tet books

time


follow me on fb

Tuesday, November 27, 2012

காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.

முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக எந்த தொகையை வந்து அடையும் என்பது இறுதி செய்யப்பட்ட காலிபணியிடங்களின் கணக்கெடுப்பிற்கு பிறகே தெரியவரும்.

இந்த நிலையில் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியவர்கள் கூறியதன் வாயிலாக இந்த மாதம் இறுதிக்குள் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போதுதான் காலிபணியிட விவரங்கள் திரட்டும் பணி நடைபெற்று வருவதால் ஒரு வாரம் காலதாமதமாகவே  இந்த பணிகள் நடைபெறும் என்பது ஊகிக்க முடிகிறது.

TET பற்றிய பலரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்பாட்டங்களை நடத்திவரும் வேலையில் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் பணியிடங்கள் அனைத்தும் சனவரி மாதத்தில் நிரப்பப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு முறையும் பணியிடங்களை நிரப்புவது சனவரி மாதத்தில் தான் நடைபெறுவதால் இந்த முறையும் சனவரி மாத்தில் பணியிடங்கள் நிரப்புதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links