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளைச் சந்தித்து, வழக்கு குறித்த விவரங்களை கேட்டு, வழக்கு எண் விவரத்தை பதிவு செய்து, இணையதளத்தில் பார்த்தபோது, வழக்கு முடிந்துவிட்ட விவரம் தெரியவந்தது.
இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வழக்கு முடிந்துவிட்டது. ஆனால், இந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபின், இறுதிதேர்வு பட்டியலை வெளியிடலாம் என, கோர்ட் தெரிவித்துள்ளது. அதன்படி, சான்றிதழ்களை சரிபார்த்தபின், தேர்வுப் பட்டியலை வெளியிடுவோம்" என, தெரிவித்தனர்.
கலந்தாய்வுக்கு நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் கூறியதாவது: பல லட்சம் பேருக்கு தேர்வு நடத்தி, 6,000த்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது என்பது, சாதாரண வேலை கிடையாது. 
மாவட்டங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில், ஒரு சில இடங்களில், அதிகாரிகள் சரியாக கவனிக்காததால், சில தவறுகள் ஏற்பட்டன. இந்த தவறுகளை, நாங்கள் அப்படியே அனுமதிக்கவில்லை. தகுதியானதேர்வர்களின் பட்டியலை மட்டும் தான், கல்வித்துறையிடம் ஒப்படைத்தோம். அதில் இடம்பெற்றவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. 
காரணம் இல்லாமல், எந்த ஒரு தேர்வரையும், நாங்கள் நிராகரிக்கவில்லை. தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தேர்வர்களின் பெயர், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், இணையதளத்தில் வெளியிடுவோம். அதேபோல், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்&' மதிப்பெண்கள் விவரம், பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இணையதளத்தில் விரைவில் வெளியிடுவோம். 
தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு, தாவரவியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் தெரிவித்தனர். 

other links