கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் நேற்றைய தினம் 03-11-2012 அன்று வெளியிடப்பட்டன.
நேற்றைய தினம் TRB வெப்சைட் பிஸியால் யாராலும் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் போய் விட்டது.
ஆனால் முடிந்த வரை இன்றே அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளானது உடனடியாக தொடங்க உள்ளது.
Paper 2 : 8793 Candidates
நேற்றைய தினம் TRB வெப்சைட் பிஸியால் யாராலும் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் போய் விட்டது.
ஆனால் முடிந்த வரை இன்றே அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளானது உடனடியாக தொடங்க உள்ளது.
Paper 2 : 8793 Candidates
Paper 1 : 10187 Candidates
Certificate Verification done in : 32 Districts
Certificate Verification Date:
Paper 2 C.V 06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
Paper 1 C.V 08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m
எனவே இடைநிலை உதவி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 08 மற்றும் 09 ஆம் தேதியில் நடைபெற உள்ளது.
மேலும் அதற்கு முன்னதாகவே பட்டதாரி உதவி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 06 மற்றும் 07 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
எனவே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்ல கீழ்காணும் லிங்கில் உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மையம் மற்றும் தேதி பற்றிய தகவலை முதலில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
பின்னர் கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து
உங்களின் ID form ஐ தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..
தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நன்னடத்தை சான்றிதழை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நன்னடத்தை சான்றிதழை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மேற்கூரிய மூன்றினையும் தரவிறக்கம் செய்த பின் அவற்றை A4 தாளில் பிரிண்ட் செய்து அதில் கேட்கபட்ட விவரங்களை பூர்த்தி செய்து வைத்துக்கொள்ளவும்.
இடைநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு செல்ல இருப்பவர்கள் முன்னதாக தங்களின் Seniority ஐ உறுதி செய்ய தங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று இரண்டு வேலைவாய்ப்பு அட்டை நகல்களில் சான்றொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும். வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் போது கையோடு சாதிசான்றிதழ், இடைநிலைக்கல்வி சான்றிதழ் , மேனிலைக் கல்வி சான்றிதழ் , மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்ததற்கான அசல் சான்றிதழ்களை கையோடு தவறாமல் எடுத்துச் செல்லவும்.
தமிழ் வழியில் பயின்றோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக நீங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றொப்பத்தினை தனியாக நீங்கள் பயின்ற கல்வி நிறுவனங்ககளின் முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். ( இளங்கலை படிப்பை தமிழில் முடித்தவர்களுக்கே 20 சதவிகித இட ஒதுக்கீடு என்று கூறப்படுகிறது. எனினும் ஒரு முன் எச்சரிக்கைக்காக தமிழ் வழியில் பயின்றததற்கான சான்றிதழை பயின்ற கல்வி நிறுவனங்களில் பெற்று வைத்துக்கொள்வது சிறப்பு)
சுய விவர படிவத்தில் DTEd என்பதற்கு தனியாக இடம் எதுவும் அளிக்கப்படாததால் அதை தனியாக ஒரு பட்டியலை பென்சிலில் போட்டு பூர்த்தி செய்து கொள்ளவும்.. அல்லது அதற்கான தனி படிவம் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.
இவற்றோடு... சான்றிதழ் சரிபார்ப்பு குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை வரிசை மாறாமல் அடுக்கி அவற்றின் இரண்டு நகல்களில் ஏதேனும் ஒரு A பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்.
இவைகளை சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு உங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கொண்டு சென்று சரியான நேரத்தில் சமர்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன