tet books

time


follow me on fb

Sunday, November 18, 2012

போட்டித் தேர்வுகள் - வெற்றி பெறுவது எப்படி?

‘நம் எண்ணங்களே செயல்களை தீர்மானிப்பவை‘


  1. முதலில் நம் எண்ணங்களை ஏதாவது ஒன்றின் மீது செலுத்துவது முக்கியமான ஒன்று
  2. தேர்ந்தெடுத்த பாதையின் கடினத்தன்மையை உணர்வது இரண்டாவது விடயம்
  3. கடினத்தன்மைக்கு ஏற்ப உழைப்பது மூன்றாவது விடயம்.


இந்த மூன்று விடயங்களையும் நாம் செய்யும் போது கூட நமக்கு எழும் குழப்பங்களும் பிரட்சனைகளும் ஏராளம்.

அவற்றில் ஒன்றுதான் எதை படிப்பது என்பதும் எப்படி படிப்பது என்பதும்.

எதை படிக்க வேண்டும் என்பதற்கு பதில் சொல்வது போட்டித் தேர்வுகளின் முந்தைய வினாத்தாள்களாகதான் அமையும்.

பொதுவாக TNPSC போன்ற மாநில அளவிலான தேர்வுகளுக்கு தயாராவதற்கு பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த துணையும் தேவை கிடையாது. அதுவும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாட புத்தகங்களையும் புரிந்து படித்தாலே போதும் 75 சதவிகித மதிப்பெண்களை அழகாக பெற்று விடலாம்.

TET போன்ற தேர்வுகளும் TNPSC தேர்வுகளை ஒத்தவையே அவற்றிற்கும் பாட நூல்களை தவிர மற்ற சந்தையில் கிடைக்கும் குப்பைகளை தேடி கண்டுபிடித்து வாங்கி பயன்படுத்துவது நாமாகவே நம் திறமையை குறைவாக எடைபோட்டுக் கொள்வதற்கு சமம்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒழுங்காக படித்த ஒருவனால் ஒரே பாய்ச்சலில் TET அல்லது TNPSC ஐ சமாளித்து வெற்றி பெற்று விட முடியும் என்பதுதான் என் கருத்து.

அறிதல் - புரிதல் எனும் இரண்டு திறன்கள் மட்டுமே போட்டித் தேர்வுகளில் கையாளப்படும் விடயங்கள். எனவே ஒவ்வொரு பக்கத்தினையும் பாட புத்தகத்தினில் படிக்கும் பொழுது நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் அதனை எந்தெந்த வகைகளில் வினாக்களாக வினவுவார்கள் என்பதை நம் மனதினால் ஒரு நோட்டம் இட்டுக்கொண்டே படிக்க வேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கு

மத்திய அரசு பணிகளில் பலர் ஆர்வம் காட்டுவதே கிடையாது காரணம் ஆங்கிலத்தில் வினாக்கள் இருக்குமே என்ற அச்சம்தான்.

அப்படி அல்ல இங்கு நாம் தமிழில் படித்தவைகளைதான் அவர்கள் ஆங்கிலத்தில் வினவுகின்றனர்.

நான் இந்த 4 மாத காலங்களில் 8 மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி இருக்கிறேன். அனைத்திலும் நான் கற்றுக்கொண்ட ஒரே விடயம் புதிதாக ஒன்றும் படிக்க தேவை இல்லை நம் முந்தைய அறிவை சோதிக்கும் விதமாக மட்டுமே வினாக்கள் வினவப்படுகின்றன என்பதுதான்.

பொது அறிவுகள் ஒவ்வொரு வேளைகளுக்கும் ஏற்ப வினவப்படும் அதாவது வங்கி தேர்வு என்றால் அதற்கேற்ப வங்கி சம்மந்தமான  பொது அறிவு வினாக்கள் வினவப்படும்

அது போல குற்ற புலனாய்வு துறை என்றால் நம் நாடு மட்டும் அல்லாமல் உலக அளவிளான வெளியுறவு போர் பற்றிய பொது அறிவு தகவல்கள் வினவப்படும்.

ரயில்வே துறை என்றால் அது தொடர்பான தகவல்கள் வினவப்படும்.

ஆனால் 60 சதவிகித கேள்விகள் நாம் பள்ளியில் படித்த விடங்களில் இருந்தே கேள்விகளாக அமையும் என்பதுதான் இதில் நாம் மகிழ வேண்டிய ஒன்று.

அது மட்டும் அல்லாமல் Mathematical Aptitude மற்றும் English knowledge ஆகியவற்றினை சோதிக்க அதிகமான வினாக்கள் வினவப்படுவது வாடிக்கை.

இதற்காக தனியாக நாம் Attitude மற்றும் Apptitude புத்தகங்களை சந்தையில் இருந்து வாங்கி பயன்படுத்துவது நன்மையாக அமையும்.

ஏனென்றால் கொடுக்கப்படும் குறைந்த நேரத்தில் அனைத்து கடினத்தன்மை கொண்ட வினாக்களையும் தீர்த்துவிட நமக்கு தேவை பயிற்சி மட்டுமே.

கணிதத்தில் கூட வினவப்படும் வினாக்கள் 3 படிகளில் விடை காணும் படியாகதான் இருக்கும் ஆனால் அதற்காக நாம் குறைந்தது 5 மாதங்களாவது பயிற்சி எடுத்துகொண்டோமானால் எந்த தேர்வினையும் அழகாக சமாளித்து விடலாம்.

கடைசியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான்... நாம் நினைத்தால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும்.. நம் நிறை குறைகளை முதலில் உணர்ந்து கொண்டு ... நிறைகளை மெருகூட்டியும் குறைகளை களைந்தும் செயல்பட்டாலே போதும் எவ்விதமான போட்டித் தேர்வுகளையும் சமாளித்து வெற்றி பெற்றுவிட முடியும்..

Sunday, November 4, 2012

TET -சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்வோருக்கான குறிப்புகள்



கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் நேற்றைய தினம் 03-11-2012 அன்று வெளியிடப்பட்டன.

நேற்றைய தினம் TRB வெப்சைட் பிஸியால் யாராலும் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் போய் விட்டது.

ஆனால் முடிந்த வரை இன்றே அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.


சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளானது உடனடியாக தொடங்க உள்ளது.

 Paper 2 : 8793 Candidates
Paper 1 : 10187 Candidates
Certificate Verification done in : 32 Districts
Certificate Verification Date:
Paper 2 C.V 06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
Paper 1 C.V 08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m

எனவே இடைநிலை உதவி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 08 மற்றும் 09 ஆம் தேதியில் நடைபெற உள்ளது.

மேலும் அதற்கு முன்னதாகவே  பட்டதாரி உதவி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 06 மற்றும் 07 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.


எனவே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்ல கீழ்காணும் லிங்கில் உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மையம் மற்றும் தேதி பற்றிய தகவலை முதலில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


பின்னர் கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து






மேற்கூரிய மூன்றினையும் தரவிறக்கம் செய்த பின்    அவற்றை A4 தாளில் பிரிண்ட் செய்து அதில் கேட்கபட்ட விவரங்களை பூர்த்தி செய்து வைத்துக்கொள்ளவும்.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு செல்ல இருப்பவர்கள் முன்னதாக தங்களின் Seniority ஐ உறுதி செய்ய தங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று இரண்டு வேலைவாய்ப்பு அட்டை நகல்களில் சான்றொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும். வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் போது கையோடு சாதிசான்றிதழ், இடைநிலைக்கல்வி சான்றிதழ் , மேனிலைக் கல்வி சான்றிதழ் , மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்ததற்கான அசல் சான்றிதழ்களை கையோடு தவறாமல் எடுத்துச் செல்லவும்.

தமிழ் வழியில் பயின்றோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக நீங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றொப்பத்தினை தனியாக நீங்கள் பயின்ற கல்வி நிறுவனங்ககளின் முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம்  பெற்றுக் கொள்ள வேண்டும்.  ( இளங்கலை படிப்பை தமிழில் முடித்தவர்களுக்கே 20 சதவிகித இட ஒதுக்கீடு என்று கூறப்படுகிறது. எனினும் ஒரு முன் எச்சரிக்கைக்காக தமிழ் வழியில் பயின்றததற்கான சான்றிதழை பயின்ற கல்வி நிறுவனங்களில் பெற்று வைத்துக்கொள்வது சிறப்பு)


சுய விவர படிவத்தில் DTEd என்பதற்கு தனியாக இடம் எதுவும் அளிக்கப்படாததால் அதை தனியாக ஒரு பட்டியலை பென்சிலில் போட்டு பூர்த்தி செய்து கொள்ளவும்.. அல்லது அதற்கான தனி படிவம் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.

இவற்றோடு... சான்றிதழ் சரிபார்ப்பு குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை வரிசை மாறாமல் அடுக்கி அவற்றின் இரண்டு நகல்களில் ஏதேனும் ஒரு A பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்.

இவைகளை சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு உங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கொண்டு சென்று சரியான நேரத்தில் சமர்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Friday, November 2, 2012

இன்று October TNTET 2012 Result ...

துணை ஆசிரியர் தகுதித் தேர்வு - அக்டோபர் 2012 தேர்வு முடிவுகள் இன்று 02-11-2012 இரவு 11 மணிக்கு கீழ் காணும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.

தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் -  10394

பட்டதாரி ஆசிரியர்கள் -  8849

http://trb.tn.nic.in/

  

Sunday, October 28, 2012

சென்ற TNTET தேர்வில் தேர்ச்சி அடைந்த D.T.Ed ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது


டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். 

 

எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். 

 

சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

 

சென்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் உறுதி ஆகிவிட்டது.

 

இந்த அக்டோபர் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மீதமுள்ள 3500 பணி இடங்களை நிரப்புவதில் போட்டா போட்டி ஏற்படும் என்பது தெரிய வருகிறது.

 

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அக்டோபர் 14 அன்று நடந்த ஆசிரியர் மறு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது.

Tuesday, October 23, 2012

இரட்டிப்பான PG TRB பணியிடங்கள் - மகிழ்ச்சியில் தேர்வான ஆசிரியர்கள்

PG - TRB நடத்தப்பட்டு கடந்த சூலை 27 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன

முடிவுகளில் சாதி அடிப்படையிலான பணி நியமனம் மற்றும் விடைகள் மறு ஆய்வு என நீடித்த வழக்கால் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில்  பணி நியமன தடையினையும் மறு மதிப்பீடு மற்றும் பணி நியமனமும் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி கடந்த 20 நாட்களாக நீடித்த இந்த மறு மதிப்பீடு முடிவடைந்து இன்று அக்டோபர் 23 - 2012 அன்று இதற்காக தேர்வானவர்கள் பட்டியல் TRB ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சென்ற மாதம் வெளியான தேர்வானவர்கள் பட்டியலை விட இரு மடங்காக தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாலும்... சென்ற தேர்வானவர் பட்டியலை விட குறைந்த Cut - off கொண்டவர்கள் உள்ளே செல்ல வாய்ப்பு கிடைத்ததாலும் தற்போது புதிதாக தேர்வான ஆசிரியர்கள் மத்தியில் பலத்த மகிழ்ச்சியை இது ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அடுத்த மாதம் நடப்பதாக இருந்த PG - TRB தேர்வு நடத்தப்படாது என்றே தெரிகிறது.

காரணம் இரு மடங்கானசான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இந்த தேர்விலேயே நடத்தப்படுகின்றன...


அதாவது சென்ற முறை வெளியான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் தற்போது இருமடங்கான பெயர்கள் இடம் பெற்றுள்ளன.. இதனால் சென்ற முறை தேர்வாகாது இந்த முறை தேர்வானவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 2:1 என்ற விகிதத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதா? அல்லது மொத்தமாக 6282 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படுமா என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.

புதிதாக தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இந்த மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதியில் நடக்க உள்ளது.



இனி TET பிரட்சனையையும்... இளநிலை ஆசிரியர் பணியிடங்களை எப்படி நெளிவு சுளிவுகளுடன் TRB கையாளப்போகிறது என்பதையும் இனி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Saturday, October 20, 2012

TRB ஆல் வெளியிடப்பட்டுள்ள Oct - TET 2012 விடைகள்

உங்கள் அலைபேசியில் பெறுங்கள் உடனுக்குடன் tntet2012.blog ன் sms ஐ... SMS " ON tntet2012 " to 9870807070



இந்த வலைபூ வேலைவாய்ப்பிற்கான ஒரு ஒருங்கிணைப்பு தளமாக செயல்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள்...

உங்கள் அலைபேசியில் இந்த தளத்தின் புது புது வெளியீடுகளை உடனுக்குடன் குறுந்தகவலாக பெற மற்றும் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற தற்போது தொடங்கப்பட்டுள்ளதே GOOGLE SMS சேவை

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


உங்கள் மொபைலில் இருந்து " ON tntet2012 "  என்று 9870807070 என்ற எண்ணிற்கு ஒரு sms அனுப்புங்கள் பிறகு பெறுங்கள் உடனுக்குடனான குறுந்தகவல் சேவையை அதுவும் தினமும் இலவசமாக...

 தினமும் புதுப்புது செய்திகளும் உங்களுக்கு தேவையான தகவல்களும் இதில் இடம் பெறுவதாக நீங்கள் நினைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

மிகக் குறைந்த காலத்திலேயே 3 மாதத்திலேயே... 60 ஆயிரம் பார்வையாளர்களை வெற்றிகரமாக இந்த தளம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதுமை - எளிமை - தனித்துவம் என்பதே இந்த தளத்தின் குறிக்கோள்

இனி வரும் காலங்களில் நீங்கள் பெரிதும் கவலைப்படும் இந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யும் சேவை தொடங்கப்படும்


Sunday, October 14, 2012

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 18ஆயிரத்து 932 பணியிடங்களும் நிரப்பப்படுவதில் சிக்கல் - புதிய வியூகத்தினை கையாள போகும் TRB...


டைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

இதில் தற்போது நடந்து முடிந்த அக்டோபர் TET தேர்வினில் முதல் தாளில் வினாக்கள் மிகவும் எளிமையாக அமைந்ததால் குறைந்தது 50,000 பேர் வரை தேர்ச்சி அடைவார்கள் என்று தெரிகிறது.

 

ஆனால் இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி நியமனம் Seniority அடிப்படையில் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண்ணும் கருத்தில் கொள்ளப்படும் என்ற இருநிலையான அறிவிப்புகள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

 

இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் Seniority பிரட்சனை என்றால்... பட்டதாரி ஆசிரியர் தேர்வில் சமூக அறிவியல் பாடம் தவிர்த்த மற்ற பாடங்களில் வினவப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாகவே இருந்தன...

 

இது சென்ற சூலை மாதம் நடந்த TET தேர்வினை விட கடினமானது என்றே தேர்வர்களால் பாவிக்கப்பட்டது .

 

இந்த சூழலில் தேவையான 18,932 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் அளவு ஆசிரியர்கள் தேர்வாகாத சூழலில் 5 சதவிகித மதிப்பெண்ணை குறைத்து .. அதாவது தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5 சதவிகிதமாக குறைத்து மேற்கொள்ள TRB முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

 

சென்ற தேர்விலேயே 750 பேர்தான் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வானார்கள்... அதை விட கடினமான வினா வினவப்பட்ட இந்த தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை 2000 ஐ தாண்டாது என்றுதான் தோன்றுகிறது.

 

 

மீண்டும் மறுத் தேர்வு நடத்த TRB ஆல் முடியாது என்பதாலும் அறிவிக்கப்பட்ட பணி நியமனத்தினை வழங்க ஆவண உடனடியாக செய்ய வேண்டும் என்பதாலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் சில நெகிழ்வு சுளிவுகளை மேற்கொண்டாகும் என்பது இதன் மூலம் உறுதி...

 

 

எது எப்படியே... இந்த முறை அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியே ஆக வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வாணையத்தின் விதி... 

 

Friday, October 5, 2012

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு



கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்த்தி வழங்க வெளியான தகவலை தொடர்ந்து மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்துக்ளது.

இதன்படி, 



தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  ‌பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர்.

 இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...  

Friday, September 21, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - அக்டோபர் 14 க்கு மாற்றம்

அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி.மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐகோர்டில் சூளையைச் சேர்ந்த யாமினிதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர்தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைதமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். கடந்த ஜூலை மாதத்துக்கு பின்என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்.படித்து காத்திருக்கிறோம். எனவேஎங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்.படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகிசில வாதங்களை முன் வைத்தார்.

அவை வருமாறு: இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்.,முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,இதுவரை விண்ணப்பிக்காதவர்களும்புதிதாக பி.எட்.படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வைஅக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாகஅமைச்சர் தலைமையில்நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்திபரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்துநீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்னையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்துவிளம்பரங்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் "ஹால் டிக்கெட்'டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்துடி.இ.டி.தேர்வுக்குபுதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால்அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி.மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரைஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில்விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி.தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள்மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ளதேர்வு மையத்தில்எவ்வித மாற்றமும் கிடையாது. புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்துசம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாகடி.ஆர்.பி.அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள்பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்துநகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை,தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின்விண்ணப்பத்தில்எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள்டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி.இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டைபதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி.தெரிவித்துள்ளது. பழைய தேர்வர்களுக்குஏற்கனவே டி.ஆர்.பி.இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்குஅக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
நன்றி... கல்வி சோலை வெப்சைட்... http://www.kalvisolai.in/2012/09/14.html 

other links